Advertisement

வளைகுடா நாடுகளுக்கு செல்லும் இந்தியர்கள் 21 % குறைவு

புதுடில்லி : வேலை தேடி வளைகுடா நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை 21 சதவீதம் குறைந்துள்ளதாக குடியுரிமை அனுமதி கழகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


புள்ளி விபர அடிப்படையில், 2014 ம் ஆண்டு வளைகுடா நாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் இந்தியர்கிளின் எண்ணிக்கை 7.76 லட்சமாக இருந்தது. இது 2018 ம் ஆண்டு நவம்பர் 30 ல் 2.95 லட்சமாக குறைந்துள்ளது. 2017 ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2018 ல் வளைகுடா நாடுகளுக்கு வேலை தேடி செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை 21 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் வளைகுடா நாடுகளுக்கு வேலைக்காக செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை 62 சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ளது.


ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை 53.7 சதவீதமும், அரேபியா செல்வோர் 80.13 சதவீதமும், குவைத் செல்வோர் 35.05 சதவீதமும், கத்தார் செல்வோர் 57.24 சதவீதமும், ஓமன் செல்வோர் 37.03 சதவீதமும், பஹ்ரைன் செல்வோர் 40 சதவீதமும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.


இது தொடர்பாக லோக்சபாவில் வெளியுறவுத்துறை அமைச்சகம் அளித்துள்ள பதிலில், கடந்த டிசம்பர் மாதத்தில் பல காரணங்களால் வளைகுடா நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவின் காரணமாக உண்டான பொருளாதார சரிவின் காரணமாக வளைகுடா நாடுகள் ஒப்பந்த காலத்தை குறைத்து தீர்மானம் நிறைவேற்றியது. வளைகுடா நாடுகள் பெரும்பாலான அரசு மற்றும் பொதுத்துறை பதவிகளை தங்கள் நாட்டினரை கொண்டு நிரப்ப இலக்கு நிர்ணயித்திருப்பது ஆகியன முக்கிய காரணங்களாகும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (25)

 • Dinesh Pandian - Hyderabad,இந்தியா

  பெட்ரோல் விளையும் கம்மியா இருக்கனும் , நானும் வளைகுடா நாடு போகணும் . நடக்காது

 • jagan - Chennai,இந்தியா

  அங்கு போனவர்களில் 90 % ஒட்டகம் மேய்க்க மற்றும் மீன் பிடிக்க , மீதி உள்ளவர்களில் 7 .5 % கேக்றான் அண்ட் மெக்ரான் கம்பெனி வேலை (எல்லாம் வெஸ்டர்ன் தான்)....மீதி 1 % வேண்டுமானால் வெயிட் காலர் வேலை ...இதுக்கு போகாமலே இருப்பது நல்லது

 • Viswam - Mumbai,இந்தியா

  எல்லா வளைகுடா நாடுகளிலும் மண்ணின் மைந்தர்களை வேலையில் அமர்த்தும் கட்டாயத்திற்கு தள்ளபட்டுளார்கள். பொருளாதார வீழ்ச்சியால் மண்ணின் மைந்தர்கள் எம்பிளாய்மென்ட் exchange நோக்கி படையெடுப்பதும் எப்போதும் இல்லாத அதிசயமாக நடக்க ஆரம்பித்துள்ளது. மிகவும் கடினமான வேலைகளுக்கு யார் அடிமட்ட விலைக்கு வேலைக்கு வருகிறார்களோ அவர்களை வேலைக்கு அமர்த்துவது சர்வ சாதாரணமாகிவிட்டது. எதோ கொஞ்சம் திறமை தேவைப்படும் என்கிறமாதிரி பதவிகளுக்கு நிறைய படித்தவர்களின் போட்டி ஆரம்பித்துவிட்டது. அங்கிருந்தபடியே வேறு நல்ல சம்பாத்தியம் உள்ள வேலைக்கு தாவுவதை குறிக்கோளாக நம்மவூர் ஆசாமிகள் செவ்வனே செய்துவருகிறார்கள். மேலும் சில பல இந்தியர்கள் போலி படிப்பு சான்றிதழ்கள், மற்றும் வேலை செய்ததாக கூறி போலி ஆவணங்கள் தயாரித்து கொண்டுபோவதாலும் வேலைக்கு எடுப்பதில் தாமதம் காண்பித்து தீர விசாரித்து அப்புறம் தான் வேலைக்கு எடுப்பது என்று நிறைய அடிபட்ட வளைகுடா கம்பனிகள் முடிவெடுத்துள்ளது. சிலர் இது மூலமாகவும் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். எது எப்படி இருந்தாலும் மேற்கத்திய நாடுகளின் (வெள்ளைக்காரன்) ஆட்களுக்கு இந்த அடிமாட்டு டிரீட்மென்ட் இருப்பதாக தெரியவில்லை. சில நாடுகளில் (சவுதியில் 2017 தொட்டு தொடங்கியுள்ளது) வசிப்பவர்களிடம் அங்கு தங்கி இருப்பதற்காக வரிவசூல் நடக்கிறது (குடும்பத்தோடு வசிப்பவர்களுக்கு திண்டாட்டம் தான், ஆகையால் எல்லோரையும் தாய்நாட்டிற்கு அனுப்பிவிட்டு ஒண்டிக்கட்டையாக இருப்பதும் நடக்கிறது). வளைகுடா நாடுகளிலிருந்து நிறைய பேர் இந்தியா திரும்பி வரும் நிலை தொடருமென்றே தோன்றுகிறது. இதற்கும் நமது தேசத்து மோடி மற்றும் ராகுலுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பது நிச்சயம்.

 • ravisankar K - chennai,இந்தியா

  தவறான கருத்து. இந்தியாவின் சரித்திரம் அனைத்தும் அரபு நாட்டவருக்கு தெரியும் . சில அரபி நாட்டவர் ஹிந்தி நன்றாக பேசுவார்கள் . பொதுவாக அவர்களுக்கு வேலை வாய்ப்பில் அரபி நாட்டவர்கள் , வேறு நாட்டவர் என்று சில வழிமுறைகள் உண்டு . இது மாற கூடியதும் கூட. இதில் 1992 என்ற கணக்கு கிடையாது . அவர்கள் மதம் என்ற அடிப்படையில் சில தனிப்பட்ட விருப்பங்கள் இருக்கலாம் . சில கம்பனிகளில் இருக்கலாம் . ஆனால் அரசாங்கத்தின் கொள்கை அப்படி கிடையாது . நானும் அங்கு வேலைபார்த்தவன் தான்.

 • San - Madurai ,இந்தியா

  Sed labor getting more in india for 8 hrs than gulf for 12 hrs

Advertisement