Advertisement

'டவுட்' தனபாலு

அ.ம.மு.பொதுச் செயலர் தினகரன்: லோக்சபா தேர்தலில், தேசிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது.

டவுட் தனபாலு: தினம் ஒரு தேசிய கட்சித் தலைவர், கூட்டணிக்காக உங்களை அணுகுவதைப் போல, 'பில்டப்' கொடுக்குறீங்களே... இன்று வரைக்கும், ஒரு பிராந்தியக் கட்சியோ, லெட்டர் பேடு கட்சியோ கூட, உங்களோடு பேச்சுவார்த்தை நடத்தலை... இதுல, இந்த வீரவசனம் தேவையா என்பது தான், மக்களின், 'டவுட்!'

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: ஊடகங்கள் திட்டமிட்டு, தி.மு.க.,வை ஒழிக்க பிரசாரம் செய்து, குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன. அதை முறியடிக்கவே, கிராம சபைக் கூட்டங்களை கூட்டி வருகிறோம்.

டவுட் தனபாலு: கிராம மக்கள் மீதான அக்கறையில், இதைச் செய்யலையா... எதிர்க்கட்சியாக, தி.மு.க., என்ன ஆக்கப்பூர்வமான செயலைச் செய்து இருக்கு என்ற, ஊடகங்களின், 'டவுட்'டுக்கு பதில் சொல்லத்தான், கிராம சபைக் கூட்டம் நடத்துறீங்களா...! ஆனா இது, மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் கமலோட திட்டமாச்சே... நேத்து துவக்கப்பட்ட கட்சியின் திட்டத்தை, பாரம்பரியம் மிக்க ஒரு கட்சித் தலைவர், 'காப்பி' அடிக்கலாமாங்கற, 'டவுட்'டும் கிளம்புது!
பிரதமர் நரேந்திர மோடி: 'லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி' என, கேள்வி எழுப்பப்படுகிறது. தேசிய அரசியலில், 20 ஆண்டுகளுக்கு முன், வெற்றிகரமான கூட்டணியை அமைத்தவர், முன்னாள் பிரதமர் வாஜ்பாய். கூட்டணி விஷயத்தில், வாஜ்பாய் காட்டிய வழியை பின்பற்றுவோம்.

டவுட் தனபாலு: 'தி.மு.க.,வை பற்றி, வாஜ்பாய்க்கு தெரியாதது எதுவும், எங்களுக்கு தெரியப் போவதில்லை... பலவற்றையும் ஆராய்ந்துதான், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்திருப்பாரு... அமைச்சரவையில் அவர்களுக்கு இடமளித்து இருப்பார்'னு, சொல்ல வர்றீங்களா... இதைக் கொஞ்சம் விரிவாகச் சொன்னால் தானே, பல, 'டவுட்'கள் தீரும்...!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    பல ஆண்டுகளுக்கு முன்பாகவே கிராமங்களில் கூட்டம் நடத்தியது பா.ம.க. என்று நினைவு

Advertisement