Advertisement

வெளிநாடு வாழ் இந்தியர் டெபாசிட் அதிகரிப்பு

மும்பை: வெளிநாடு வாழ் இந்தியர்கள், 2018, நவம்பரில், இந்திய வங்கிகளில் செய்த டெபாசிட், 415 கோடி டாலர் அதிகரித்து, 12 ஆயிரத்து, 568 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது, அக்டோபரில், 12 ஆயிரத்து, 153 கோடி டாலராக இருந்தது.


பெரும்பான்மையான டெபாசிட், என்.ஆர்.ஐ., எனப்படும் வெளிநாடுகளில் வாழ்வோருக்கான சேமிப்பு கணக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கணக்கில், வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் டாலர், இந்திய ரூபாயாக மாற்றப்பட்டு, வரவு வைக்கப்படும். இந்த டெபாசிட்டுக்கு, உள்நாட்டு வட்டி விகிதம் பொருந்தும். எனினும், அன்னியச் செலாவணியில் ஏற்படும் மாற்றங்கள் தான், முதலீட்டின் மீதான வருவாய் உயரவும், குறையவும் காரணமாக இருக்கும். கடந்த ஆண்டு, செப்., 10ல், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, வரலாறு காணாத வகையில், 74.39 ஆக சரிவடைந்தது. இது, நவம்பரில், 69.58 ஆக உயர்ந்தது. ஆக, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மேலும் உயரும் என்ற எதிர்பார்ப்பில், நவம்பரில் வெளிநாடு வாழ் இந்தியரின் டெபாசிட் உயர்ந்து உள்ளதாக தெரிகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • சுந்தரம் - Kuwait,குவைத்

    வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பும் என் ஆர் ஐ பணத்துக்கு உள்நாட்டு வட்டிவிகிதம் தரப்படுவதில்லை. மாறாக , வருமானவரி சலுகை அளிக்கப்படுவதால் குறைவான வட்டியே அளிக்கப்படுகிறது. செய்தியில் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement