Advertisement

லோக்சபா தேர்தலில் தோற்றால்... : அமித்ஷா ஆதங்கம்

புதுடில்லி : லோக்சபா தேர்தலில் தோற்றால் பானிபட் போரில் மராத்தாக்கள் தோற்று, நாடு 200 ஆண்டுகள் அடிமையானதை போல் ஆகி விடும் என பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.


டில்லியில் கட்சியின் ஆலோசனை கூட்டத்தை துவக்கி வைத்து பேசிய அமித்ஷா, வரும் லோக்சபா தேர்தல் 3வது பானிபட் போருக்கு சமமானது. பானிபட் போரில் மராத்தாக்கல் முகலாயப்படைகளிடம் 1761 ல் தோற்றதால் நாடு 200 ஆண்டுகள் ஆங்கிலேயரிடம் அடிமையாக இருக்க வேண்டியதாயிற்று. அதற்கு முன் வீர சிவாஜியின் ஆட்சி காலத்தில் மராட்டியர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் 131 போர்களிலும் வெற்றி கண்டனர். இந்த தேர்தல் முடிவுகள் நாட்டிற்கு மிக முக்கியமானது. இந்த தேர்தல் கொள்ளைகளுக்கான போராட்டம். மிகப் பெரும் பெரும்பான்மையுடன் பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வரும்.


பிரதமர் மோடி யாராலும் வெல்ல முடியாத போர்வீரன். 1987 முதல் அவர் எந்த தேர்தலிலும் தோற்றது இல்லை. எத்தனை கட்சிகள் ஒன்றிணைந்தாலும் அவரை வீழ்த்த முடியாது. உ.பி.,யில் மட்டும் பா.ஜ., 50 சதவீதம் ஓட்டுக்களை பெறும். 2014 தேர்தலை விட கூடுதல் இடங்களை பா.ஜ., கைப்பற்றும். பா.ஜ., மீதுள்ள பயம் காரணமாகவே மாயாவதியும் அகிலேசும் தற்போது கூட்டணி அமைத்துள்ளனர் என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (85)

 • Rafi - Riyadh,சவுதி அரேபியா

  ஏற்கனவே இந்திரா அம்மையாருக்கு எதிராக இவர்கள் கூட்டணி கண்டதை மக்கள் மறந்து விட்டார்கள் என நினைத்து புலம்புகின்றார். மாயாவதி, அகிலேஷ் கூட்டு என்றவுடன் பயம் தோற்றுவிட்டது. அகிலேஷ் அழகாக சொல்லியுள்ளார் இந்த வகுப்புவாத ஆட்சியை விரட்ட இரண்டடி கீழே இறங்கவும் தயார் என்பதை சுட்டி காட்டியுள்ளார். ஆங்கிலேயர்கள் விட்டு சென்றபோது நம் நாடு சொகுசாக இல்லை. உணவு உற்பத்தியில் பின் தங்கியிருந்தோம். காங்கிரஸ் ஆண்டதன் அடிப்படையே நாம் பல வகையிலும் தன்னிறைவு பெற முடிந்தது. ஏன் இப்போதைய ஆட்சி கூட காங்கிரஸ் விட்டு சென்றதைதைத்தான் அப்போது எதிர்த்ததை மறந்து அதை பின் தொடர்ந்து கொண்டிருப்பதை மக்கள் அறிகின்றார்கள். இனி உங்களின் எந்த சவால்களும் புறந்தள்ளப்படும்.

 • ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா

  இந்துக்கள் உங்களை நம்பி ஏமார்ந்து விட்டோம் . ராமர் கோவிலும் கட்டமாடீர்கள். ஐயப்பனினின் புனிதத்தையும் காகமாடீர்கள் . உங்களை வீட்டுக்கு அனுப்புவதே நல்லது என்று தோணுது

 • Darmavan - Chennai,இந்தியா

  ஆமிட்ஷா சொன்னது சரி.இந்துக்களுக்கு விழிப்பு வர வேண்டும்..இல்லையேல் அடிமைதான்.இத்தாலி நாட்டுக்காரி/மூர்க்கங்கள் அராஜகம் வந்துவிடும்.

 • மணிமேகலை - paris ,பிரான்ஸ்

  ஏற்கனவே இந்த நாலரை ஆண்டில் இந்த நாடு 200 வருஷம் பின்னாடி போயிடுச்சு .

 • Vatican Agentugalle $ 45 trillion thirumba vange kodu - Chennai,இந்தியா

  . பிஜேபி க்கு எதிரே விழும் ஒவொரு வோட்டும் KhanCross மறுபடியும் வரவேண்டும் என்று துடிப்பவர்களுக்கும் சந்தோசம் .

Advertisement