Advertisement

குரோம்பேட்டையில் விபரீதம் தாயை எரித்துக் கொன்ற மகள்

குரோம்பேட்டை:குரோம்பேட்டையில், மர்மமான முறையில், மூதாட்டி இறந்த வழக்கில், கள்ளக்காதலுக்காக, மகளே, தாயை தீ வைத்து எரித்துக் கொலை செய்தது தெரியவந்து உள்ளது.


குரோம்பேட்டையைச் சேர்ந்த மூதாட்டி, பூபதி, 60. வீட்டில் உணவருந்தி, மாத்திரை போட்டுக் கொண்டு, 7ம் தேதி, காலை ஷோபாவில் படுத்திருந்த போது, திடீரென, ஷோபா தீப்பிடித்து எரிந்ததில், படுகாயமடைந்த மூதாட்டி, சிகிச்சை பலனின்றி இறந்தார்.தீ விபத்து ஏற்பட்ட விதம், சந்தேகத்தை ஏற்படுத்தியதால், குரோம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தினர்.


இந்நிலையில், பூபதியின் மகளான நந்தினி, 27, மீது, போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது மொபைல் போன் உரையாடலைக் கண்காணித்து, போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.அதில், கள்ளக்காதலுக்காக, நந்தினியே, தாயை தீ வைத்து எரித்தது அம்பலானது.இதையடுத்து, நந்தினி, கொலைக்கு உடந்தையாக இருந்த, அவரது கள்ளக்காதலன் முருகன், 45, ஆகியோரை, கொலை வழக்கில் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


இது குறித்து, போலீசார் கூறியதாவது:பூபதியின் மகள் நந்தினி, கணவர் கண்ணனுடன், தாய் வீட்டிலேயே தங்கியிருந்தாள். கண்ணன் கட்டட பணி செய்து வருகிறார்.நந்தினிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த, கட்டட தொழிலாளியான முருகன் என்பவனுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இந்த விவகாரம் பூபதிக்கு தெரிந்தது. அவர் நந்தினியை கண்டித்தார். ஆத்திரமடைந்த நந்தினி, கள்ளக்காதலன் துணையுடன், சம்பவத்தன்று, துாங்கிக் கொண்டிருந்த பூபதி மீது, மண்ணெண்ணெய் தெளித்து, தீ வைத்துள்ளாள்.பின், காப்பாற்றுவது போல் நடித்து, நந்தினியே தீயை அணைத்தது விசாரணையில் தெரியவந்தது.இவ்வாறு போலீசார் கூறினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement