Advertisement

கோடநாடு விவகாரத்தில் தொடர்பில்லை: முதல்வர்

சென்னை: கோடநாடு கொள்ளை சம்பவம் குறித்த விவகாரத்தில் எனக்கு தொடர்பில்லை எனக் கூறிய முதல்வர் பழனிசாமி, இதன் பின்னணியில் உள்ளவர்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறினார்.


அரசியல் பின்புலம்

முதல்வர் பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: கோடநாடு விவகாரம் குறித்து தெஹல்கா முன்னாள் ஆசிரியர் நேற்று (ஜன.,11) வீடியோ ஒன்றை வெளியிட்டார். கோடநாட்டில், 2017 ஏப்.,24 ல் நடந்த சம்பவத்தில் என்னை சம்பந்தப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளார். இது உண்மைக்கு மாறானது.


செய்தி வெளியிட்டவர்கள் மீதும், பின்புலத்தில் உள்ளவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக நேற்றே சென்னை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள். வீடியோ வெளியீட்டில் அரசியல் பின்புலம் உள்ளது.


திசை திருப்ப முயற்சி
கொடநாடு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. 22 முறை கோர்ட் சென்றவர்கள் அப்போது ஒன்றும் சொல்லாமல், தற்போது புதிதாக சொல்லி விசாரணை திசைதிருப்ப பார்க்கின்றனர். வரும் 2ம் தேதி வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. இந்த விவகாரத்தில் பின்னணியில் உள்ளவர்கள் கண்டுபிடிக்கப்படுவர். குற்றவாளிகள் மீது பல்வேறு புகார்கள் உள்ளன. போஸ்கோ, சீட்டிங், திருட்டு, கூலிப்படை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


கண்டனம்

ஜெயலலிதா, கட்சி நிர்வாகிகளிடம் ஆவணங்களை பெற்று கோடநாட்டில் வைத்திருந்ததாகவும், அதனை எடுக்க அவர்கள் சென்றதாகவும் வீடியோவில் கூறப்பட்டுள்ளது. ஜெ., எந்த நிர்வாகிகளிடம் ஆவணத்தை பெற்றது கிடையாது. அவருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செய்தி வெளியிட்டது கண்டிக்கத்தக்கது.


தொடர்ந்து வழக்கு

திமுக ஏதாவது வழக்கு தொடரந்து கொண்டு உள்ளது. முதலில் ஒப்பந்த முறைகேடு என என் மீது வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.


தை பொங்கலை சிறப்பாக கொண்டாட பரிசு திட்டத்தை அறிவித்தது. ஸ்டாலின், அவரது கட்சியை சேர்ந்தவரை விட்டு வழக்கு தொடர வைத்தார். தமிழகத்தில் தொழில்வளம் பெருக நடக்க உள்ள தொழில் மாநாட்டை தடை செய்யும் வகையில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் யார் யார் இருப்பார்கள் என்பதை கண்டறிந்து உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.


நாடகம்

உள்ளாட்சி தேர்தல், அதிமுக அரசு ரத்து செய்தது என்ற குற்றச்சாட்டை எல்லா பகுதிகளிலும், மீடியாக்களிலும் தெரிவிக்கிறார்கள். திமுக நடத்தும் ஊராட்சி சபை கூட்டத்திலும் தெரிவிக்கிறார்கள்.ஜெயலலிதா இருந்த போதே உள்ளாட்சி தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டன. அப்போது, வழக்கு போட்டு, தேர்தலை ரத்து செய்தவர்கள் திமுகவினர்.


ஸ்டாலின், துணை முதல்வர், உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தார். அப்போது எல்லாம், மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய தவறிவிட்டார். அமைச்சராக இருந்த போது தவறவிட்டுவிட்டு, தற்போது கிராமம் கிராமமாக சென்று மின்சாரம் வரவில்லை. குடிநீர் வரவில்லை என புகார் சொல்கிறார். ஊராட்சி சபை பெயரில் திமுக நடத்துவது நாடகம்.


அரசியலில் நேரடியாக எதிர்கொள்ள முடியாதவர்கள் குறுக்கு வழியை கையாள்கிறார்கள். அவர்களால் அதிமுக அரசை கவிழ்க்க முடியாது எனக்கூறினார்.


வழக்குப்பதிவு
இதனிடையே, கோடநாடு குறித்த வீடியோ வெளியிட்ட தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ், பேட்டி கொடுத்த சயன் மனோஜ் மீது சென்னை சைபர் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (25)

 • ருத்ரா -

  நீதி மன்றம் ஜெ அவர்களின் சொத்துக்கள் விவரம் தானே கேட்டது. ஒவ்வொரு சொத்துமே விவகாரமாக போவது ஏன்? பலரும் யாரையாவது கைகாட்டுவதை பார்த்தால் முதல்வர் பதவிக்காக சிலரும் தன் நட்பு குடும்பத்தை காப்பாற்ற சிலரும் அவசரப் படுவது ஏன். தப்பு செய்தவர் தப்பக்கூடாது.

 • rajan. - kerala,இந்தியா

  ஏம்பா இத்தனை கொலைபாதக செயல் புரிந்தவர்கள் உலாத்திக்கிட்டு இருக்கிற இடத்தை போயி எல்லாவனும் கோரசாய் தமிழகம் அமைதி பூங்கா என கூப்பாடு போடுறீங்களே. எப்படி சாமி இதெல்லாம் உங்களாலே முடியுது.

 • karutthu - nainital,இந்தியா

  ஜெயலலிதா இருந்த போதே உள்ளாட்சி தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டன. அப்போது, வழக்கு போட்டு, தேர்தலை ரத்து செய்தவர்கள் திமுகவினர் தான் என முதல்வர் சொல்வது தான் உண்மை .

 • Subramania Bhattar - madurai,இந்தியா

  அய்யா ஸ்டாலின் அவர்களே சாதிக்குபாட்சா ,ரமேஷ் அப்படீர்னு சொல்றாங்களே அவங்க யாருன்னு தங்களுக்கு தெரிந்தா சொல்லுங்களேன்

  • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

   இவ்வளவு நாள் கிழிக்க துப்பில்லை எவனோ ஏதாவது வெளி இட்டால் உடனே ரமேஷ் என்று உலர வேண்டியது இன்னும் எவ்வளவு நாள் உளறுவ

  • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

   ஏன் உங்களுக்கு ரமேஷ் எல்லாம் தெரியலையா நல்ல கண்டக்டரை பாருங்கள் அவர் சரி செய்வர்

  • Naagarazan Ramaswamy - Chennai,இந்தியா

   அவசரத்தில் ஒரு காலை எடுத்துவிட்டீர்களே கண் டாக்டர் என்பது சரி. கண்டக்டர் அல்ல

 • Devanand Louis - Bangalore,இந்தியா

  இது ஸ்டாலினின் தூண்டுதலாகஇருக்கும் ,ஸ்டாலினை விசாரணைக்கு அழைக்கவேண்டும் அப்படியே ஸ்டாலினடம் அண்ணாநகர் ரமேஷ் & சாதிபாட்சா கொலைகள் மற்றும் கணக்கிலவராத கொலைகளை ஸ்டாலினடம் விசாரித்தால் பலவித உண்மைகள் வெளியில்வரும்

 • புதுகை வானம்பாடி - புதுக்கோட்டை,இந்தியா

  போற போக்க பார்த்த நோட்டாவுக்கே கீழ பிஜேபி யா இல்ல அதிமுக வா என போட்டியே வரும் போல

 • oce - chennai,இந்தியா

  திமுக ஆட்சி நடக்க முடியாது. அப்படி இருந்தால் அதிமுகவுக்கு எதிராக போடும் வழக்குகளுடன் சர்க்காரியா கமிசன் வழக்கையும் தோண்டி எடுத்து விசாரிக்க வேண்டும்.

 • Karunan - udumalpet,இந்தியா

  கொடநாட்டை பழனியோடு தொடர்புபடுத்துவானேன் ...1000 ரூபாய் செய்த வேலையா ..தேர்தல் வருகிறது பேரை எப்படி கெடுக்கலாம் என்று ரூம் போட்டு யோசித்த கட்சி குழு பட்ஜெட் போட்டு முன்னாள் தெகல்கா காரனை ஏட்பாடு செய்து முழங்கிக்கொண்டிருக்கிறார்கள் ...ஜெயா இவனுக்களை கிட்டவே சேர்க்காத காரணம் எடப்பாடிக்கு புரிஞ்சிருக்கும் ...

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  அஇஅதிமுகவை திட்டலாம், பேசலாம் விவாதிக்கலாம்.........சரியே ....ஆனாலும் திமுக என்றால் ஊழல்தான்.......இதை எப்படி மாற்றுவது........அதற்கு ஒரு யோசனை சொல்லலாமே.....

 • Nesan - JB,மலேஷியா

  அடுத்து எந்தக்கட்சி வந்தாலும் விசாரணை நடத்துறோம், நடத்துறோம் னு சொல்லி கொடநாட்டில் தன வாச படுத்த வேண்டியது வசப்படுத்திவிடுவார்கள். அதற்க்கு ஆட்சில் இல்லாதவர்கள் கட்டுப்பட்டுதான் போவார்கள். வரும்காலங்களில் காசு, பணத்துக்கு ஆசைப்படாத: நேர்மையான முதல்வர் கிடைக்கும் வரை இந்த மாதரி அவலம் நடைபட்டுக்கொண்டுதான் இருக்கும். எல்லா அரசியல் வாதிகளும் கூட்டு களவாணிகள்தான். சினிமா உலகத்தினரை போய்க்கேளுங்கள் கதை, கதை அவர்கள் படங்களை வெளியிடமுடியாத வேதனைகளை, அவலங்களை சொல்லுவார்கள்.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  ஒருவேளை திமுக ஆட்சிக்கு வந்தால் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைவைக்கிறேனென்று சொல்லி அதன்பின் பெறுவதை பெற்றுக்கொண்டு விஷயம் கிடப்பில் போடப்படும்

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  மோடி ஐயா... காப்பாத்துங்க..

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   கூட்டணி.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  ஆதாரங்களுடன் சிக்கினாலும் கூட அதிமுகவை கண்டித்து எழுத, ஒரு கூட்டம் தயங்கும் பயப்படும். அதனால் கூடவே திமுக வை இழுத்து வச்சு எழுதும்.

 • suresh - chennai,இந்தியா

  ஒரு வேளை திமுக அடுத்து ஆட்சிக்கு வந்தால்,,,,ஓ.பி.எஸ் மீதான சொத்துகுவிப்பு வழக்கு,,,,இ.பி.எஸ் மீதான காண்ட்ராக்ட் மற்றும் கொடநாடு கொள்ளை வழக்கு,,,,,சசிகலா மற்றும் தினகரன் மீதான ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு என அனைவருக்கும் தனித்தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு விசாரணையை திமுக முடுக்கிவிடும்,,,,அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோற்றால்,,,அதோடு சமாதி தான்,,,

  • Veerappan Sivaprakasam - Nagapattinam,ஓமன்

   correct

 • suresh - chennai,இந்தியா

  அதிமுக பாஜக கூட்டணி உருவாக வேண்டும்,,,,இலையோடு தாமரையும் மூழ்க வேண்டும்.

 • Narayanan Muthu - chennai,இந்தியா

  தமிழில் ஒரு பழமொழி: அள்ளாமல் குறையாது இல்லாமல் புகையாது. எந்த புத்தில் எந்த பாம்போ. கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்தே தீரும். மொத்தத்தில் ஜெயா சம்பந்தப்பட்ட செய்திகள் எல்லாவற்றிலும் மர்மம்தான்.

 • ஆப்பு -

  எல்லாத் திருட்டுக்கும்/கொள்ளைக்கும் ஆதாரம் இருக்கும். கூடுமானவரை பணம் பறிச்சிட்டு அப்புறம் வித்துருவாங்க

 • சிவ.இளங்கோவன் . - Thanjavur,இந்தியா

  கொடநாடு விவகாரம் ஒட்டுமொத்த கொலைகாரக்கூட்டம் கூண்டோடு சிக்கப்போகின்றது ..

 • Suri - Chennai,இந்தியா

  எங்கப்பன் குதிருக்குள் இல்லை, எப்படி சசி அமைதியாக இந்த எடப்பாடியை விட்டு வைத்துள்ளார் என்பதற்கு இப்பொழுது விடை கிடைத்துள்ளது. அட அட எடப்பாடி அமாவாசையயே மிஞ்சி விட்டார். இவர் சூப்பர் டூப்பர் அமாவாசை.

 • mindum vasantham - madurai,இந்தியா

  ttv யார் வெற்றி

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement