Advertisement

சிபிஐ புதிய இயக்குனர் : 4 பேரின் பெயர்கள் பரிந்துரை

புதுடில்லி : சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அலோக் வர்மா, தீழணைப்பு துறை இயக்குனர் பதவியை ஏற்க மறுத்து ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, 4 ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள் புதிய சிபிஐ இயக்குனர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. மும்பை போலீஸ் கமிஷனர் சுபோத்குமார் ஜெய்ஸ்வால் மற்றும் உத்தரப் பிரதேச டி.ஜி.பி. ஓ.பி.சிங் ஆகியோரின் பெயர்கள் முன்னிலை வகிக்கின்றன.


இவர்கள் தவிர தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) தலைவர் ஒய்.சி.மோடி உள்ளிட்டோரின் பெயர்கள் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இறுதி பட்டியலில் 10 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பரிந்துரை பட்டியல் பிரதமர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் அடங்கிய மத்திய தேர்வுக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.


சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அடுத்து சிபிஐ இயக்குனராக அலோக் வர்மா பதவியேற்றுக் கொண்டார். நாகேஸ்வர ராவ் பணியிட மாற்றம் செய்தவர்களை அதே பணிக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்நிலையில், நேற்று (ஜன.,11) நடைபெற்ற சிறப்புக் குழு கூட்டத்திற்குப் பின், சிபிஐ இயக்குனர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அலோக் வர்மா தீயணைப்புத் துறை இயக்குனராக மாற்றப்பட்டார். இப்பொறுப்பில் ஒருநாள் கூட பணியை ஏற்க மறுத்துவிட்ட அலோக் வர்மா அரசுக்கு தமது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து புதிய சிபிஐ இயக்குனரை தேர்வு செய்யும் பணியில் மத்திய அரசு இறங்கி உள்ளது. புதிய இயக்குனர் நியமிக்கப்படும் வரை இடைக்கால தலைவராக நாகேஸ்வரராவ் செயல்பட உள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (13)

 • S.prakash - Palakkarai,இந்தியா

  125 கோடி இந்திய மக்களின் மானப்பிரச்சனை இதை புரிந்து கொண்டு பிரதமர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் அடங்கிய மத்திய தேர்வுக்குழு செயல்படவேண்டும்.

 • siriyaar - avinashi,இந்தியா

  அலேக் வர்மா நியமிக்கும் போது நேர்மையானவர் அவரை கார்கே எதிர்த்தார். நடுவில் மல்லையா அவரை விலைக்கு வாங்கி காங்கிரஸ் அடிமையாக்கி விட்டார் ஆகவே மோடி நீக்கறார் கார்கே எதிர்க்கிறார் இப்ப.

 • Rajavelu E. - Gummidipoondi,இந்தியா

  ஜால்ரா அடிக்க கூடிய ஆள் கண்டிப்பா கிடைப்பார்.

 • makkal neethi - TVL,இந்தியா

  மருமகள் ரகசியம் மட்டுமே வெளி வருகிறது ...மாமியார் ரகசியம் வெளி வரும்போதுதான் சீரழிவின் உண்மை நிலவரம் தெரிய வரும்

 • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

  இவர்கள் எல்லாம் குஜராத்தில் இருந்து இறக்குமதி செய்திருப்பார்கள் ஏன் எனில் அவர்களுக்கு தான் குற்றவாளிகளை வெளி நாடு ஓடவைக்க தெரியும்

 • Viswam - Mumbai,இந்தியா

  இவர்களளெல்லாம் 1984 ~86 பேட்ச் அதிகாரிகள். அன்று தொடங்கி எங்கெல்லாம் போஸ்டிங் கிடைத்ததோ அங்கெல்லாம் எந்த கட்சி அரசாங்கம் செய்துள்ளதோ (வேறென்ன காங்கிரஸ் தான்) அவர்களின் கைப்பாவையாக இருப்பதற்கு நிறைய சான்ஸ் உள்ளது. அத்தி பூத்ததுபோல யாராவது ஒரு நேர்மையான அதிகாரி கிடைத்தால் நாட்டிற்கு நல்லது. இந்த தடவை மல்லிகார்ஜூன் தில்லாலங்கடி ட்ராமா போடுவாரா அல்லது சற்றேன்று ஒத்துக்கொள்வாரா என்று தெரியவில்லை.

  • கலியுக கண்ணன் - உன்னதமான பாரதம் ,இந்தியா

   அலோக் வெர்மாவை இயக்குனராக நியமனம் செய்ய எதிர்த்தவர் கார்கே . அவரை வீட்டுக்கு அனுப்புவதற்கும் எதிர்ப்பவன் கார்கே . என்னே அறிவு .

 • tamil - coonoor,இந்தியா

  இந்த அரசு தேர்வு செய்யும் முறையும், தேர்வு செய்யப்படும் ஆட்களும் உண்மைத்தன்மைக்கு வெகு தூரத்தில் உள்ளது

  • sivan - Palani,இந்தியா

   இயக்குனர் தேர்வு முறை குறித்து சிறிது கூட அறிவு இல்லாதவர்கள்,.. எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல கருத்து சொல்வதை தவிர்த்து.. போய் புள்ள குட்டிகளை படிக்க வையுங்கள் பெரும்பான்மையான மக்கள் முட்டாள் அல்ல நல்ல நிர்வாகி என்று தெரிந்துதான் மோடியை தேர்ந்தெடுத்துள்ளோம். அதனால் நிர்வாக நடைமுறை தெரியாத நபர்கள் உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம்

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  யார் இந்த ஆப்பில் வலியவந்து மாட்டிக்கொள்வார்களோ?

  • Anandan - chennai,இந்தியா

   உங்க தலீவர் நியமிச்ச அஸ்தானா, நாகேஸ்வர ராவ் இருவரும் ஊழல்வாதிகள் தான். இதிலே வராது வந்த மாணிக்கம்னு பில்டப்பு வேற.

  • THENNAVAN - CHENNAI,இந்தியா

   முல்லை முள்ளால் எடுத்த தலைவரின் செயல் அவராலேயே எதையும் சாதிக்க முடியும் காத்திருந்து பாருங்கள் .சிதம்பரம் ரகசியங்கள் அனைத்தும் வெளிக்கொண்டுவந்து நாய்படாத பாடு படும் காங்கிரசின் கொள்ளையர்களின் கூடடம் விரைவில்.

  • Rajavelu E. - Gummidipoondi,இந்தியா

   கடந்த 67 ஆண்டுகால கொஞ்சம் கொஞ்சமாக பல தலைவர்களால் உருவாக்க பட்ட நாட்டின் வளர்ச்சியும், ஒற்றுமையும் இந்த கடைசி 4 1 / 2 ஆண்டுகளாக நாசமாக்கப்பட்டுள்ளது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement