Advertisement

பழைய பொருட்களை எரிக்க வேண்டாம்: விமான நிலையம் வேண்டுகோள்

சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு அருகே குடியிருக்கும் மக்கள் போகியன்று பழைய பொருட்களை எரிக்க வேண்டாம் என சென்னை விமான நிலைய நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக விமான நிலைய நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: கடந்த 2018- ஜனவரி14-ல் டயர், பழைய பிளாஸ்டிக் பொருட்களையும் சேர்த்து பொதுமக்கள் எரித்ததால், கடும் புகைமூட்டம் ஏற்பட்டது. இந்த புகைமூட்டத்தின் காரணமாக, காலை11மணி வரை விமானங்களை இயக்க முடியவில்லை. அதிகாலை முதல் புறப்பட வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. தரையிறங்க வேண்டிய விமானங்கள் வேறு விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன.

அதிகாலை 3 மணி முதல் காலை 9மணிவரை 73 விமானங்கள் பல இடங்களுக்கு புறப்படுகின்றன. 45 விமானங்கள் பல இடங்களில் இருந்து தரைஇறங்குகின்றன. போகிபுகையினால் 11மணிக்கு மேல் தரையிறங்குகின்ற விமானங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டதால், புறப்பட வேண்டிய விமானங்கள் எல்லாம் காலதாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் பலமணி நேரம் விமானநிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த ஆண்டு ஏற்பட்ட முன்அனுபவத்தின் அடிப்படையில், விமானநிலைய அதிகாரிகள், மாநில அரசு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனைசெய்து, இந்த ஆண்டு பயணிகளின் அசவுகரியங்களை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

எனவே, சென்னை விமானநிலையங்களில் இருந்து புறப்படும் விமானங்களில் நேரங்களை முன்கூட்டியே தெளிவாக தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப பயணிகள் தங்களது பயணங்களை திட்டமிடும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இதற்காக 'சென்னைஏர்போர்ட்' என்ற செயலியை பயன்படுத்தி கொள்ளவும். ஆகவே, விமானபோக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருக்கும் வகையில், பழையபொருட்களை எரிப்பதை தவிர்த்து ஆதரவு அளிக்கும்படி விமானநிலையம் அருகே வசிக்கும் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம்.

விமானங்கள் புறப்படும் மற்றும் தரையிறங்கும் நேரம்குறித்து, விமானசேவை தொலைப்பேசி எண்களை தொடர்பு கொள்ள வேண்டும். மேலும், கீழேகொடுக்கப்பட்டுள்ள விமான நிலையங்களின் தொலைப்பேசி எண்களை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம்.
044- 22563100.
044-22563600.
044-22563229.
044-22560542 இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    நல்ல அறிவுரைதான் .... ஆனால் பாரம்பரிய பழக்கவழக்கங்களை விட முடியுமா...

  • Siva - Aruvankadu,இந்தியா

    பழசுக்கு புதுசு இலவசம் என்று அடிச்சு விடுங்க..எல்லா பழசும் மலை போல ஓரிடத்தில் குவியும்.. . ..... தமிழ்நாடுடா......

  • S.Baliah Seer - Chennai,இந்தியா

    தீபாவளி பட்டாசு கண்ணுக்கும் மனத்துக்கும் மகிழ்ச்சியைக் கொடுப்பது.ஆயினும் அதன் புகை சுவாச கோளாறுகளை ஏற்படுத்துவதால் பட்டாசு வெடிக்க சில கண்டிஷன்களை உச்ச நீதிமன்றம் விதித்தது.ஆனால் போகியன்று பழையதை எரிப்போம் என்று சொல்லி டயர்,பிளாஸ்டிக்கை எரிப்பது ஒரே கெட்ட வாடையையும் மூச்சு திணறலையும் ஏற்படுத்துகிறது.இதை தடுக்க காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.பேட்ரோல் போலீசும் வருவது இல்லை. அரசு குறைந்த பட்சம் மக்களுக்கு வேண்டுகோளாவது விடலாமே.

Advertisement