Advertisement

சுப்ரீம் கோர்ட்டிற்கு இரு நீதிபதிகள் பரிந்துரை

புதுடில்லி: சுப்ரீம்கோர்ட் நீதிபதிகளாக இரு நீதிபதிகள் பெயரை கொலீஜியம் குழு பரிந்துரைத்துள்ளது. சுபரீம் கோர்ட் நீதிபதிகள் நியமனம் தலைமை நீதிபதி தலைமையிலான 5 பேர் கொண்ட கொலீஜியம் மூலம் பரிந்துரைக்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 10-ம் தேதி சுப்ரீம் கோர்ட் தலைமைநீதிபதி ரஞ்சன் கொகெய் தலைமையில் நடந்த கொலீஜியம் கூட்டத்தில், கர்நாடகா ஐகோர்ட்நீதிபதியாக உள்ள தினேஷ் மகேஷ்வரி என்பவரையும், டில்லி ஐகோர்ட் நீதிபதியாக உள்ள சஞ்சீவ் கன்னா என்பவரையும் கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. இவர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.


Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

  • நக்கல் -

    இவர்கள் முக்காவாசி இடதுசாரி சிந்தனையாளர்களாக இருப்பார்கள்.. இந்திய கலாச்சாரம் புரிந்தவர்களாக இருப்பது அவசியம்.. இல்லையென்றால் இவர்கள் தீர்ப்பினால் நாட்டில் குழப்பம்தான் ஏற்படும்..

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    எத்தனை கூடுதல் நீதிபதிகள் இருந்தாலும் தேங்கி உள்ள வழக்குகளின் எண்ணிக்கை குறையப்போவதில்லை

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

    தமிழகத்தில் லட்சக்கணக்கான வக்கீல்கள் இருந்தும் அபூர்வமாகவே சுப்ரீம்கோர்ட்டுக்கு தேர்வாகிறார்கள் காரணம் இங்குள்ள ஹைகோர்ட் நீதிபதிகளைப்பற்றி டெல்லிக்கு அன்றாடம் போகும் மொட்டைக் கடிதங்கள்தான் . ஒரு நீதிபதிவிடாமல் அனைவரைப்பற்றியும் புகார்கள் பெரும்பாலும் வழக்குகளில் தோற்ற ஒன்றரையணா வக்கீல்களின் வேலை அது அல்லது சாதிரீதியிலான வெறுப்பு மனப்பான்மை . ஒரு தமிழரின் முன்னேறுவதை மற்றவர் பொறுக்கமாட்டார் என்றால் என்றுதான் நம் மாநிலம் உருப்படும்?

  • ஆப்பு -

    இவிங்களுக்கு மாத்திரம் வேலை எப்போதும் காலியாக, ரெடியாக இருக்கு. நமக்குத்தான் 2 கோடி வேலை வாய்ப்பு வாக்குறுதி மட்டும் இருக்கு.

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    இனி அரசியவாதிகள் ஒவ்வொரு வழக்குக்கும் "சாதகமான" தீர்ப்பு "வாங்க" இரண்டு பெட்டி கொடுக்க வேண்டுமா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement