Advertisement

அதிக கட்டணம் : ஆம்னி பஸ்களுக்கு அபராதம்

சென்னை: பொங்கலையொட்டி அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரவித்தார்


சென்னை கோயம்பேட்டிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பொங்கலையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பு பஸ்கள் இயக்கம் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோயம்பேட்டில் ஆய்வு மேற்கொண்டார்.


‛சென்னையிலிருந்து 2480 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுவரை 1,45,000க்கும் அதிகமான பயணிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பயணித்துள்ளனர். மக்கள் சிரமமின்றி சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.

ஆம்னி பஸ்கள் சிறை :



அதிக கட்டணம் வசூலித்தது தொடர்பாக, 11 ஆம்னி பஸ்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. அவைகளிடமிருந்து ரூ. 18 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (8)

  • Soundar -

    வெறும் சம்பிரதாய raid....அதிக கட்டணங்களை திரும்பி கொடுத்தார்களா?

  • VISWA - Thanjavur,இந்தியா

    ரயில் கட்டணம் பிரீமியம் தக்கல் இதை விட அதிகமா இருக்கே

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    சும்மா ஒன்றோ இரண்டோ பிடிப்பீர்கள்... அப்பறம் கண்டும் காணாது கமிஷன் வாங்கிக்கொண்டு இருந்து விடுவீர்கள்

  • Bhaskaran - Chennai,இந்தியா

    சும்மா கண்துடைப்பு ,பண்டிகை நாட்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை கண்டும் காணாதது போல் இருப்பார்கள் அமைச்சரும் அதிகாரிகளும் ஏனெனில் பாதி பேருந்துகள் அரசியல்வாதிகளுடையது மீதிப்பேருந்தில் இருந்து வரவேண்டிய கப்பம் மிகச்சரியாக வந்து விடுகிறது ,எனவே எந்த பயணி எக்கேடுகெட்டால் இவர்களுக்கு என்ன கவலை

  • thiru - Chennai,இந்தியா

    அரசியல் வியாதிகளுக்கு சொந்தமான ஆம்னி பேருந்துகளை தவிர்த்து மற்றவர் யாரும் கட்டணம் உயர்த்தினால் அபராதம்..

  • Pandi - Katumandu,நேபாளம்

    APARATHAM. IO IOOO NEENGA SOLLIKITEA IRUPEENGA, OMNI POOETEA IRUKUM. NALLA GAME. UNGALUKULEA ATHAAVUTHU KITHAVATHU IRUKUMOONU ANAKU ORU DOUBT VAATHIYAREA

  • ஆப்பு -

    அல்ட்ரா டீலக்ஸ் , அல்ட்ரா லக்சுரின்னு ஓட்டப்படும் தமிழக அரசின் காயலாங்கடை பஸ்களுக்கு ஆம்னி பஸ்களின் தரமும் கட்டணமும்

  • Balaji - Bangalore,இந்தியா

    இது வரை எத்துனை ஆம்னி பஸ் அபராதம் விதித்தார்கள்? வெறும் அறிக்கை.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement