Advertisement

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடும் சரிவு

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து, கோடைக்கு முன்பே கடுமையாக சரிந்துள்ளது.மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி; கொள்ளளவு, 93.47 டி.எம்.சி., காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில், நீடிக்கும் கடும் பனிப்பொழிவு மற்றும் வறட்சியால், மேட்டூர் அணை நீர்வரத்து, மளமளவென சரிந்து வருகிறது. வினாடிக்கு, 109 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து, 51 கனஅடியாக வெகுவாக சரிந்தது. வழக்கமாக, கோடைக்காலமான, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மட்டுமே, மேட்டூர் அணை நீர்வரத்து வெகுவாக சரியும்.கடந்தாண்டு மார்ச், 30ல், அணை நீர்வரத்து, வினாடிக்கு, 14 கனஅடியாக சரிந்தது. நடப்பாண்டு, கோடை தொடங்கும் முன்பே, 51 கனஅடியாக சரிந்துள்ளது. இது, காவிரி கரையோர விவசாயிகளை, அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதே நிலை நீடித்தால், வரும் கோடையில், நீர்வரத்தின்றி வறண்டு போகும் அபாயம் ஏற்படும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    மழையே இல்லையே அப்பா...? அப்பறம் எப்பிடி நீர் வரும்...?

Advertisement