Load Image
Advertisement

தேனீயும் நானும்!தேனீக்கள் மூலம் வருவாயை இரட்டிப்பாக்க திட்டம்..ஹனிசிட்டியாக தடம்பதி்க்கபோகிறது புதுச்சேரி

 தேனீயும் நானும்!தேனீக்கள் மூலம் வருவாயை இரட்டிப்பாக்க திட்டம்..ஹனிசிட்டியாக தடம்பதி்க்கபோகிறது புதுச்சேரி
ADVERTISEMENT

--நமது சிறப்பு நிருபர்-

கிராமப்புற பெண்களின் வருவாயை இரட்டிப்பு ஆக்குவதற்காக 'தேனீயும் நானும்' திட்டம் விரைவில் புதுச்சேரியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில், ஆண் வாக்காளர்களை காட்டிலும், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கையே அதிகம். கிராம பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வரும் பெண்களின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் முயற்சியில்,'தேனீயும் நானும்' என்ற பெயரில் புதிய திட்டம், புதுச்சேரி அரசு வேளாண் துறையின் தோட்டக்கலை மூலமாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.
சுய உதவிக் குழுக்கள்
இத்திட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டதும், அவர்களுக்கு தேனீ வளர்ப்பு நிபுணர்கள் மூலம், பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பின்னர் அவர்களுக்கு தேனீ வளர்ப்பிற்கான உபகரணங்கள் கொடுக்கப்பட உள்ளது.
மலை, கொம்பு, இத்தாலி என பல வகை தேனீக்கள் இருந்தாலும், இந்திய தேனீ வகைதான் இந்த தொழிலுக்கு ஏற்றதாக, அதாவது பெட்டிகளில் வளர்க்க தகுந்தவையாக உள்ளன.இந்திய ராணி தேனீ அடங்கிய தேனீ வளர்ப்பு பெட்டி தான் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட உள்ளன.
தேன் சேகரிப்பு
கதர் கிராம தொழில் வாரியம், தேனீ கொள்முதல் செய்ய கம்பெனியை அடையாளம் கண்டு, புரிந்துணர்வு ஒப்பந்தம் புரிய துணை நிற்கும். மகளிர் சுய உதவிக் குழுக்கள் விரும்பினால் நேரடியாகவும் விற்பனை செய்து கொள்ளலாம். ஒவ்வொரு மகளிர் சுய உதவி குழுக்களிலும் ஒரு ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்படுவார். இவர் அந்த குழு உறுப்பினர்கள் தரும் தேன் பற்றிய பதிவு ஆவணத்தையும் பராமரிப்பார். ஒவ்வொரு உறுப்பினரும் தேனீ மூலம் ஈட்டிய தொகையும் அதில் அடங்கும். அந்த பணம் நேரடியாக அவர்களுடைய வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டு விடும்.
கடன் வசதி எப்படி
மகளிர் சுய உதவி குழுக்கள் தேனீ வளர்பிற்கான தொகை கூட்டு கடன் பொறுப்பு திட்டத்தின் கீழ், கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறலாம்.
அதில் 40 சதவீத தொகையை தோட்டக்கலை துறை வங்கிகளுக்கு செலுத்தி விடும்.
மீதமுள்ள கடன் தொகையை முதல் ஆண்டில் செலுத்த தேவையில்லை.
இரண்டாம் ஆண்டில் இருந்து தவணை முறையில் செலுத்தும் வசதி உள்ளது.
சுத்தமான தேன் மருத்துவ குணம் வாய்ந்தது.
டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள் முதல் பெட்டிக்கடை வரை தேன் கிடைத்தாலும், கலப்படம் இல்லாத தேன் என்றால் அதற்கு தனி தேவை உண்டு.
மலை, மரம், பாறை, கட்டடம் என எட்டாத உயரத்தில் அடைகட்டும் தேனீக்களை, வீட்டிலேயே வளர்த்து தேன் சேகரித்து விற்கலாம். அதன் மூலம் நல்ல
லாபம் பார்க்கலாம் என்பதால் தேசிய அளவில் முன்னணி கம்பெனிகள்புதுச்சேரியில் கொள்முதல் செய்ய போட்டிபோடும் என எதிர்பார்க்கப்
படுகிறது.
இத்திட்டத்தை விரைவில் அறிமுகம் செய்ய வேளாண் துறையின் தோட்டக்கலை துறை முழு வீச்சில் ஏற்பாடுகள் முடுக்கி விட்டுள்ளது.

பூ பூத்தா தேன் கூடும்
தேன் உற்பத்தியைப் பொறுத்தவரை, பூக்கள் அதிகமாக பூக்கும்காலத்தில் வாரம் 4 கிலோவுக்கு குறையாமலும், சாதாரண சமயங்களில் ஒரு கிலோ அளவிலும் இருக்கும். பிப்ரவரி முதல் மே மாதம் தொடக்கம் வரை அதிகமாக தேன் கிடைக்கும். பிப்ரவரி, மார்ச் இரண்டு மாதங்களில் மட்டும் ஒரு பெட்டியில் இருந்து 2 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதற்கான சூழல் புதுச்சேரி மாநிலத்தில் இயற்கையாக அமைய பெற்றுள்ளது. இம்மாதங்களில்புதுச்சேரி கிராமப்புறங்களில் பூ பூத்து குலுங்கும் என்பதால், தேனீ வளர்ப்பில் இத்திட்டம் ஒரு மைல் கல்லாக அமையும் என்கின்றனர் வேளாண் துறை வல்லுநர்கள்.

தடை வருமா
பூக்கள் அதிகமாக உள்ள இடங்களில் தேனீ கூடுகளை உருவாக்கும். ஒவ்வொரு பூவாகச் சென்று தேன் சேகரிக்கும்போது 'அயல் மகரந்த சேர்க்கை' நடைபெறும். இதன் மூலம் விவசாயமும், தாவர இனப் பெருக்கம்செழிக்கும். ராசாயனஉரங்கள், பூச்சிக்கொல்லிகளால் தேனீக்கள் தற்போது குறைந்து வருகிறது. எனவே ரசாயன உரங்கள், பூச்சி கொல்லிகளுக்கு தடை விதித்தால் தேனீ வளர்ப்பிற்கு சாதகமான சூழல் அதிகரிக்கும்


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement