Advertisement

காமராஜர் அரங்கில் கலை விழா துவக்கம்

சென்னை:'அப்பாஸ் கல்சுரல்ஸ்' அமைப்பின், 27-வது கலை விழாவை, அமைச்சர், மா.பா.பாண்டியராஜன், நேற்று துவக்கி வைத்தார்.


அப்பாஸ் கல்சுரல்ஸ்' சார்பில், நேற்று முதல், 20ம் தேதி வரை, தேனாம்பேட்டையில் உள்ள, காமராஜர் அரங்கில், தினமும் மாலை, 4:00 மணிக்கும்; இரவு, 7:00 மணிக்கும் கலை விழாக்கள் நடக்கின்றன.தேனாம்பேட்டையில் உள்ள, காமராஜர் அரங்கில், நேற்று மாலை, 7:00 மணிக்கு, கலை விழாவை, தமிழ் கலாசாரம் மற்றும் தொல்பொருள் துறை அமைச்சர், பாண்டியராஜன், திருவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.பின், அவர் பேசியதாவது:


மொழி, கலை, பண்பாடு ஆகியவை, ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. 28 நாட்களில், 176 அமைப்புகள், 6,000 இசை நிகழ்ச்சிகளை நடத்தும் ஒரே இடம், சென்னை மட்டும் தான்.சென்ற ஆண்டு, இதற்காக, 'யுனஸ்கோ'வின் அங்கீகாரமும் கிடைத்தது.தமிழகத்தில் அழிந்து வரும், 100 நாட்டுப்புற கலைகளை அடையாளப்படுத்தி, அதை காத்து, மேம்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.


தமிழ் பண்பாட்டு துறைக்கு, 100 கோடி ரூபாய் மேல், தமிழக நிதி ஒதுக்கியது இல்லை; இம் முறை, 227 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.தொல்லியல் துறையின் பொற்காலம் என சொல்லும் அளவுக்கு, கீழடி, பட்டறை பெரும்புத்துார், முசிறிப்பட்டினத்தில், அகழ்வாய்வுகள் நடத்தப்பட்உள்ளன.கலை பெட்டகமான, எழும்பூர் அறங்காட்சியகத்தை, 128 கோடி ரூபாய் செலவில், உலகத் தரத்தில், சீரமைக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.மூத்த நாடக கலைஞர், ஒய்.ஜி.மகேந்திரா பேசுகையில், ''சினிமா, 'டிவி' கலைஞர்களுக்கு, தமிழக அரசு, விருதுகள் வழங்குகிறது. அதுபோல, நாடக துறைக்கும், விருது வழங்க வேண்டும்,'' என, பேசினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement