Advertisement

10 சதவீத இடஒதுக்கீடு மசோதா: ஜனாதிபதி ஒப்புதல்

புதுடில்லி: பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில்,பொதுப் பிரிவில், 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் வகையில்,அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவை மத்திய அரசு தயாரித்துள்ளது. இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின்னர், குளிர்கால பார்லிமென்ட் தொடரில் தாக்கல் செய்யப்பட்டு விவாதத்திற்கு பின்னர் நிறைவேற்றப்பட்டது. பின்னர், இந்த மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த மசோதாவுக்கு இன்று(ஜன.,12) ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கினார். இதற்கான கோப்பில் அவர் கையெழுத்திட்டார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (18)

 • ஆப்பு -

  ரப்பர் ஸ்டாம்பு விற்பனை வெகு ஜோர்.

 • spr - chennai,இந்தியா

  அன்பார் ஜோதி சொன்னது பெரும்பாலும், நானும் ஊகித்த செய்திகளே ஆனால் அதற்கு ஆதாரம் என்று சொல்ல பல ஆங்கில ஊடகங்களை, செய்தித்தாள்களை (குறிப்பாக சி என் என் பி பி சி போன்ற மத்திய அரசுக்கு எதிரானவை) படித்தவர்கள் அறிய வாய்ப்புண்டு. அதிலும் ராணுவ உத்திகளை அலசி ஆராயும் பன்னாட்டு வல்லுநர் கருத்துக்களை இணையத்தில் படித்தால் அறிந்து கொள்ளலாம். நிறையவே இருக்கிறது இந்தியா ராணுவ, கப்பற்படை மற்றும் விமானப்படையின் நிலைமை பன்னாட்டு அளவில் இப்பொழுது 4 லிருந்து 6வது இடத்தில் இருக்கிறதாம். விமானப்படை பாகிஸ்தானைவிட சற்று இறங்குமுகம்தான் இன்னமும் சைனா நம்மைவிட பலமடங்கு வலுவுள்ளதாக இருக்கிறது அந்த வகையில் ராணுவ வகையில் அதனை எதிர்கொள்ளுவது சிரமமே அதற்கு இந்த யுக்திகள் தேவைப்படுகிறது அந்த வகையில் மோடி சிறப்பாகவே செய்திருக்கிறார் இவ்வளவு செய்தவர் சி பி ஐ மற்றும் அரசின் இதர துறைகளை பயன்படுத்தி, மாறன், ப.சி ராசா போன்றோரை தண்டித்திருந்தால் வங்கியில் கொள்ளைக்கு மல்லையா போன்றோருக்கு உதவிய அதிகாரிகளையும் தண்டித்திருந்தால் மக்கள் நம்பியிருப்பார்கள் செய்யவில்லையே ஆனால் இதனை நம் தமிழக பாஜக தலைவர் அறிவாரா அப்படியென்றால் ஏன் அன்பர் ஜோதிக்கு பதில் அவர் இதனைப் பதிவு செய்யவில்லை

 • spr - chennai,இந்தியா

  இந்தப் பொதுபிரிவில் ஒதுக்கீடு என்பதற்கு தேர்தல் கால அரசியலில் மத்திய அரசு தரும் அதிகாரபூர்வமான லஞ்சம் என்றபோதிலும், வரவேற்கத்தக்கதே அடுத்து தேர்தலைப் பற்றிக் கவலைப்படாமல் கணிணியைப் பயன்படுத்தி ஆதார்- வருமான வரி வாங்கி கணக்கு -கடவுச் சீட்டு இவற்றின் இணைப்பு சாத்தியமானதால், பொருளாதார ரீதியில் பின் தாக்கியவர்களை மட்டும் இனம் கண்டு அவர்களுக்கு மட்டுமே மதம் இனம் ஜாதி பாராமல் அரசு உதவி மானியம் சலுகை என அறிவித்தால் பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டுமே என்றால், இந்த லஞ்சமும் அங்கீகரிக்கப்படும் ஒருவேளை மூளைச்சலவை செய்யப்பட்ட நம் மக்கள் மோடிக்கு வாக்கு அளிக்காமல் போனாலும் கூட அவர் ஏற்படுத்தும் இந்த நல்ல செயலை அடுத்து ஆட்சிக்கு வரும் எந்த அரசும் ஆதாயம் தருமொன்று என்பதால் விலக்காது தடை செய்யாது மோடி என்ற தனிமனிதர் சுயநலம் பாராத இந்தியர்களால் வாழ்த்தப்படுவார் என்பதில் ஐயமில்லை காங்கிரஸ் தலைவர்கள் உள்ளாரா விரும்புவதெல்லாம் இது போல பொதுவாக இதன் நன்மை தெரியாத, இந்த நாட்டின் சில மக்களால் வரவேற்கப்படாத ஆனால் நாட்டுக்கு நலம் செய்யும் திட்டங்களை அமுல்படுத்தி அதனால் பேர் கேட்டு பாஜக ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டால் அதன் பலனைத் தாங்கள் அனுபவிக்கலாம் என்பதே

 • Sasikumar -

  I proud my prime minister and my governments

 • Bhaskaran - Chennai,இந்தியா

  நீதிமன்றம் சரியென்று சொல்லவேண்டும் மேலும் அரசியல்சட்டம் திருத்தவேண்டுமா தெரியவில்லை இல்லையென்றால் நடைமுறைக்கு வராது

Advertisement