Advertisement

என்.எஸ்.இ தலைவர் அசோக் சாவ்லா ராஜினாமா

புதுடில்லி: தேசிய பங்கு சந்தை தலைவர் அசோக் சாவ்லா நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்

என்.எஸ்.இ., எனப்படும் தேசிய பங்குச் சந்தையின் தலைவராக கடந்த 2016-ம் ஆண்டு Tநியமிக்கப்பட்டவர், அசோக் சாவ்லா, 65. மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர். நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமாவுக்கான காரணங்களை அவர் வெளியிடவில்லை.


ஏர்செல்- மேக்சிஸ் நிறுவனங்களுக்கிடையே நடந்த பண பரிவர்த்தனையில் மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான குழுவின் அனுமதி பெறாமல் நடந்ததாக காங். மூத்த தலைவர் சிதம்பரம், இவரது மகன் கார்த்தி ஆகியோர் மீதான வழக்கு டில்லி ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று நடந்த விசாரணையில் என்.எஸ்.இ.யை விசாரிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக சி.பி.ஐ. தெரிவித்தது. இந்த விவகாரம் காரணமாகவே அசோக் சாவ்லா பதவி விலக காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

  • ஆப்பு -

    வேலையை விட்டிடுங்க... மீதியை அரசே ஊத்தி மூடிறும்

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

    நேற்றுதான் சாரதா சீட் பண்டு வழக்கில் நளினி சிதம்பரம் குற்றவாளி என சி பி ஐயால் அறிவிக்கப்பட்டிருக்கிறார் இனி பசியின் ஆட்களுக்கு கேடு காலம்தான்

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    "நாங்களும் ஒழுங்காக ஆட்சி செய்ய மாட்டோம். அதிகாரிகளையும் ஒழுங்காக வேலை செய்ய விடமாட்டோம். இந்தியாவை குட்டிச்சுவர் ஆக்கியே தீருவோம். இது அந்த அயோத்தி ராமர் மீது சத்தியம்".

  • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

    சிதம்பரம் என்ற தனி மனிதருக்கு இவ்வளவு ஆட்கள் உதவியிருப்பது ........அவரின் நேர்மைக்காக அல்ல... அவரிடம் பெற்ற ஊழல் பணத்திற்காகவே......... இனி இவரின் ராஜினாமாவிற்கு மோடி அரசு காரணம் என ஊழல்கட்சி அடிமைகள் கதறுவார்கள்.............

  • கலியுக கண்ணன் - உன்னதமான பாரதம் ,இந்தியா

    திருடனாக இருக்கலாம் .இல்லையேல் சிதம்பரம் குடும்பம் இவரை மிரட்டியிருக்கலாம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement