Advertisement

வல்லூரில் மின் உற்பத்தி நிறுத்தம்: மின்வெட்டு ஏற்படாது; அமைச்சர்

நாமக்கல்: ''வல்லூர் அனல் மின் நிலையத்தின் உற்பத்தியை நிறுத்த உத்தரவிட்டதையடுத்து, விரைவில் சீராய்வு மனு தாக்கல் செய்கின்றனர். அதனால், மின் வெட்டு என்ற பிரச்னைக்கு இடம் இல்லை,'' என, அமைச்சர் தங்கமணி கூறினார்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர், கரூர் மாவட்டம், வாங்கல் காவிரி ஆற்றின் இடையே உயர்மட்ட தரைவழிப்பாலம் கட்டப்பட்டுள்ளது. இங்கு, எல்.இ.டி., மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

அப்போது, தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது: வல்லூர் அனல் மின் நிலையத்தில், 1,500 மெகாவாட் மின்சார உற்பத்தி, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது, அவற்றின் உற்பத்தி, பசுமை தீர்ப்பாயம் உத்தரவு காரணமாக, நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் சீராய்வு மனு தாக்கல் செய்வதாக, அந்நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். அந்த மின் உற்பத்தி இல்லை என்றாலும் கூட, அதற்கு தேவையான மின்சாரம் நம்மிடம் உள்ளது. மின் வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை. எண்ணூர் மின் நிலையத்தில், சட்டப்படி மின்உற்பத்தி நடக்கிறது. அதற்கு பிரச்னை இல்லை. மத்திய அரசு நிறுவனம் என்பதால், சாம்பலை அப்புறப்படுத்துவதற்கு அவர்கள் நடவடிக்கை எடுப்பர். இவ்வாறு, அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement