Load Image
Advertisement

சேவையை விரிவாக்கும் திட்டம் உள்ளது!

Tamil News
ADVERTISEMENT
சேவையை விரிவாக்கும் திட்டம் உள்ளது!


வீடுகளில் பூஜை நடத்தி தரும் புரோகிதர் மற்றும் உணவு சமைத்து தருபவர்களை, இணையம் வழியே, 'புக்' செய்யும் வகையில், purohitsandcooks.com இணையதளத்தை நிர்வகித்து வரும், பெங்களூரை சேர்ந்த, தமிழ்ப் பெண், சுஜாதா அனந்த்:விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரத்தை சேர்ந்தவள் நான். ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்தில் படித்து வளர்ந்தேன். எம்.சி.ஏ., முடித்து, சென்னையில், 'சாப்ட்வேர் இன்ஜினியர்' ஆகப் பணிபுரிந்தேன்.திருமணத்துக்குப் பின், பெங்களூருக்கு குடிபெயர்ந்தேன். 13 ஆண்டு பணிபுரிந்த பின், வீட்டுப் பொறுப்புகளுக்காக வேலையை விட்டேன். சாப்ட்வேர் துறை அனுபவத்தை வைத்து, ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம், எனக்குள்ளேயே கிடந்தது.அப்போது தான், நான், 'இன்போசிஸ்' நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, பணியாளர்கள் தங்கள் எண்ணங்களை, தேவைகளை தெரிவிக்கும் அறிவிப்புப் பலகையில், வீட்டில் பூஜை செய்வதற்கு நம்பிக்கையான நபர் தேவை என, பலரும் தொடர்ந்து பதிவிட்டது, நினைவுக்கு
வந்தது.அதையே, 'ஆன்லைன் சர்வீஸ்' ஆக செய்ய முடிவெடுத்து, கணவருடன் கலந்தாலோசித்தேன். 2015-ல், இணைய தளத்தைத் துவக்கினேன். ஆரம்பத்தில் கட்டணம் ஏதுமின்றி, இலவச சேவையாகவே செய்து வந்தேன். முழு நேரமாக இந்த பணியை செய்ய ஆரம்பித்தபோது, நிர்வாக செலவுகளைக் கணக்கிட்டு, மிகச் சிறிய தொகையைக் கட்டணமாக வசூல் செய்ய ஆரம்பித்தேன்; என்றாலும், புரோகிதர்கள் மற்றும் சமையல் கலைஞர்களிடம், கட்டணம் வசூலிப்பதில்லை.என் மூலம், பல புரோகிதர்களுக்கும், சமையல் கலைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைத்து வருவதில், மிகவும் மகிழ்ச்சி. குறிப்பாக, சமையல் பணியில் பெண்கள் பலர், வாய்ப்பு பெறுகின்றனர்.அடுத்ததாக, 'ரெசிப்பிகள், கேட்டரிங் சர்வீஸ்' மற்றும் ஹிந்து பண்டிகைகளைக் கொண்டாடும் முறை பற்றிய விளக்க உரை, ஆன்மிக நிகழ்ச்சிகள் குறித்த விபரங்கள், சமஸ்கிருத வகுப்புகள் நடக்கும் இடங்கள் என, ஹிந்து மத சம்பிரதாயங்கள் சம்பந்தமான தகவல் தொகுப்புகளை பதிவிடுகிறேன்.
மற்ற மாநிலங்களுக்கும், எங்கள் சேவையை விரிவாக்கும் வண்ணம் திட்டமிடுவதும், அதைச் செயல்படுத்துவதுமே அடுத்த இலக்கு.


வாசகர் கருத்து (3)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement