Advertisement

இனி குறைந்த கட்டணத்திலேயே விர்ர்...

புதுடில்லி : விமான பயணத்தை அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் மற்றும் வாடிக்ககையாளர்களை அதிகளவில் கவரும் பொருட்டு, இந்திய மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு விமான பயணகட்டணத்தை அதிரடியாக குறைத்துள்ளன.


இண்டிகோ நிறுவனம், சிறப்பு சலுகை என்ற பெயரில், உள்நாட்டு விமான சேவைகளை ரூ. 899 லிருந்தும், சர்வதேச நாடுகளுடனான சேவைகளை ரூ. 3,399 லிருந்தும் துவங்குவதாக அறிவித்துள்ளன.


கத்தார் ஏர்வேஸ் நிறுவனம், இந்தியர்களை கவரும் பொருட்டு, எகனாமி வகுப்புகளில் 35 சதவீதம் வரையும், பிசினஸ் வகுப்பு பயணத்திற்கு 25 சதவீதம் வரையும் பயண கட்டண குறைப்பு செய்ய முன்வந்துள்ளது.


அபுதாபியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் எதியாத் ஏர்வேஸ் நிறுவனம், இந்தியாவில் இருந்து அபுதாபி, அமெரிக்கா, ஐரோப்பா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்ரிக்கா செல்லும் இந்திய பயணிகளுக்கு எகனாமி வகுப்புகளில் 35 சதவீதம் வரையும், பிசினஸ் வகுப்பு பயணத்திற்கு 25 சதவீதம் வரையும் பயண கட்டண குறைப்பை அறிவித்துள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (17)

 • Saleem - Dubai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இண்டிகோ நிறுவனம் இந்திய ருபாய் வாங்க மறுக்கும் நிறுவனம். என் கசப்பான அனுபவத்தை பகிர்கிறேன்... இது மேலும் சிலருக்கும் நேர்ந்திருக்கலாம்.... நான் சென்னையிலிந்து துபாய் செல்லும் போது உணவுக்கட்டணம் இந்தியா ரூபாய் கொடுத்தேன் அதை அவர்கள் வாங்க மறுக்கிறார்கள் ... துபாய் திர்ஹம் கேட்கிறாரகள் ... இங்கு இருந்து போகும் போது திர்ஹம் கேட்பது ஏற்புடையது இல்லை.. இந்திய நிறுவனம், இந்திய ரூபாய் மறுப்பது நமது பணத்தை அவமதிப்பு செய்வதாக இருக்கிறது... இது மிகவும் கண்டிக்க தக்கதும் கூட..

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  நஷ்டத்தில் இயங்கும் நமது இந்தியன் ஏர் வெய்சில் கட்டண குறைவிற்கு கனவு கூட காண முடியாது

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  இது செய்தி அல்ல. அந்த விமான சர்வீஸ் கம்பெனிகளின் விளம்பரம். டிக்கெட் புக் பண்ண ஆரம்பிக்கும் போது ரூ.1090 என்று காட்டும். பேமென்ட் பேஜ் வரும்போது ரூ.1600 என்று வருகிறது. இது டுபாக்கூர்/ பொய் / புருடா.

 • jagan - Chennai,இந்தியா

  எங்க சீட்டு காலியா இருக்கோ அங்கே தான் டிஸ்கவுண்ட்.....இந்தியர்கள் எல்லாம் இலவசமா கிடைக்கனுமு எதிர்பார்க்கும் கூட்டம்

 • Dr.Arun - Madurai,இந்தியா

  ஆமா. இதெல்லாம் ஒரு ஏமாற்று வேலை. இப்பொழுது அந்த இரண்டு வெளிநாட்டு விமான நிறுவனத்தின் வெப் சைட்டில் பயணக்கட்டணத்தை பார்த்தேன். எதுவம் குறைத்ததாகத் தெரியவில்லை. குறைந்த கட்டணத்தில் வெளிநாட்டுக்கு பயணிக்க ஏர் இந்தியா டிக்கட் பரவாயில்லை.

 • suresh - chennai,இந்தியா

  இண்டிகோ சொல்லும் இந்த விலைகுறைப்பு 9.1.2019 முதல் 13.1.2019 க்குள் முன்பதிவு செய்ய வேண்டும்,,,பயண தேதி 24.1.2019 முதல் 15.4.2019 க்குள் இருக்க வேண்டும்,,,,இது அந்த விமான இணையதளம் சொல்லும் விதிமுறை,,,அதே விதிமுறைக்கு உட்பட்டு நீங்கள் முன்பதிவு செய்தால்,,,விமான டிக்கெட் விலை,,,இந்த செய்தியில் சொல்லப்பட்டு இருப்பது போல் உள்ளதா என வாசகர்களே சோதனை செய்து கொள்ளுங்கள்...நான் பார்த்த போது அப்படி ஒன்றும் குறைப்பு இல்லை,,,எப்பொழுதும் போன்ற வழக்கமான விலையில் தான் உள்ளது.

 • pattikkaattaan - Muscat,ஓமன்

  இது எல்லாம் ஏமாற்று வேலை ... எந்த வழித்தடத்தில் எப்போது அதிக பயணிகள் பறக்கிறார்கள் என்று விமான நிறுவனங்களுக்கு தெரியும் ... அந்த சமயத்தில் கட்டணத்தை ஏற்றி கொள்ளை அடிக்கிறார்கள் .. குறிப்பிட்ட தேதியில் டிக்கெட் என்ன விலை என்று நிறைய பேர் ஆன்லைனில் செக் செய்தாலே கட்டணத்தை உடனடியாக உயர்த்திவிடுகிறர்கள்

  • jagan - Chennai,இந்தியா

   "கட்டணத்தை ஏற்றி கொள்ளை அடிக்கிறார்கள்" ஹா ஹா ஹா , அப்போ நடந்து போ

 • Nalam Virumbi - Chennai,இந்தியா

  இதெல்லாம் ஏமாற்று வேலை.

  • senba, koவை - ,

   இதெல்லாம் ஏமாற்று வேலை.

  • senba, koவை - ,

   இதெல்லாம் ஏமாற்று வேலை.

  • senba, koவை - ,

   இதெல்லாம் ஏமாற்று வேலை.

  • senba, koவை - ,

   இதெல்லாம் ஏமாற்று வேலை.

 • suresh - chennai,இந்தியா

  மே மாதம் சென்னை செல்ல விமான டிக்கெட் விலையை பரிசோதித்த போது செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள அதே இண்டிகோ விமானத்தின் டிக்கெட் விலை,,,அதே பழைய விலையில் தான் இருந்தது,,,சென்னையில் இருந்து இந்தோனேஷியா செல்ல விமான கட்டணமும் அதே பழைய விலையில் தான் உள்ளது... ஒரு வேலை இந்த விலை குறைப்பு மே மாதத்திற்கு பொருந்தாதா ?

 • Bhaskaran - Chennai,இந்தியா

  Ivvalavunaal payanigal I’d am emaatri saapitaargalaa varikalaikuraithaal innum payanakattanam kuraikalaam

 • Sundararajan - Mumbai,இந்தியா

  சில இடங்களுக்கு மட்டும் இந்த கட்டணம் பொருந்தும், அதுவும் சில இருக்கைகளுக்கு மட்டும். இதில் ஒன்றும் வித்தியாசமில்லை.

 • KumariKrishnan Bjp - chennai,இந்தியா

  மண்ணிலும் விண்ணிலும் பாஜகவின் சாதனை

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement