Advertisement

'மோடியுடன் கூட்டணி கிடையாது' : அடித்துச் சொல்கிறார் ஸ்டாலின்

சென்னை: 'பா.ஜ.,வுடன், தி.மு.க., ஒரு போதும் கூட்டணி அமைக்காது' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: 'வாஜ்பாய் கலாசாரத்தைப் பின்பற்றி, நம் பழைய நண்பர்களை வரவேற்க, நாம் எப்போதும் தயாராக இருக்கிறோம். கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன' என, பிரதமர் மோடி கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள தன் கட்சி நிர்வாகிகளுடன், வீடியோ கான்பரன்சில் பேசுகையில், இவ்வாறு குறிப்பிட்டது வியப்பாகவும், விசித்திரமாகவும் உள்ளது. 'சரியான மனிதர்; தவறான கட்சியில் இருக்கிறார்' என, கருணாநிதியால் வர்ணிக்கப்பட்டமுன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன், பிரதமர் மோடி தன்னை ஒப்பிட்டுக் கொள்வது வேடிக்கையாகவும், வினோதமாகவும் உள்ளது.இது, வழக்கம் போல, மோடியின் பிரசார யுக்தியாகவே உள்ளது.
நாட்டின் வளர்ச்சிக்கு, ஒரு நிலையான ஆட்சி தேவை என்ற, ஒரே உன்னத நோக்கத்திற்காக, பா.ஜ., இடம்பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியில், குறைந்தபட்ச செயல் திட்டம் உருவாக்கிய பிரதமர் வாஜ்பாயுடன், தி.மு.க., கூட்டணி வைத்தது. ஆனால், பிரதமர் மோடி, வாஜ்பாயும் அல்ல; அவர் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, வாஜ்பாய் உருவாக்கியது போன்ற ஆரோக்கியமான கூட்டணியும் அல்ல. மதச்சார்பின்மை, சமூக நீதி, சமத்துவம், கூட்டாட்சித் தத்துவம், மாநில உரிமைகள் எல்லாம் தனக்கு வேண்டாத வார்த்தைகள் என்ற விபரீத மனப்பான்மையில், நான்கரை ஆண்டுகளாக, பிரதமர் மோடி செயல்படுகிறார். அவரது தலைமையிலான, பா.ஜ.,வுடன், தி.மு.க., ஒருபோதும் கூட்டணி வைக்காது என்பதை, மீண்டும் ஆணித்தரமாக விளக்க விரும்புகிறேன்.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (40)

 • S.BASKARAN - BANGALORE,இந்தியா

  மோடியுடன் சேர்த்தால் மோசடி செய்ய முடியாது போலும்.

 • மெய்கண்டான் - Chennai,இந்தியா

  மக்களே இவர் யாருடன் கூட்டணி வைக்கின்றாரோ அவர்கள் கண்டிப்பாக கொள்கையாடிக்க துணை போகின்றவராகவே இருப்பார்.

 • Siva - Aruvankadu,இந்தியா

  இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்.....

 • Viswanathan - karaikudi,இந்தியா

  எல்லாம் சரி , சமூக நீதின்னா என்னங்க ? உங்கள் குடும்பத்தில் இருந்து நீங்களே திமுக தலைவராக இருப்பதா , வீரமணியை திக கட்சியின் தலைவராக இருப்பதா , இது தான் சமூக நீதின்னா இப்படி ஒரு சமூக நிதியே தமிழனுக்கு தேவையில்லிங்கோ

 • Sridhar Rengarajan - Trichy,இந்தியா

  ஸ்டாலின் அவர்களே மோடி உங்களுக்கு சரிப்பட்டு வரமாட்டார். உங்களுக்கு ஏற்ற கட்சி காங்கிரஸ்தான். தமிழ்நாட்டு மக்களுக்கு திமுக காங்கிரஸ் கூட்டணி பழகிவிட்டது. ஸ்பெக்ட்ராமில் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்ததாகட்டும், இலங்கையில் அப்பாவி தமிழ்மக்கள் ஒன்றரை லட்சம் பேர் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்று பாராமல் துடிக்க துடிக்க கொன்று குவித்த மகாபாதக செயலுக்கு உறுதுணையாக இருந்ததாகட்டும் கச்சத்தீவை சிங்களனுக்கு தாரைவார்த்ததாகட்டும் காங்கிரசும் திமுகவும் கூட்டாளிகள். அது மக்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. அதுமட்டுமல்ல, இந்த தேசத்தை பிடித்த தொழுநோய் வாரிசு அரசியல், குடும்ப அரசியல், வாரிசு அரசியல் போன்ற அயோக்யத்தனத்துக்கு நீங்கள் இருவரும்தான் அடையாளம். மைனாரிட்டி வாக்குகளை அண்டிப்பிழைப்பு நடத்தும் திமுகவும் காங்கிரஸும்தான் இயற்கையான கூட்டணி. பிரதமர் மோடி உங்களுக்கு சரிப்பட்டு வரமாட்டார்.

Advertisement