Advertisement

அடாவடி தி.மு.க., பிரமுகரை காப்பாற்றுவதால் அதிருப்தி!

''ஆவினுக்கு, 30 கோடி ரூபாய் கடன் குடுத்திருக்காங்ணா...'' என, காபியை பருகியபடியே, விஷயத்தை ஆரம்பித்தார் கோவை, கோவாலு.''கடன் குடுத்தது யாருங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.''வேலுார் ஆவின், 35 கோடி லாபத்துல இயங்கி, இப்ப, 17.5 கோடி ரூபாய் நட்டத்துல இயங்குறதா ஏற்கனவே பேசியிருந்தோம்... சென்னையில இருந்து வந்த ஆவின் விஜிலென்ஸ் அதிகாரிகள் ஆய்வு நடத்தி, நிறைய முறைகேடுகளை கண்டுபிடிச்சாங்ணா...''இதுல சம்பந்தப்பட்டவங்க மேல, சீக்கிரமே நடவடிக்கை வரும்னு சொல்றாங்க... இதுக்கு நடுவால, பால் உற்பத்தியாளர்களுக்கு பணம் தர முடியாமலும், ஊழியர்களுக்கு சம்பளம் போட பணமில்லாமலும், வேலுார் ஆவின் தவிக்கிறதால, அரசு தரப்புல, 30 கோடி ரூபாய் கடன் குடுத்திருக்காங்ணா...''பொங்கல் பண்டிகை வர்றதால, பால் உற்பத்தியாளர்களுக்கு பட்டுவாடா செய்யுங்கன்னும் உத்தரவு போட்டிருக்காங்க... 'இந்த நிதியை நல்ல விதமா பயன்படுத்தி, வேலுார் ஆவின் லாப பாதைக்கு திரும்பணும்'னு, பால் உற்பத்தியாளர்கள் சொல்றாங்ணா...'' என்றார் கோவாலு.''செஞ்சிலுவை சங்க தலைவரை, புடி புடின்னு புடிச்சிட்டாரு பா...'' என, அடுத்த தகவலுக்கு தாவிய அன்வர்பாயே தொடர்ந்தார்...''செஞ்சிலுவை சங்கத்தின், தமிழ் மாநில கிளையின், ஆண்டு பொதுக்குழு கூட்டம், சமீபத்துல சென்னையில நடந்துச்சு... இதுல, பதவி வழி தலைவரான கவர்னர் புரோஹித்தும் கலந்துக்கிட்டாரு பா...''அப்ப, '2013- - 18 வரை, அஞ்சு வருஷ கணக்குகளை ஏன் தாமதமா ஒப்படைச்சீங்க... வருஷா வருஷம் பொதுக்குழு கூட்டத்தை நடத்தாதது ஏன்... வரவு, செலவு கணக்குகளை, பொதுக்குழுவுல விவாதிச்சு ஒப்புதல் வாங்காதது ஏன்'னு, அடுக்கடுக்கான கேள்விகளை கவர்னர் எழுப்புனாரு பா...''இதுக்கு பதில் தர முடியாம, மாநில தலைவர், ஹரிஷ் மேத்தா தவியா தவிச்சார்... 'டென்ஷன்' ஆன கவர்னர், பொதுக்குழு கூட்டத்தை ஒத்தி வச்சுட்டு, பாதியிலயே எழுந்து போயிட்டார்... பொதுக்குழு தீர்மானம் எதுக்கும் அவர் ஒப்புதலும் தரலை பா...'' என்றார் அன்வர்பாய்.''வழக்குல சிக்குனவரின் பதவியை காப்பாத்திட்டு இருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.''யாரைச் சொல்றீர் ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.''சென்னை, நுங்கம்பாக்கத்துல, சாலை போடுற பணி நடந்தப்ப, கான்ட்ராக்டரிடம், 'கட்டிங்' கேட்டு தகராறு செஞ்ச, ஆயிரம் விளக்கு பகுதி, தி.மு.க., நிர்வாகியை, போலீசார் கைது பண்ணி, ஜெயில்ல அடைச்சாவ... ஜாமின்ல வந்த நிர்வாகியின் கட்சி பதவியை பறிக்க, மாவட்டச் செயலர், தலைமைக்கு பரிந்துரை செஞ்சாரு வே...''ஆனா, அவரது பதவியை பறிக்க, தலைவரின் குடும்பத்துல இருக்கிற சிலரே முட்டுக்கட்டை போடுதாவளாம்... 'ஏற்கனவே, பிரியாணி கடைக்காரங்களை தாக்குனவர், பியூட்டி பார்லர் பெண்ணை தாக்குன, தி.மு.க., நிர்வாகிகள் மேல மட்டும் நடவடிக்கை எடுத்தாங்களே... இவரை மட்டும் ஏன் காப்பாத்திட்டு இருக்காங்க'ன்னு, அறிவாலய வட்டாரத்துலயே புலம்புதாவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.''என்ன மகேஷ்குமார்... பனி ரொம்ப ஜாஸ்தியா இருக்குன்னு, மப்ளரோடயே சுத்திண்டு இருக்கேள் போலிருக்கு... மதிய நேரத்துல வெயில், மண்டையப் பொளக்கறதே...'' என, டீக்கடைக்கு வந்த ஒருவரைப் பார்த்துக் கேட்டபடியே குப்பண்ணா கிளம்ப, மற்றவர்களும் பின் தொடர்ந்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    மாதாமாதம் ஒழுங்காக கப்பம் கட்டும் ஒருவர் மீது நடவடிக்கைஎடுக்க கலகக்குடும்பம் சம்மதிக்குமா ஐயா சொல்வது கொஞ்சம் கூட நியாயமில்லையே

Advertisement