Advertisement

மாயாவதி, அகிலேஷ் கூட்டணி: பா.ஜ., விமர்சனம்

புதுடில்லி: தங்களை காத்து கொள்ளவும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டே, உ.பி.,யில் அகிலேசும், மாயாவதியும் கூட்டணி அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

உ.பி.,யில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி அமைத்து, தலா 38 தொகுதிகளில் போட்டியிட போவதாக அறிவித்து உள்ளன.

தாக்கம் ஏற்படாது
இது தொடர்பாக பா.ஜ.,மூத்த தலைவரும் மத்திய சட்டத்துறை அமைச்சருமான ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது: தேசியம் அல்லது உத்தர பிரதேச மாநில நலனுக்காக சமாஜ்வாதியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி வைக்கவில்லை. தங்களது எதிர்காலத்தை கருத்தில் கொண்டே கூட்டணி அமைத்து உள்ளன. மோடியை தனியாக எதிர்க்க முடியாது என்பது அவர்களுக்கு தெரியும். மோடிக்கான எதிர்ப்பு மட்டுமே அவர்களுடைய கூட்டணியின் ஒரே அடிப்படை ஆகும். இந்த கூட்டணியால் தேர்தல் முடிவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. தேர்தல் என்பது கணக்கு அல்ல. மனங்களை ஈர்க்கும் ரசாயனம் என்றார்.

ஊழலுக்காக
உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி அராஜகத்திற்கானது. ஊழல் செய்யவும், மாநிலத்தில் அரசியல் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்தவுமே கூட்டணி அமைத்துள்ளன. ஒருவரை ஒருவர் பிடிக்காதவர்கள் மஹா கூட்டணியை பற்றி பேசுகின்றனர். வரும் லோக்சபா தேர்தலில், 2014 தேர்தலை விட பா.ஜ., சிறப்பாக பணியாற்றி, மோடி தலைமையில் மத்தியில் வலிமையான ஆட்சி அமைக்கும். மோடி தலைமையில், மாநிலத்தில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையிலான சமூக திட்டங்கள் நிறைவேற்றப்படும். சிறந்த நிர்வாகம் அளிக்கப்படும் என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (17)

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  யார், யாருடன் கூட்டணி வைத்தால் என்ன, தில்லு இருந்தா யாரும் தனியாளாக வெல்ல முடியும். அரசியலில் இன்றைய நண்பன், நாளைய எதிரி. இன்றைய எதிரி, நாளைய நண்பன்.

 • jysen - Madurai,இந்தியா

  The alliance means the of the road for modi and his anti people activities. Even if the alliance gets about fifty seats and with states like MP, Punjab, Rajasthan , Ctgarh, UT of Delhi, AP, Karnataka, Kerala and to a lesser extent TN there is no possibility of BJP coming back to power. The only reliable state for BJP is Telangana which is headed by its B team TRS. Taking all these into consideration the good news is that modi is going to be defeated in May this year. In other states people negatively affected by modi's demonetisation and GST are looking forward to the election and the results of which will prove to be the of BJP and it's anti people activities. Religion will not play a part because people who had voted for him in 2014 in anticipation of the Ram Mandir are disappointed and will not be taken for a ride again by modi and his cohorts.

 • கலியுக கண்ணன் - உன்னதமான பாரதம் ,இந்தியா

  சமாஜ்வாதி குண்டர்கள் மாயாவதியை ஒருமுறை கொலை செய்ய முயன்றார்கள். பிஜேபி அவரை காப்பாற்றியது .பிறகு பிஜேபியின் உதவியால் மாயாவதி முதல்வரானார். இரண்டாம் முறை மாயாவதி முழு மெஜாரிட்டியுடன் முதல்வராநதும் முலாயம்சிங் யாதவை கொலை செய்ய முயன்றதாக முலாயம் ஒப்பாரி வைத்தார். பரம எதிரிகளாக இருந்த இவர்கள் இருவரும் பொழுது கூட்டு கொள்ளைக்காரர்கள். ஓட்டு போடும் மக்கள் ஏமாளிகள் . முட்டாள்கள்.. எவ்வளவு பெருந்தன்மை

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  பாஜக மட்டுமே யார் கூட வேண்டுமானாலும் கூட்டணி வைக்கும். மற்றவர்கள் கூட்டணி வைத்தால் தப்பு. ஹா ஹா ஹாஹா

 • Narayanan Muthu - chennai,இந்தியா

  ஐயோ புட்டுக்குச்சு புட்டுக்குச்சு 2019 ல் ஆட்சி புட்டுக்குச்சு. இனிமேலதான் வழக்கு வாய்தா வம்பு தும்பு எல்லாம். எப்படி பழி வாங்குறதுன்னு நம்ம கிட்ட படிச்ச பாடம் நமக்கே வினையாக போகும் நிகழ்வுகள் கண் முன்னே வந்து பயமுறுத்துதோ .

Advertisement