Advertisement

ஆஸி.யுடன் முதல் ஒருநாள் கிரிக்கெட் : இந்தியா பவுலிங்

சிட்டின: இந்திய-ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் ஒருநாள் கி்ரிக்கெட் இன்று சிட்னியில் துவங்குகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸி., கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி டுவென்டி-20, நான்கு டெஸ்ட், மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டுவென்டி -20 தொடரை சமன் (1-1) செய்தும், டெஸ்ட் தொடரை (2-1) வென்றது.

இ்ந்நிலையில் முதல் ஒருநாள் தொடர் சிட்னியில் இன்று( ஜன.12) காலை இந்திய நேரப்படி 7.50 மணிக்கு துவங்குகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸி., கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து இந்தியா முதலில் பந்துவீசுகிறது.

அணியில் ஷிகார் தவான், ரோஹித் சர்மா ஜோடி துவக்கம் தருகிறது. மூன்றாவது இடத்தில் ' தல' கோஹ்லி களம் காண்கிறார். மிடில் ஆர்டரில் கை கொடுக்க அம்பதி ராயுடு ரெடி. , இவர்களுக்கு பக்க பலமாக தோனி உள்ளார்.

மே.30-ல் இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா வரப்போகிறது. அதற்கு ஆயத்தமாக ஆஸ்திரேலியா தொடர் இந்திய அணிக்கு நல்ல அடித்தளமாக அமையும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    நம் ஆட்கள் கங்காருவை அடித்து துவைத்து காய போட போவது நிச்சயம்

    • Sanny - sydney,ஆஸ்திரேலியா

      கங்காருவை அடித்துப்போட நாம என்ன மனிதநேயம் இலாதவங்களா? ஆஸ்திரேலியாவில் ஒன்னு தெரியுமா? மனிதனைவிட விலங்குகளுக்கு பாதுகாப்பு முதலிடம்,

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement