Advertisement

கோவில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்வாணியம்பாடியில் மாயமான 3 மாணவியர் சென்னையில் மீட்பு

வாணியம்பாடி: வாணியம்பாடியில் மாயமான, மூன்று மாணவியர் சென்னையில் மீட்கப்பட்டனர். வேலூர் மாவட்டம், வாணியம்பாடி, நியூ டவுனில், அதே பகுதியைச் சேர்ந்த, 15 வயதுள்ள மூன்று மாணவியர், பத்தாம் வகுப்பு படிக்கின்றனர். நேற்று முன் தினம் பள்ளிக்கு சென்ற மாணவியர், மாலை வீட்டுக்கு திரும்பவில்லை. இது குறித்து பெற்றோர் வாணியம்பாடி, டவுன் போலீசில் புகார் செய்தனர். இந்நிலையில், மாணவியர் மூன்று பேரும், சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் சுற்றிக் கொண்டிருந்த போது, ரயில்வே போலீசார் பிடித்து விசாரித்ததில், வாணியம்பாடியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இதையடுத்து, ரயில்வே போலீசார் கொடுத்த தகவலை அடுத்து, வாணியம்பாடி போலீசார், மாணவியரை மீட்டு வந்தனர். விசாரணையில், சினிமாவில் நடிக்க வீட்டை விட்டு சென்னைக்கு சென்றது தெரியவந்தது. போலீசார் அவர்கைளை எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement