Advertisement

தமிழக அரசு மீது தேசிய பசுமை தீர்ப்பாயம்... அதிருப்தி! :நீர்நிலைகளை தூர்வாரியதில் திருப்தியில்லை

சென்னை:சென்னையில், கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் ஆகிய நீர்நிலைப் பகுதிகளை, துார்வாருவது குறித்த செயல் திட்ட அறிக்கையை, ஒரு மாத காலத்திற்குள் தாக்கல் செய்ய,தமிழக அரசுக்கு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை, கூவம் ஆற்றில், கழிவுநீர் கலப்பதை தடுப்பது, ஆக்கிரமிப்புகளை அகற்றவது, ஆற்றை சீரமைப்பது குறித்து, 2013ல், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின், தென்மண்டல அமர்வு, வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வந்தது.இந்த விசாரணையின் போது, அடையாறு ஆறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் துார்வார வேண்டும் என, எட்வின் வில்சன் மற்றும் ஜவகர்லால் சண்முகம் ஆகியோர், தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர்.


இதற்கிடையே, தென்மண்டல அமர்வில், நீதிபதிகள் இல்லாததால், வழக்கு, டில்லியில் உள்ள, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதி ராமகிருஷ்ணன், உறுப்பினர் நாகின் நந்தா ஆகியோர் முன், விசாரணைக்கு வந்தது.அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:கூவம், அடையாறு ஆற்றின் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் பணிகள், ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள், 2013ல் துவங்கி நடைபெற்று வருகிறது.


இந்த பணிகள், இதுவரை முழுமையடையவில்லை. இதனால், அரசின் செயல்பாடு திருப்தி அளிக்க கூடியதாக இல்லை.எனவே, கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் ஆகிய நீர் நிலைகளில், கழிவுநீர் கலப்பதை தடுப்பது குறித்தும், ஆக்கிரமிப்பை அகற்றுவது குறித்தும், மறு சீரமைப்பு பணிகள் குறித்தும், விரிவான செயல் திட்ட அறிக்கையை, தமிழக அரசு, ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும்.இல்லையென்றால், நீர்நிலைகளில் மாசுவை தடுக்க, 10 கோடி ரூபாய் வைப்பு நிதி செலுத்த நேரிடும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.வழக்கு விசாரணை, பிப்., 13க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (6)

  • rajan. - kerala,இந்தியா

    வேறென்ன இங்கேயும் எதோ வேலை பார்த்த மாதிரி கணக்கு எழுதி ஆட்டைய போட்டு தள்ளி இருப்பானுங்க. வழக்கம் போல.

  • Rajasekar - Trivandrum,இந்தியா

    பசுமை தீர்ப்பாயம் தான் இருப்பதாக காட்டிக்கொள்வதற்காக செய்யும் நாடகம் 6 ஆண்டுகள் இல்லாத அக்கறை இப்போது ஏன்??? ஸ்டெர்லைட் ஆலைத்திறப்பதில் தமிழக அரசு ஒத்துழைப்பு கொடுக்காததால் பசுமைதீர்பாயம் தமிழக அரசை கேள்விகேட்கிறது இது ஒருவகையில் மக்களுக்கு நல்லதுதான்.

  • Bhaskaran - Chennai,இந்தியா

    விட்டால் அந்த இரண்டு ஆறுகளையும் மூடி அதன்மேல் கடைகள் கட்டிவிடுவார்கள்

  • ருத்ரா -

    என்னங்க சார் இவ்வளவு கஷ்டமான வேலை தரீங்க. சரி பண்ணிவிட்டால் தமிழகத்தின் அடையாளம் காணாமல் போய்விடும்.

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    அவ்வளவு சீக்கிரமாக நீர்நிலைகளை அரசியல்வாதிகள் பராமரிக்க மாட்டார்கள்... அவ்விதம் செய்ய மறுக்கும் ஆட்சியை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இல்லமால் கலைத்து பாருங்கள்.. அடுத்து வருபவன் தானே செய்வான்

  • Manian - Chennai,இந்தியா

    அப்படி சுத்தம் செய்திருந்தால், பிளாட் போட்டு அரசியல், அரசாங்க வியாதிகள் சமபாதிக்க முடியுமா? அவர்களும் இந்நாடு மன்னர்கள்தானே

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement