Advertisement

விஜய் மல்லையா, நீரவ் மோடிக்கு உதவினாரா அலோக் வர்மா?

புதுடில்லி : முன்னாள் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா நிதி மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையா, நீரவ் மோடி, சிவசங்கரன் உள்ளிட்டோருக்கு உதவியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அலோக் வர்மா மீது மத்திய கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) ஏற்கனவே 10 குற்றச்சாட்டுக்களை கூறி இருந்த நிலையில், தற்போது மேலும் 6 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக்களை கூறி உள்ளது. இதில், பஞ்சாப் நேஷனல் வங்கி நிதி மோசடி விவகாரத்தில் நீரவ் மோடி தொடர்பாக ரகசிய இமெயில்களை கசிய விட்டது, விஜய் மல்லையாவுக்கு எதிரான லுக்அவுட் சுற்றறிக்கையை நீர்த்து போக செய்தது, இதே போன்று ஐடிபிஐ வங்கியில் ரூ.600 கோடி கடன் வாங்கி ஏமாற்றிய ஏர்செல் புரோமோட்டர் சி.சிவசங்கனுக்கு எதிரான லுக்அவுட் நோட்டீசையும் நீர்த்து போக செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களும் அடங்கும். இவை முதல் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தப்ப காரணமா:
இந்த புதிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மத்திய அரசுக்கு சிவிசி கடந்த ஆண்டு நவம்பர் மாதமே தகவல் தெரிவித்து விட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அலோக் வரக்மாவிற்கு எதிரான வழக்குகள், அது தொடர்பான ஆவணங்களை சிபிஐ கேட்டதாக சிவிசி தகவல்கள் தெரிவிக்கின்றன.


லுக்அவுட் நோட்டீஸ்கஸ்களை அலோக் வர்மா நீர்த்து போக செய்ததாலேயே நீரவ் மோடி, விஜய் மல்லையா, சிவசங்கரன் ஆகியோர் நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக சிவிசி குற்றம்சாட்டி உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (31)

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  Alok Verma was not in CBI when Vijay Malaya left . He joined cbi one year after Mallaya left.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  ஆளுங்கட்சிக்கோ, கூட்டணிக்கோ தெரியாமல் உதவ முடியாது ....

 • Ramgopal Rajagopalan - AMK,சிங்கப்பூர்

  , CVC - Central Vigilance Commission - மத்திய கண்காணிப்பு ஆணையம்

 • blocked user - blocked,மயோட்

  நால்வர் அணியை கட்டுப்படுத்தி எல்லா வேலைகளும் செய்தது இவனும் AJ வும்... இல்லை என்றால் சு சாமி எடுக்கும் முயற்சிக்கு நேரு குடும்பம் மற்றும் சிதம்பரம் குடும்பம் முழுவதுவும் உள்ளே இருக்கவேண்டியது... 2G வழக்கில் சொதப்ப ஏற்ப்பாடு செய்ததில் இவனுக்கு அதிக பங்கு உண்டு.. மோடி கொண்டுவந்து வைத்த ஆள் மட்டும் யோக்கியன் இல்லை... மல்லையாவை தப்பிக்க அதிக உதவி செய்து இருக்கிறான்... ஆக CBI ஒரு முழுவதும் வீணாய்ப்போன அமைப்பு... அமலாக்கத்துறையில் நாலு யோக்கியமான அதிகாரிகள் இருந்ததால் ஓரளவுக்கு உண்மை வெளி வருகிறது... இல்லை என்றால் எல்லாவற்றயும் மூடி மறைத்து இருப்பார்கள்...

 • அப்பாவி - coimbatore,இந்தியா

  அப்படியே பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணமாக இருந்தார் இந்திய ரூபாய் மதிப்பு குறைந்து போனதுக்கு காரணமாக இருந்தார் என்று குற்றம் சாட்டுங்கள்.

  • சுந்தரம் - Kuwait,குவைத்

   என் அத்தோடு நிறுத்தி விட்டீர்கள். அவர்கள் நினைத்தால் கடந்த 2018 ல் 1962 முறை பாகிஸ்தான் படைகள் ஊடுருவியதற்கும் இவர்தான் காரணமென்றும் சொல்வார்கள். அதற்கும் ஆமாம் ஆமாம் என்று தலையாட்ட பக்தர்கள் படை திரண்டெழும்.

  • Arasu ( ???? ??????? ) - Madurai,இந்தியா

   மேலும் , ஒசாமா பின்லேடன் , திரு முருகன் காந்தி , கோவன் உதவியது , ம பி , ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் B J P தோற்று மண்ணாய் போனதற்கும் இபவர் தான் காரணம்

 • கலியுக கண்ணன் - உன்னதமான பாரதம் ,இந்தியா

  லல்லு பிரசாத் யாதவ் வீட்டில் ரெய்டு நடந்த போது பாதியில் அதை விட்டுவிட்டு திரும்பி வரச் சொன்ன புண்ணியவான் இந்த அலோக் வர்மா

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   அப்போவே உள்ளே தள்ளி இருக்கணும் ஜீஜி. இப்போ பாருங்க ரோடுவரைக்கும் வந்து சிரிப்பாசிரிக்குது.

 • Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா

  Now everyone started blaming Justice Sikri who was recommed by the CJ.

 • Indhuindian - Chennai,இந்தியா

  காங்கிரஸ் ஆதிர்க்கிறது என்றாலே அதில் ஏதோ விஷயம் இருக்கிறது அதுவும் CBI டிரேக்டரேய் முதலில் எதிர்த்துவிட்டு இப்போது ஏதிக்கிறது என்றால் எங்கேயோ இடிக்கவில்லையா. காங்கிரெஸ் எப்பவுமே வூஷாலின் பக்கம்தான் இது உலகறிந்த விஷயம்

 • Ravanan Ramachandran - Chennai,இந்தியா

  ஆக மொத்தத்தில் எந்த உயர் பதவியில் இருந்தாலும் பிஜேபி அரசுக்கு கட்டுப்பட்டுதான் நடக்க வேண்டும் என தெரிகின்றது இதில் இருந்து...அவர்கள் ஆட்டுவித்தபடி ஆடவேண்டும்....இல்லையென்றால் எந்த குற்றச்சாட்டும் நம் மீது வந்து விழும்.

  • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

   காங்கிரஸ்க்கு மட்டும் தான் அடிமையாக இருக்க வேண்டும் ??? கொள்ளை கூட்டுத்தத்துக்கு உதவி செய்யறவன் தான் உங்க ஊரில் நல்லவர்கள் போல ?? நல்ல வருவீங்க

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   பணிஓய்வில் அனுப்பிவிட கேட்டிருக்காராம். வெளியே வந்ததும் புகை கொழுந்துவிட்டு எரியும்.

 • bal - chennai,இந்தியா

  இந்த ஆள் இந்த பதவிக்கு வரக்கூடாது என்று சொன்ன அதே நாற வாய் (மல்லிகார்ஜுன கன்னடக்காரர்), இப்போது நீக்கக்கூடாது என்று சொல்கிறது...ஏனெனில் காங்கிரஸுக்கு நிறைய உதவி செய்தது....மல்லயா வழக்கு தாமதம், மாறன் வழக்கு தாமதம், லாலு வழக்கு தாமதம், என்று சொல்லி கொண்டே போகலாம்...இந்த நாட்டில் யாரும் யோக்கியன் இல்லை...அதனால்தான் எல்லோரும் படித்துவிட்டு வெளிநாடு செல்கின்றனர்.

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  இந்த கருத்துப்பகுதியில் அலோக் வர்மாவிற்கு வக்காலத்து வாங்க ஆசையா இருக்கிறான் பாருங்க ஒரு கும்பல் அவர்களை தான் முதல்ல உள்ள தூக்கி போடணும்

  • Rajavelu E. - Gummidipoondi,இந்தியா

   எதிர் கருத்து சொன்ன உங்களுக்கு இப்படித்தானே பதில் சொல்விங்க, இதுதான் பிஜேபி பக்தசோட குணம்.

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   இந்த விஷயத்தில, பாஜக சொன்னமாதிரிதான் நடந்ததுன்னு அந்த ஆளு சொல்றதுக்கு எவ்வளவு நேரம் ஆகும் ?

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  இதற்கானதானே அந்த பதவிக்கு வந்தேன்...........

 • Devanatha Jagannathan - puducherry,இந்தியா

  கடன் கொடுத்த காங்கிரஸ் கட்சி சொன்னபடி நீர்த்துப்போக வைத்தார். பழியை மோடி மேலே போட்டுவிட்டார்கள். தூங்கு மூஞ்சி கட்சியில் இருக்கும் கருப்பு ஆடுகளும் கண்டுக்காமல் விட்டுவிட்டார்கள்.

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  உண்மை வெளிவரும்போது காங்கிரஸ் ஆதரவாளர்கள் கொதிப்பது இயல்பே...........இது பொதுவானது

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   எதை வச்சி உண்மைன்னு சொல்றீங்க ? பாஜகவுக்கு அவரு விசுவாசமான இருந்த போது செய்திருக்கலாமல்லவா...

 • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

  அப்படி போடு ஏதாவது விபத்து நடந்தால் பிடித்தவன் உடனே கண்ணு தெஇர்யலய பார்த்து வர கூடாது என்று தப்பிக்க பார்ப்பார்கள் அப்படி தான் இதுவும் இந்த குற்ற சாட்டு இருந்தால் இந்த உலக மகா உண்மையை ஏன் பண்டாரங்கள் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை, ரபில் நோண்ட ஆரம்பித்த வுடன் எங்கே சாயம் வெளுக்க போதோ என்று பயந்து இப்படி ஒரு நடவடிக்கை இவர் கூறியது தவறானது என்றால் கோர்ட்டு ஏன் ஆஸ்தான விவகாரத்தில் விசாரணை நிறுத்த முடியாது என்று சொல்லி விட்டது ஒன்று வினை விதைத்தவன் தினை அறுக்க முடியாது ஏற்கனவே காங்கிரஸ் செய்த தவறு இவர்களும் ஆட்சியை தக்க வைத்து கொள்ள சேயும் சூழ்ச்சி

 • suresh - chennai,இந்தியா

  அலோக் வர்மா எப்போது பாஜகவுக்கு அடிபணியாமல் சென்றாரோ,,,இனி இது போல் செய்திகள் வராமல் போனால் தான் ஆச்சர்யம்,,,ஐ,எஸ்,ஐ,எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு என செய்தி வெளிவந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை .

  • rajan. - kerala,இந்தியா

   ஆனால் மறைமுகமாக காங்கிரஸுக்கு ஏவல் வேலை செய்துள்ளார். ஏன் நாட்டு நலனுக்காக உழைத்திருக்கலாமே. அப்போ யாரும் இவரை கேள்வி கேட்க முடியாதே.

 • makkal neethi - TVL,இந்தியா

  எங்கோமனம் வீசுகிறது ....அரசாங்கம் ....எங்கோ மனம் வீசுகிறது ..மக்கள்

 • Viswam - Mumbai,இந்தியா

  இது வரை ராசா, கனி, ப சி , கார்த்தி, மல்லையா, நீரவ் எப்படி தப்பித்தார்கள் என்று புரியாமல் இருந்தது. வடையை வர்மா நரி தூக்கிகொண்டுபோன கதை இனிமேல் தான் வெளி வரும்

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  பிடிக்காத மருமகள் கை பட்டா குற்றம் கால் பட்டா குற்றம். இனிமேல் இவர் மீது எங்கிருந்தெல்லாமோ குற்றச்சாட்டுக் கணைகள் பறக்கும். லலித் மோடிக்கு விசா கொடுக்க சிபாரிசு செய்தது இவர்தான் என்றும் கூட குற்றச்சாட்டு எழலாம்

  • Sudarsanr - Muscat,ஓமன்

   ஹர்சத் மேத்தாவுக்கு உதவியதும் ivarthan இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள் சுந்தரம் அவர்களே.... உங்களுக்குத்தான்... உங்கள் கருத்தின் முதல் வரி பொருந்தும்...\\பிடிக்காத மருமகள் கை பட்டா குற்றம் கால் பட்டா குற்றம்\\

  • சுந்தரம் - Kuwait,குவைத்

   ஹர்ஷத் மேத்தாவுக்கு 1993 ல் உதவியவரை 2014 ல் வந்தவுடன் உள்ளே தள்ளாமல் 2018 வரை வைத்திருந்த காரணம் என்ன? (கட்சி கொள்கை விதிமுறைகளை மீறி ஒருமையில் வசை பாடாததற்கு நன்றிகள் நண்பரே.)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement