Advertisement

ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் புகார் எண் அறிவிப்பு

சென்னை:'ஆம்னி பேருந்துகளில், அதிக கட்டணம் வசூலித்தால், புகார் அளிக்கலாம்' என, போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.பொங்கல் பண்டிகையையொட்டி, அதிக நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், நேற்று முதல், பேருந்து மற்றும் ரயில்களில் கூட்டம் அதிகரித்தது.


இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட, ஆம்னி பேருந்து நிர்வாகத்தினர், கட்டணக் கொள்ளையை துவக்கி உள்ளனர்.இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில், 1800 425 6151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் இயங்கி வருகிறது.இந்த எண்ணுக்கு, ஆம்னி பேருந்துகளின் விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.


இந்த எண்ணில் வரும் புகார்கள், குரல் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட பேருந்து நிறுவனத்திடம் விசாரணை நடத்தப்படும். மேலும், அதிக கட்டணம் வசூலித்திருந்தால், கூடுதலாக பெறப்பட்ட கட்டணம், திரும்ப பெற்றுத் தரப்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement