Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'எது எப்படி இருந்தாலும், தமிழகத்தில், காங்., ஆட்சி மலரப் போவதில்லை... இதுக்கு ஏன், இவ்வளவு அலப்பரை...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், தமிழக காங்., தலைவர், திருநாவுக்கரசர் பேட்டி: மாயாவதியும், அகிலேஷ் யாதவும் அமைத்திருப்பது, பா.ஜ.,வுக்கு எதிரான கூட்டணி. தமிழகத்தில், கூட்டணிக்கான கதவுகள் திறந்திருப்பதாக, மோடி கூறினார். அந்தக் கதவுக்குள் நுழைய, யாரும் தயாராக இல்லை. பா.ஜ., கூட்டணியிலிருந்து, பல கட்சிகள் வெளியேறி வருவதைத் தான் பார்க்க முடிகிறது.

த.மா.கா., துணை தலைவர், கோவை தங்கம் பேட்டி: ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கட்சிகள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும், வேட்பாளர்களின் வேட்பு மனு, தள்ளுபடி செய்யப்பட வேண்டும். இந்தியாவில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை, உறுதி செய்ய வேண்டும். ஜனநாயகக் கடமையை ஆற்றத் தவறினால், ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற முடியாது என்ற நிலையை உருவாக்க, தேர்தல் கமிஷனும், மத்திய அரசும் முழுமனதோடு செயலாற்ற வேண்டும்.

தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர், ராஜு பேட்டி: தி.மு.க., என்றும், நல்ல திட்டங்களை செயல்படுத்தியது இல்லை. அரசின், 'கஜா' புயல் நிவாரண பணிகளை, எல்லாரும் பாராட்டும்போது, ஸ்டாலின் குறை கூறினார். குறை சொல்லியே பெயர் வாங்க வேண்டும் என்ற பட்டியலில், ஸ்டாலின் முதல் இடத்தில் உள்ளார்.

வி.சி., தலைவர், திருமாவளவன் பேட்டி: தி.மு.க., கூட்டணியில், எந்த ஊசலாட்டமும் இல்லை; நாங்கள் தெளிவாக உள்ளோம். பா.ஜ.,வும், அ.தி.மு.க.,வும், 'மெகா' கூட்டணி அமைக்கப் போவதாகக் கூறி வருகின்றன. பா.ஜ.,வோடு இந்த தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி வைக்காது. தேர்தலுக்குப் பின் வேண்டுமானால், உறவு ஏற்படலாம். தேசிய அளவிலும் சரி, மாநில அளவிலும் சரி, மூன்றாவது அணி வெற்றி பெற்றதில்லை. தி.மு.க.,வுக்கு எதிரணியாக, அ.தி.மு.க., தான் இருக்கும்.


காவிரி நீர்ப் பாசன விவசாயிகள் நலச் சங்க தலைவர், ராஜாராம் பேட்டி: கர்நாடக மாநிலத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே, கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் உள்ளன. அதில், கபினி அணையில் இருந்து, மேட்டூர் அணைக்கு தண்ணீர் வருகிறது. இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்டினால், மேட்டூர் அணைக்கு, ஒரு சொட்டு தண்ணீர் கூட வராது. எனவே, தமிழக எல்லையான, ராசி மணலில் அணை கட்டி, மின்சாரம் எடுக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement