Advertisement

மூத்த தலைவர்களை கொல்ல சதி : உ.பி.,யில் பயங்கரவாதி கைது

புதுடில்லி: டில்லி மற்றும் வட மாநிலங்களின் பல பகுதிகளை வெடிகுண்டுகள் வைத்து தகர்க்கவும், அரசியல் தலைவர்களை மனித வெடிகுண்டு வைத்து கொல்லவும் திட்டமிட்ட, ஐ.எஸ்., ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவனை, தேசிய புலனாய்வுப் படையினர், கைது செய்தனர்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்புடைய ஹர்கத் உல் ஹர்ப் இ இஸ்லாம் என்ற அமைப்பைச் சேர்ந்த சிலர், வட மாநிலங்களில் பதுங்கி இருப்பதாக, தேசிய புலனாய்வு நிறுவனத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, டில்லி, உத்தர பிரதேசம் உட்பட பல மாநிலங்களில், புலனாய்வுப் படையினர், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இது தொடர்பாக, 11 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களிடம் இருந்து, சக்தி வாய்ந்த வெடி பொருட்கள், 'ராக்கெட் லாஞ்சர்கள், மொபைல் சிம் கார்டு, டைமர்'கள், மனித வெடிகுண்டு கவசங்கள் கைப்பற்றப்பட்டன.இந்நிலையில், உ.பி.,யின், மீரட், ஹபூர் மற்றும் காஜியாபாத் ஆகிய மாவட்டங்களில், தேசிய புலனாய்வு படையினர் நேற்று முன்தினம் இரவு, அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, முகமது அப்சர், 24, என்ற பயங்கரவாதி, ஹபூர் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டான். இவன், 2018 மே முதல் ஆகஸ்ட் வரை, ஜம்மு - காஷ்மீரில், பல இடங்களுக்கு சென்று வந்தது, விசாரணையில் தெரியவந்துள்ளது.இவனும், இப்தேகர் சாகிப் என்ற இவனது கூட்டாளியும் சேர்ந்து, டில்லி உட்பட வட மாநிலங்களின் பல இடங்களை, வெடிகுண்டு வைத்து தகர்க்கவும், பல மூத்த அரசியல் தலைவர்கள் மீது, மனித வெடிகுண்டு தாக்கு தல் நடத்தி படுகொலை செய்யவும் திட்டமிட்டது தெரியவந்துள்ளது.அப்சரை, 6 நாள் காவலில் எடுத்து விசாரிக்க, தேசிய புலனாய்வு போலீசாருக்கு, டில்லி நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (8)

  • blocked user - blocked,மயோட்

    இது போன்ற ஜீவராசிகளை ........

  • ஆப்பு -

    பாத்துங்க...சீனாவுலேருந்து வந்த பொம்மை துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்ச்சர்களாக இருக்கப் போவுது.

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

    ஆர் எஸ் எஸ் ஆள்கள் தான் இந்த மாதிரி எங்க பேருல ஒளிஞ்சிருந்து அநியாயம் பண்றாங்க என்னப்பா இன்னும் யாரும் வரலையா?

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    விசாரணை முடிவில் கடலில் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும்...

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    இவன், 2018 மே முதல் ஆகஸ்ட் வரை, ஜம்மு - காஷ்மீரில், பல இடங்களுக்கு சென்று வந்தது, விசாரணையில் தெரியவந்துள்ளது... ஆச்சர்யமாக இருக்கிறதே... இதற்க்கு சாட்சிகளை உடன் வைத்து கொண்டே அலைந்தானா

Advertisement