Advertisement

தொழில் துறை உற்பத்தி 0.5 சதவீதமாக சரிவடைந்தது

புதுடில்லி, : கடந்த ஆண்டு, நவம்பரில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 17 மாதங்களில் இல்லாத வகையில், 0.5 சதவீதமாக குறைந்துள்ளது. இது, அக்டோபரில், 8.1 சதவீதம்; மறுமதிப்பீட்டில், 8.4 சதவீதமாக இருந்தது.இந்த சரிவிற்கு, தயாரிப்பு, நுகர்பொருட்கள், நுகர்வோர் சாதனங்கள் துறைகளில் ஏற்பட்ட தொய்வு தான் முக்கிய காரணம். கடந்த, 2017, நவம்பரில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 8.5 சதவீதமாக காணப்பட்டது. இது, அதே ஆண்டு, ஜூனில், மைனஸ் 0.3 சதவீதமாக பின்னடைவைக் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.மதிப்பீட்டு மாதத்தில், தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி, மைனஸ் 0.4 சதவீதமாக பின்னடைவைக் கண்டுள்ளது. இது, 2017, நவம்பரில், 10.4 சதவீதமாக உயர்ந்து இருந்தது.இதே காலத்தில், நுகர்வோர் சாதனங்கள் துறை வளர்ச்சி, 3.1லிருந்து, 0.9 சதவீதமாக குறைந்து உள்ளது. அதேசமயம், சுரங்கத்துறை வளர்ச்சி, 1.4 சதவீதத்தில் இருந்து, 2.7 சதவீதமாக உயர்ந்து உள்ளது. மின் துறை உற்பத்தி வளர்ச்சி, 3.9 சதவீதத்தில் இருந்து, 5.1 சதவீதமாக அதிகரித்துள்ளது என, மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (6)

  • tamil - coonoor,இந்தியா

    கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த ஒரு மிகப்பெரிய மாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை, ஆனால் மிகப்பெரிய மாற்றங்கள் அடைந்துவிட்டதை போல ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள், எல்லாமே மிகைப்படுத்திய தகவல்கள், மாற்றமோ, மறுமலர்ச்சியோ ஏற்படவில்லை, ஐந்து ஆண்டுகள் மோடியின் பெருமைகளை மட்டுமே பேசி வீணடிக்கப்பட்டு விட்டது,

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    இன்னும்கூட அதிகமாக இருக்கலாம் எல்லாம் பி ஜெ பி யின் மஹிமை

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

    பண்டிகைகள் கொண்டாட்ட சீசன்களுக்குப்பிறகு மக்களிடம் பணப்புழக்கம் குறைவது இயல்பே . முக்கியமாக நுகர்வோர் பொருட்களை வாங்க ஆளிருக்காது .மேலும் நவம்பரில் உற்பத்திக்கான வேலைநாட்கள் குறைவு விடுமுறைகள் அதிகம். இந்த தேர்தல் ஆண்டு என்பதால் தொழிற்துறைக்கான அரசு உதவி குறையும். ஏனெனில் அரசின் பணம் இலவசங்களுக்கும் கவர்ச்சித் திட்டங்களுக்குமே போகும்

  • blocked user - blocked,மயோட்

    மோடிதான் இதற்குக்காரணம்...

  • siriyaar - avinashi,இந்தியா

    எப்பவுமே தீபாவளிக்கு முன்னாடி மாசம் உற்பத்தி கடுமையாக உயரும் அடுத்த மாசம் பதியாக குறையும் இதற்கு காரணம் கிட்டதட்ட எல்லாருக்கும் இரண்டு மடங்கு வருமாணம் தீபாவளிக்கு வரும். அதேபோல் ஏற்றுமதியும் டிசம்பர் ஐனவரியில் குறையும். ஆனால் மார்ச் மாதம் இது தலைகீழாகும்.

Advertisement