Advertisement

மேகதாது அணைக்கு அனுமதி வழங்கவில்லை: மத்திய அரசு

புதுடில்லி: மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கூறியுள்ளது.வழக்கு
மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடகா முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கான வரைவு அறிக்கை தயாரிக்க கர்நாடகாவிற்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ள தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசின் அனுமதிக்கு தடை விதிக்க வலியுறுத்தியும் கர்நாடக அரசுக்கு எதிராகவும் அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உள்ளது.பதில்மனு
இந்த மனுவுக்கு மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான திட்ட ஆய்வறிக்கை தயாரிக்க மட்டுமே அனுமதி அளித்து உள்ளோம். இந்த அனுமதி என்பது அணை கட்டுவதற்கு கொடுத்த அனுமதி கிடையாது. எனவே, இது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பிற்கு எதிரானது அல்ல. தீர்ப்பை அவமதிக்கும் செயலும் அல்ல. ஆய்வறிக்கை தாக்கல் செய்த பின்னர், மத்திய நீர் ஆணையத்தின் நிபுணர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களையும் ஆராய்ந்து பார்த்த பின்னரே, அந்த அணை தேவைதானா என்பதை ஆராய்ந்து முடிவு எடுப்பார்கள்.


பின், அந்த அறிக்கை மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் ஆலோசனை குழுவுக்கு அனுப்பப்படும். இதன் பின் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் திட்டத்தை, காவிரி நீர்மேலாண்மை ஆணையத்தின் பரிசீலனைக்கு அனுப்பும்.


ஆகவே இப்போது அளிக்கப்பட்டு உள்ள அனுமதி விரிவான திட்ட அறிக்கைக்கு தான். அணை கட்டுவதற்கான அனுமதி அல்ல. மேகதாது அணை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தப்படும். கர்நாடகாவின் கருத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு ஆலோசனை நடத்தப்படாது. விவசாயிகளின் நலனுக்கு குந்தகம் ஏற்படும் வகையில் எந்த முடிவும் எடுக்கப்படாது.


அணை கட்டுவதற்கான அனுமதியே, வழங்காத போது தற்போது தமிழக அரசு தாக்கல் செய்த மனு ஆதாரமற்றது. அவர்கள் கூறும் தகவல்கள் ஏற்று கொள்ளக்கூடியவை அல்ல. இதனால், தமிழக அரசு தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக்கூறப்பட்டு உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (15)

 • Bhaskaran - Chennai,இந்தியா

  நாங்க அப்படிதான் சொல்வோம் ஆனால் கர்நாடகா அவர்கள் பாட்டுக்கு முதலில் ஆய்வு அப்புறம் நிலத்தை சமன் செய்தால் அதற்கடுத்து தளவாட சாமான்களை அணைக்கட்டும் இடத்தில கொண்டுசேர்த்தால் என்று ஒன்றன் பினொன்றாக செய்துகொண்டிருப்பார்கள் மத்திய அரசு வெறும் வேடிக்கையும்பார்க்கும், அறிக்கையை விடும் அவ்வளவுதான் ஏமாந்தவன் தமிழன்தான் ஒருவேளை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து விட்டால் துணிந்து அணைகட்ட ஆரம்பிப்பர்கல்

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  பொய் சொல்வது பாஜக விற்கு புதிதா என்ன?

  • மதி - ,

   நி எந்த பொயை சொல் கி றா ய்

  • rao - ,

   This affidavit is filed in Supreme Court and govt cant lie.Later if its found lie TN can take contempt action against officials at centre.

 • KALYANASUNDARAM - karuppampulam,இந்தியா

  காவிரி பிரச்சனையில் மத்தியஅரசு எந்த தவறும் செய்யவில்லை எந்த குடைச்சலையும் மத்திய அரசு செய்யவில்லை ஒரு தாயிக்கு எல்லா குழந்தைகளுமே சமம்தான் .உண்மையான தாய் அதைத்தான் நினைப்பாள்.எந்த குழந்தைக்கும் சாதகமாக அவளால் இருக்கமுடியாது .அதே போல்தான் காவிரி பிரச்னையும்.அணைத்து குழந்தைகளும் ஒன்றே.

 • Natarajan Ramasamy - London,யுனைடெட் கிங்டம்

  தமிழக அரசு நமது எல்லைக்குள் காவேரி நதி நீரை சேமித்துவைக்க அணை கட்டுவது தொடர்பான திட்ட ஆய்வறிக்கை தயாரிக்கவேண்டும். இந்த வருடம் அபரிமிதமாக மழை பெயததால்,கர்நாடகா தங்கள் அணைகளை காப்பாற்ற திறந்துவிட்ட நீரில் பல லக்ஷம் cusecs காவேரி நீர் கடலில் கலந்து வீணானது. இதை பற்றி கட்டாயம் வழி வகைகள் அறிக்கை தயாராக இருக்கும்.நாமும் நம் அறிக்கையையும் அணை கட்ட வரைவு அறிக்கையையும் மத்திய அரசுக்கு உடனே அனுப்பி CHECK வைக்கவேண்டும்.

 • KALYANASUNDARAM - karuppampulam,இந்தியா

  தற்போது தேவை நதிகளை தேசியமயமாக்குங்கள் அது போதும் .அதை செய்யாமல் ஏதேதோ பிதற்றுகிறீகள்

 • Krishna - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  மெகதாது அணையினால் தமிழக விவசாயிகள் கண்ணீருக்காக எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்று புள்ளி விவரத்தோடு கோர்ட்டில் சண்டை போடவேண்டும்.

 • R Elangovan - Thiruvarur,இந்தியா

  காவிரி பிரச்சனையை வைத்து தொடர்ந்து அரசியல் செய்யும் முயற்சியைத்தான் மத்திய அரசு எடுத்துள்ளது இரு மாநிலங்களுக்கும் ஏதாவது குடைச்சல் செய்யுதுகொண்டே இருக்கவேண்டும் என்பதைத்தான் இது காட்டுகிறது அணையே தேவையில்லை என்ற பட்சத்தில் திட்ட அறிக்கையே தேவையில்லை. இது சரியான பதில் இல்லை நீதியை திசைதிருப்பும் செயல் வருந்தத்தக்கது. நதிநீர் இணைப்புக்கு மத்திய அரசு முக்கியத்துவம் தராதது ஏன் நாட்டின் முன்னேற்றத்தின் மீது பொருளாதார வளர்ச்சியின் மீது மத்திய ஆளும் கட்சிகளுக்கு உண்மையான அக்கறை இருந்தால் இதை செயல்படுத்த முன்வரவேண்டும் எல்லா செயல்களுக்கும் நீதிமன்றத்தை நாடாமல், நடுவன அரசு நடுநிலை தவறாமல் மனு நீதியை, மனு தர்மத்தை, நாட்டின் ஒற்றுமை, இறையாண்மையை பற்றிய சிந்தனையை நோக்கி மனம் நாடவேண்டும். பல நாடுகளை இணைத்து செயல்படும் சைபீரியன் ரயில், நைல்நதி இவைகளின் பயன்பாட்டினை நாம் இந்த நேரத்தில் நினைவில் கொண்டு செயல்படவேண்டும். அங்கு எந்த பிரச்சனையும் இல்லை.

 • K.Sugavanam - Salem,இந்தியா

  அணைகட்ட அனுமதிக்கவில்லை,ஆனால் அணைக்கட்டும் திட்ட ஆய்வுக்கு அனுமதி அளித்துள்ளோம்..ஒண்ணுமே புரியலையே..கட்ட அனுமதி இல்லாத அணைக்கு திட்ட ஆய்வு அனுமதி எதற்காகவோ?புரிந்தவர்கள் விளக்கினால் நன்று..

 • rajan. - kerala,இந்தியா

  உருப்படியா ஒரு மனு தாக்கல் பண்ண கூட இவனுங்களுக்கு தெரியல. வக்கீல் பீஸ் அது இதுன்னு அங்கேயும் அட்டையை போட்டிருப்பானுங்க. போயி ஒழுங்கா காவிரியில் அந்த தடுப்பணை கட்டி கிடைக்கும் மழை நீரை கடலில் கூடா கொண்டு சேர்ந்ததை தவிர்த்து சேமிக்க வழிய பாப்பியா இப்படி ஆளாளுக்கு கூத்தடிக்கிறீங்களே.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  மத்திய அனுமதி கொடுத்திராவிட்டால்? கர்நாடகா   கோர்ட்டுக்குப் போயிருக்கும். கோர்ட்டும் ஆய்வுக்குத்தடைபோட  சட்டத்தில் இடமில்லைன்னு சொல்லியிருக்கும். நமது வக்கீல் கோடிக்கணக்கில் ஃபீஸ் வாங்கிக்கிட்டுப் போயிருப்பார். வீம்பு  அரசியலுக்காக  அனாவசிய மனசுதாமே   மிச்சம். எத்தனை  அணைகளைக்கட்டினாலும் தீர்ப்புப்படி நீர்விட்டுத்தானாகவேண்டும். அதனை  மறுக்கமுடியாது. டூமீல்ஸ் வழக்கம்போல   மோடி ஒயிக சொல்லிவைப்போம்.

 • நக்கல் -

  வழக்கம் போல BJPக்கு எதிரா தமிழ் தேச துரோகிகள், கிருத்தவ ஊடகங்களின் பொய் பிரச்சாரம்.. அதில் சந்தோஷமடைந்த அடிமை ஆதரவாளர்கள்... மோடியை எதிர்க்க இவர்கள் கைகளில் ஒன்றும் இல்லை..

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  இதிலும் ஊழல் திமுக அடிவாங்கி விட்டதே..............பச்சைதமிழன் எடப்பாடியார் அரசுக்கு ஊழல்கட்சி ஸ்டாலின் வீசும் பந்து இந்தமுறையும் திரும்பி வந்து அவரையே தாக்கிவிட்டதே..........

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  திட்ட அறிக்கைக்கு எதற்காக அனுமதி வழங்க வேண்டும்? கர்னாடகாவில் பாஜக ஆட்சியை எப்பாடுபட்டாகிலும் அமைப்போம் அதற்காக சில தலைவர்கள் களத்தில் இறங்கிவிட்டார்கள் என்ற அறிவிப்பு வந்த நேரத்திலேயே இந்த மத்திய அரசின் அறிவிப்பும் வருகிறதே . எதற்காக?

  • K.Sugavanam - Salem,இந்தியா

   எங்கப்பாரு குத்திருக்குள்ளாற இல்லேங்கோ...சுந்தரம் அய்யா.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement