Advertisement

மாயாவதி-அகிலேஷ் கூட்டணி இன்று அறிவிப்பு

புதுடில்லி: லோக்சபா தேர்தலில், உத்தர பிரதேசத்தில், மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் அகிலேஷின் சமாஜ்வாதி கட்சிகள் கூட்டணி அறிவிப்பை இன்று (ஜன.12) வெளியிட உள்ளன.
இந்தாண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் காங். தலைமையில் மெகா கூட்டணியில் பல்வேறு மாநில கட்சிகள் இணைய விரும்பின. இதில் முதலில் மாயாவதி, அகிலேஷ் கட்சிகள் இணைவதாக இருந்த நிலையில், திடீரென இணைவதில் இருந்து பின்வாங்கின. இந்நிலையில் உ.பி.யில் மொத்தமுள்ள 80 லோக்சபா தொகுதிகளில் மாயாவதி, அகிலேஷ் கட்சிகளிடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து இருகட்சிகளும் இன்று கூட்டணி அறிவிப்பையும், தொகுதி பங்கீடு குறித்தும் அதிகாரப்பூர்வமாக வெளியிடஉள்ளன.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    தனியா நின்று கணிசமாக வெற்றி அடைந்தால் யார் வெற்றி அடைந்தாலும் பேரம் பேசலாம் என்று எண்ணம்தான்

  • Muruga Vel - Dallas TX,யூ.எஸ்.ஏ

    அமேதி மற்றும் ராய்பரேலியில் சோனியா மற்றும் ராகுலுக்கு எதிராக போட்டியிட மாட்டார்கள் ...

Advertisement