Advertisement

தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை

புதுடில்லி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க ஸ்டெர்லைட் உள்ளிட்ட 21 தொழிற்சாலைகளுக்கு சுப்ரீம் கோர்ட் தடைவிதித்துள்ளது.


நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் உற்பத்தியாகி தூத்துக்குடி மாவட்டம் புன்னகாயலில் கடலில் கலக்கிறது தாமிரபரணி ஆறு. இந்த ஆற்று நீரை நம்பி தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 46 ஆயிரத்து 107 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. பல லட்சக்கணக்கான மக்கள் தாமிரபரணி ஆற்று நீரை குடிநீராக பயன்படுத்துகின்றனர்.


ஸ்ரீவைகுண்டம் அணையின் உட்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் இந்த அணைக்கட்டில் இருந்து குடிநீருக்காக மட்டும் தண்ணீர் எடுக்க தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்திற்கு, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், 2011ம் ஆண்டு முதல், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தினர் ஸ்ரீவைகுண்டம் அணையின் உட்பகுதியில் இருந்து தூத்துக்குடியிலுள்ள 21 தொழிற்சாலைகளுக்கு நாள்தோறும் 9 கோடியே 20 லட்சம் லிட்டர் தண்ணீரை எடுத்து வழங்கும் 20 எம்.ஜி.டி திட்டம் நடைமுறைக்கு வந்தது. தினந்தோறும் தாமிரபரணி ஆற்றில் இருந்து ராட்சத மோட்டார்கள் மூலமாக தண்ணீரை உறிஞ்சி எடுத்து சுத்திகரித்து ''குடிநீர்'' என்ற பெயரில், தொழிற்சாலைகளுக்கு 1000 லிட்டர் தண்ணீர் வெறும் 15 ரூபாய் என்ற விலைக்கு வழங்கப்பட்டு வந்தது.


தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடும் நோக்கத்தில் ''ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தொழிற்சாலைகளுக்கு 20 எம்.ஜி.டி திட்டத்தில் தண்ணீர் வழங்குவதற்கு நிரந்தரமாக தடை விதிக்கவேண்டும்'' என்று தூத்துக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.ஜோயல் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.


தடை:






விசாரணையின் முடிவில் கடந்த ஆண்டு நவம்பர் 28 ந்தேதி ''ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணைக்கட்டில் இருந்து ஸ்டெர்லைட் தொழிற்சாலை உட்பட எந்த தொழிற்சாலைக்கும் தண்ணீர் வழங்ககூடாது, அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு மட்டுமே வழங்கவேண்டும்'' என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இறுதி தீர்ப்பு வழங்கியது.


ஆனால் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவிற்கு தடை விதிக்ககோரி, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நேற்று (ஜன.,11) நீதிபதிகள் சந்திர சூட், ஹேமந்த் குப்தா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ''ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணைக்கட்டில் இருந்து 20 எம்.ஜி.டி திட்டத்தில் தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்கும் மற்றும் குடிநீர் தேவைக்கு மட்டுமே தண்ணீர் எடுக்கவேண்டும். எக்காரணம் கொண்டும் தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் உள்ளிட்ட எந்த தொழிற்சாலைக்கும் தண்ணீர் எடுக்கக்கூடாது'' என்று அதிரடியாக இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் வரும் 21ம் தேதிக்குள் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் விரிவான அறிக்கை தாக்கல் செய்திடவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (12)

  • Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா

    In India Who is following Supreme Court's verdicts. The verdicts on gay-sex and adultery the Army chief is banning these in Army. Supreme Court first make their verdicts accep to the Nation and followed in letter and spirit. Otherwise this Supreme body is taken for a ride and these orders are being flouted and slowly we loose faith in this Supreme body.

  • S B. RAVICHANDRAN -

    good good good

  • sivakumar ramamirdham - Qin Huang Dao,சீனா

    என்ன ஒரு அக்கறை , மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கபடுகிறது என்று தெரிந்தும் தமிழக அரசு மேல் முறையிடு செய்கிறது. வேண்டும் என்றால் தொழிற்சாலைகளை கடல் நீரை சுத்திகரித்து உபயோகிக்க சொல்லலாமே

  • siriyaar - avinashi,இந்தியா

    அடுத்த ஸுட்கேஷ்க்கான முன்னேற்பாடு. இப்ப அப்பீல் வரும் தீர்ப்பை மாத்த பணம் வரும். இப்ப நீதிபதிகள் டிராபிக் காண்ஸ்டபில் லெவலுக்கு இறங்கிட்டாங்க.

  • K.Sugavanam - Salem,இந்தியா

    பாவம் விவசாயிகள்..இந்த தீர்ப்பு நிரந்தரமாக இப்படி தண்ணீர் எடுப்பதை தடுக்கும் வண்ணம் வரவேண்டும்..தேசீய பசுமை தீர்ப்பாயம் தொழிற்சாலைகளுக்கு வக்காலத்து வாங்காமல் தன் தீர்ப்பில் உறுதிபட நிற்கவேண்டும்.

  • Nalam Virumbi - Chennai,இந்தியா

    மற்ற தொழிற்சாலைகள் கடல் நீரை சுத்திகரித்து உபயோகிக்கலாம்.

  • கோமாளி - erode,இந்தியா

    கி.. கி.. கி... 200அடி தள்ளி 10அங்குல அகல ராட்சத போர் போட்டு உரிஞ்சுவோமே

  • makkal neethi - TVL,இந்தியா

    யாருக்கு தெரியும்.. இது இந்த நீதிபதியின் கருத்து ..மீண்டும் தேவைப்பட்டால் இன்னொரு நீதிபதி ஒரு மாற்று கருத்தை தெரிவிப்பார் ..இந்திய சட்டங்களும் நீதித்துறைகளும் அரசியல் அசிங்கங்களால் மாசுபட்டுக்கொண்டே இருக்கிறது..மக்கள் வீதிக்கு வந்து தட்டிக்கேட்கும் காலம் வரை மக்கள் அனைவருமே சுதந்திரம் என்ற வார்த்தயில் அடிமைகளே

  • கலியுக கண்ணன் - உன்னதமான பாரதம் ,இந்தியா

    அந்த தொழிற்சாலைகளில் வேலை செய்து தண்ணீர் குடிப்பவர் வெளிநாட்டவர் அல்ல .

    • Asokan - Kumbakonam,இந்தியா

      அவ்வளவு தண்ணீரும் தொழிற்சாலையில் குடிநீருக்காக பயன்படுத்தப்படுவதில்லை. உற்பத்தி சம்பந்தமான உபயோகமே அதிகம். உபயோகப்படுத்தப்பட்ட தண்ணீர் பல ரசாயனங்கள் கலந்துவருவதால் சுத்திகரிக்காமல் அப்படியே நிலத்தில் விடப்படுவதால் ரசாயனங்கள் நிலத்தில் கலந்து நில வளம், நிலத்தடி நீர்வளம் பாழ்படுத்தப்படுகிறது. பல ஆண்டுகளாக மக்களின் போராட்டம் இந்த கேடுகெட்ட தொழிற்சாலைகளை எதிர்த்துதான். காற்று, நிலம், நீர் மோசமாக மாசுபடுவதால் பொதுமக்கள் தீராத நோய்க்கு ஆளாகின்றனர்.

  • sivan - Palani,இந்தியா

    சபாஷ் சரியான தீர்ப்பு

  • P R Srinivasan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    இயற்கை வளத்தை கொள்ளையடிக்கும் தொழிற்சாலைகள், துணை போகும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள், அறியாமையில் உழலும் மக்கள் இவர்கள் இருக்கும் வரை இயற்கையின் பரிசுகள் மக்களுக்கு போகிறது. கொள்ளையடிப்பவர்களுக்கே போகும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement