Advertisement

'நன்மை செய்பவரை ஆதரிப்போம்!' : தேர்தல் கூட்டணி குறித்து பழனிசாமி பேச்சு

சென்னை: ''தமிழகத்துக்கு யார் நன்மை செய்கின்றனரோ, அவர்களே, மத்தியில் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது தான், எங்கள் நிலைப்பாடு; அவர்களை தான், நாங்கள் ஆதரிப்போம். தமிழக மக்களுக்கு துரோகம் நினைப்பவர்களை, நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம்,'' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

காஞ்சிபுரம், திருவள்ளூர், வட சென்னை வடக்கு, திருவண்ணாமலை வடக்கு, கடலுார் கிழக்கு மாவட்டங்களை சேர்ந்த, அ.ம.மு.க., - பா.ம.க., - தே.மு.தி.க., காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த, 1,400 பேர், அ.தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சி, நேற்று சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில், முதல்வர் பழனிசாமி பேசியதாவது:மக்களுடைய பிரச்னையை தீர்க்கக்கூடிய ஒரே கட்சி, அ.தி.மு.க., தான். மற்ற கட்சிகள் எல்லாவற்றிலும், குடும்ப அரசியல் தான் தலைதுாக்கி இருக்கும். தி.மு.க.,வை எடுத்துக் கொண்டால், கருணாநிதி மறைந்தார்; அவரது மகன் ஸ்டாலின் வந்து விட்டார். அடுத்து, உதயநிதி வரப் போகிறார். கருணாநிதி இருந்தபோதே, அவரது மகள் கனிமொழி, தயாநிதி, அழகிரி என,அவரது குடும்பத்தை சேர்ந்தோர் தான், பதவிக்கு வர முடிந்தது. அ.தி.மு.க.,வில் சாதாரண தொண்டன் கூட, உயர் நிலைக்கு வர முடியும்.

தமிழகத்திலும், இந்தியாவிலும், எத்தனையோ கட்சிகள் உள்ளன. ஆனால், ஆளக்கூடிய கட்சியில், சிறந்த கட்சி, அ.தி.மு.க.,வாக தான்இருக்க முடியும். ஸ்டாலின், ஒவ்வொரு ஊராட்சியாக சென்று, கூட்டம் போட துவங்கி உள்ளார். ஏற்கனவே, எம்.எல்.ஏ.,வாக இருந்தவர்; உள்ளாட்சி துறை அமைச்சராக, துணை முதல்வராக இருந்தவர். அப்போதெல்லாம் கிராமத்திற்கு சென்று பார்க்காதவருக்கு, இப்போது தான் ஞாபகம் வந்திருக்கிறது. நாங்கள், கிராமத்தில் பிறந்து, வளர்ந்தவர்கள். கிராம மக்களுக்கு, என்ன வேண்டும்; எதை செய்ய வேண்டும் என்பது தெரியும். கிராமத்தையே பார்க்காதவர், ஸ்டாலின். ஏனென்றால், அவர் சென்னையில் பிறந்து, வளர்ந்தவர். பதவியில் இருக்கும்போது செய்ய மறுத்து விட்டு, இப்போது, கிராமத்திலிருந்து அரசியல் என்ற, புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்து இருக்கிறார். அனைத்து கட்சிகளையும் கூவி அழைத்து, கூட்டணி சேர்க்கிறார். எங்களை பொறுத்தவரை, தமிழகத்துக்கு யார் நன்மை செய்கின்றனரோ, அவர்கள், மத்தியில் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது தான் நிலைப்பாடு; அவர்களை தான் ஆதரிப்போம். தமிழக மக்களுக்கு துரோகம் நினைப்பவர்களை, நாங்கள், ஒருபோதும் ஏற்க மாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.

துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது:
அ.தி.மு.க., என்பது, ஒரு பூஞ்சோலை மட்டுமன்று; பல்லாயிரம் உயிர்களுக்கு
வாழ்வு தரும் மலர்வனம். தொண்டர்களுக்காக, தொண்டர்களால் நடத்தப்படும் இயக்கம்.இங்கு, பணம் பெரிதல்ல; பிறந்து வளர்ந்த பரம்பரை பெரிதல்ல; உழைப்பு இருந்தால் போதும். கடும் உழைப்பும், தலைமை மீது விசுவாசமும் இருந்தால், எந்த ஒரு சாதாரண தொண்டனும், கட்சி தலைமை பொறுப்புக்கு வர முடியும்; முதல்வராக முடியும்.

எந்த எளிய தொண்டனும், அமைச்சர் பதவி பெற முடியும். இருபது தொகுதி இடைத்தேர்தல் எதிர் நிற்கிறது. உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. லோக்சபா தேர்தல், நம்மை எதிர்கொள்ள காத்திருக்கிறது. களம் எதுவாயினும், எதிர்த்து நிற்கும் படை எதுவாயினும், அதை வெற்றி கொள்கிற ஆற்றல், கட்சிக்கு உண்டு. ஒற்றுமையாய் களத்தில் நின்று, ஓய்வறியா உழைப்பை நல்கி, வெற்றிக் கனியை ஈட்டுவோம்.இவ்வாறு, அவர் பேசினார். அமைச்சர் பாண்டியராஜன் வரவேற்றார். அமைச்சர், எம்.சி.சம்பத் நன்றி கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (23)

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  அதிமுக பூஞ்சோலை, மலர்வனம்.. ஆஹா.. ஹா.. ஆஹா.. அப்படீன்னா குரங்குகளுக்கு அங்கே என்ன வேலை?

 • kavitha kovai -

  you are great Mr EDDAPPADI PALANISAMY I like you

 • Visu Iyer - chennai,இந்தியா

  அதிமுக தனியாக நின்றாலே வெற்றி பெரும்.. கூட்டணி என்ற வலையில் வேறு எந்த கட்சியுடன் சேர்த்தாலும் அது விழும்.. (அது பாஜக வாகவே இருந்தாலும்) அதிமுக கூட்டணி வைக்காமல் தனியாக நின்றாலே அறுதி பெரும்பான்மை பெற முடியும்..

 • ஆப்பு -

  இவிங்க ஆட்சியாலேயே தமிழகத்துக்கு நன்மை இல்லை.

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  எது எப்படியோ இந்த ஊழல்திமுகவை மட்டும் உள்ளே விடாமல் இருந்தால் சரி முதல்வரே....

 • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

  எனக்கு தெரிந்து நமக்கு நன்மை செய்தது பிஜேபி தான் காவேரிமேலாண்மை அமைத்து இன்னும் அதற்க்கு தலைவர் அறிவிக்காததால் மசூத் என்ற மாங்கா மேகதாது க்கு வரைவு திட்டம் மேலாண்மை வந்தது அதற்கு தலைவர் ஏன் நியமிக்க வில்லை என்னமோ AIMS வந்து விட்டதாம் 2015 இல் சொன்னது இன்னும் ஒருவாரத்தில் அறிவிக்க வேண்டும் என்று கோர்ட்டு சொன்ன வுடன்தான் வந்தது என்னமோ பிஜேபி மனம் வந்து கொடுத்தது போல அடுத்து நீட் இதுவும் பிஜேபி நமக்கு போட்ட பெரிய நாமம், இன்னும் மீத்தேன் ஏதேன் என்ற பாலைவனமாகும் திட்டங்களை திணித்து நம்மை திக்கு முக்காட வைத்த்த பிஜேபி தான் தமிழ்நாட்டிற்கு நிறய செய்துள்ளது அதுவும் வச்சி வச்சி செய்துள்ளது ஆகவே அவர்கள் சால சிறந்தவர்கள் தான்

 • rajan. - kerala,இந்தியா

  அப்போ கூலிப்படை திராவிட கட்சிகளுக்கு ஒய்வு கொடுத்து விட்டால் போதுமே நாடும் உருபட்டுருமே

 • rajan. - kerala,இந்தியா

 • மதுவந்தி -

  அதைதான் மக்களும் சொல்லப் போகிறார்கள் விரல்களால் .

 • tamil - coonoor,இந்தியா

  ஈ.பி.எஸ்/. ஓ.பி.எஸ். சுக்கு நன்மை செய்பவர்களை ஆதரிப்பார்கள்,

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  'நன்மை செய்பவரை ஆதரிப்போம்' தவறு 'ஆட்சியை காப்பாற்றுபவரை ஆதரிப்போம்' என்று சொல்லுங்கள்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  எல்லாம் பேச்சுதான் செயலில் ஒன்றும் இல்லை

 • ravisankar K - chennai,இந்தியா

  தமிழ் நாட்டில் எந்த மத்திய அரசாங்கம் செய்த துரோகத்தைவிட திராவிடம் செய்த துரோகம் மிக அதிகம் . மது விலக்கை நீக்கி தமிழ் நாட்டை குடிவெறியில் ஆழ்த்தியது திராவிட கட்சிதான் . நீட் தேர்வு வேண்டும் வேண்டாம் என்பது வேறு விவாதம் . நீட் தேர்வில் தமிழ் நாடு மாணவர்கள் தேர்ச்சி பெரும் சதவீதம் - 40 கேரள ஆந்திர மாணவர்கள் - 70 . கல்வி அறிவு எங்கு வளர்ந்துள்ளது ??.. நீட் தேர்வுக்கு முன்பு +2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்கள் வெறும் 100 - 150 பேர் தான் . மற்ற அனைவரும் வசதியான குடும்பத்தில் தனியார் பள்ளியில் படித்தவர்கள் . பள்ளி கல்விக்கு மட்டும் அரசாங்கம் செலவு செய்வது பல ஆயிரம் கோடிகள். மருத்துவ மேல் படிப்பு உட்பட வெளி மாநிலங்களில் படிக்கும் தமிழ் மாணவர்கள் ஏராளம் . GST யை நடைமுறைப்படுத்தியதில் பல சிக்கல்கள் . கணினி தொழில் மற்றும் எந்த தொழிலுக்கு தமிழர்கள் வெளி மாநிலம் தான் செல்ல வேண்டும் . கணினி கம்பெனிகள் கூட தமிழ் நாட்டுக்கு வருவது கிடையாது .

 • suresh - chennai,இந்தியா

  மேட்டருக்கு வராமல் எடப்பாடி சுத்தி வளைச்சு பேசுறாரே? மோடியின் சட்டை பாக்கெட்டின் உள்ளே உட்கார்ந்து கொண்டு உரக்க கூவும் இவரது உள்குத்து அனைவரும் உணர்வர்.

 • suresh - chennai,இந்தியா

  எடப்பாடியாரே, நீங்க யாரை வேணும்னாலும் ஆதரிங்க. வி டோன்ட் கேர். ஆனால், மக்கள் உங்களை ஆதரிக்கவில்லை என்பதை சீக்கிரம் புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க.

 • blocked user - blocked,மயோட்

  தமிழர்களின் தலையெழுத்து இரண்டு திருடர்களை ஒப்பிட்டு ஒருவனை தேர்வு செய்ய வேண்டும்... அதில் திமுகவால் கெடுதல் அதிகம்... ஆகவே குறைவான கெடுதல் உள்ள அதிமுகவை ஆதரிப்பது தமிழகத்துக்கு நல்லது...

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  "நன்மை செய்பவரை ஆதரிப்போம்" தேர்தல் கூட்டணி குறித்து பழனிசாமி பேச்சு. இத்துடன் இன்றைய காமெடி நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன. மீண்டும் காமெடி நிகழ்ச்சிகள் நாளை தொடரும்.

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  மத்திய அரசு நியாயமாகவே நடக்கிறது.........ஆந்திராவுக்கு கூட சிறப்பு நிதி கொடுக்கவில்லையே........ கூட்டணி உடைந்தாலும் நாட்டு நலனே முக்கியம் என்பதால்..............இந்நேரம் கட்டிங் காங்கிரஸ் இருந்தால் நிதி கொடுத்து தனது கட்டிங் தொகையே சரியாக பெற்றிருக்கும்........

 • Amirthalingam Sinniah - toronto,கனடா

  கிராமத்தில்,பொலீசாருக்கு இரும்பு குழலால் அடித்ததை கூறவில்லை.அடுத்து,நேருவின் வாரிசு,டாக்டர் ராம்தாஷ் வாரிசு பற்றி கூற மறந்துவிட்டீர்கள்.

 • Vanavaasam - Dallas,Fort Worth,யூ.எஸ்.ஏ

  மன மோகன் சிங் ஆட்சியை விட மோடி ஆட்சி தமிழகத்துக்கு 100 மடங்கு பெட்டர் ...

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  மத்திய அரசு நமக்கு நீட் கொடுத்து, வடஇந்திய மாணவர்களுக்கு நமது மெடிக்கல் காலேஜில் இடம் தந்ததால், நமது மாணவர்கள் படிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. புதிய நிதி கொள்கையால் தமிழகத்திடம் இருந்து நாற்பதாயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு எடுத்து கொண்டது. இதனால் தமிழகத்தின் பாரம் குறைந்தது. ஒக்கி, வரதா, கஜா புயலுக்கு நமக்கு நாமம் போட்டது. இதனால் நமது நமது நெற்றி வலுவானது. புதிய gst கொள்கையால், உற்பத்திமாநிலமான தமிழகத்தின் இருபத்தைந்தாயிரம் கோடி ரூபாய் வரிவருவாய் குறைந்து, வடஇந்தியமாநிலங்களுக்கு வருவாய் சென்றதால், நாம் எப்படி செலவு செய்வது யோசித்து கொண்டு இல்லாமல் போக நேர்ந்தது. இது மட்டுமன்றி, ஸ்டெர்லைட் திறந்தது. இதனால் தமிழர்களுக்கு கான்செர் கிடைத்தாலும், வேலையும் கிடைத்தது. காவேரி நீர் கொடுக்காமல் ஏமாற்றியது. இதனால் நமது விவசாயிகள் இனி கணினி வேலை செய்து லட்சக்கணக்கில் சம்பாரிப்பார்கள். மேகதாதுவிற்கு அனுமதி கொடுத்ததால், இனி சுத்தமாக நீர் வராது. அதனால் தமிழர்கள் யாரும் குளிக்க வேண்டாம். இவ்வளவு நல்லசெயல்கள் செய்த மத்திய அரசிற்கு, பழனி ஆதரவு தெரிவிக்காமல் இருக்க முடியுமா?

  • Manian - Chennai,இந்தியா

   அன்பு நீ சொல்வதெல்லாம் சரி என்று வைத்து கொள்வோம். (1) ஆனால், இந்த நமது தமிழ் (?) அரசாங்கம் ஏன் இலவசம் என்று தங்கள் திருடர்கள் கட்சி தொண்டர்களுக்கு மட்டுமே பொது ஜன வரியை இனாமாக கொடுக்கிறது? (2) ஏன் லஞ்சம் மூலம் 40 % கட்டிங் கேட்கிறது?? (3) ஏன் எல்லா பொது காண்டிராக்டுகளையயும் தங்கள் சொந்தங்களுக்கே கொடுக்கிறது? (4) ஏன் எந்த வேலைக்கும் தகுதி இல்லாவர்களை, தங்கள் 3 ஜாதியினர்களையே லஞ்சம் வாங்கி அரசாங்க வேலை கொடுக்கிறார்கள்? (4)அடிப்படை வசதிகள்-நிலம். நீர், மின்சாரம், மருத்துவம், கல்வி, போக்குவரத்து, 80% திறைமை வாய்ந்த தொழிலாளிகள்- எதுவுமே செய்யாமல், புதிய தொழில்கள்-வேலைகள் வராமல் செய்தவவர்கள், வரிப்பணத்தை ஓட்டு வாங்க சிலவு செய்பவர்கள்,திருடர்கள் கழக அரசா,இல்லை மத்திய அரசா? ஆகவே, திருடர்கள் கழக கொள்ளையர்களா இருக்குவரை, எல்லா வரியையும் தமிழ் நாட்டுக்கு தந்தாலும், அது அரசியல் வியாதிகள் பையிலேதான் நிறையும் என்பதை மறுக்க முடியுமா? (5) மேலும், போலி சாதி சான்று கொடுத்து, மூன்றே ஜாதியினரில், 25 % பேர்களே 98 % இட-பொருளாதார ஒதுக்கீட்டில் இதுவரை கொள்ளை அடிப்பதை தடுக்க முடியவில்லை. மற்றய2020 மலை ஜாதியினர், தலித்துக்கள் ஏன் வஞ்சிக் படுகிறார்கள் என்பதை உனது வாதத்தால் இல்லை என்று நிரூபிக்க முடியுமா? (6) நாடு என்பது ஒரே பக்கம் அச்சடித்த பண நோட்டு இல்லை. அதில் இரண்டு பக்கமும் இருக்கவேண்டாமா? எல்லா உண்மைகளையும் சொல்லி, பின் குற்றம் சாடடினால் உனக்கு தலை வணங்குவோம். (7) ரயில், ஆகாய விமான தளங்கள், ரோடுகள், ராணுவ தளவாடங்கள்,..எல்லா மாநிலங்களிலும் வேண்டுமா, இல்லை அதற்கான சிலவை திருடர்கள் கழக பையில் நிறைக்க வேண்டுமா? (8) பாகிஸ்தான், சீனா படை எடுத்துவந்தால், முதலில் சாகப்போகிறவர்கள் தமிழர்களா? (9) வரியே கொடுக்காதவர்களை இப்போது தானே வரி கொடுக்க வைத்திருக்கிறார்கள். வெளி நாட்டு கடனுக்கு, இறக்குமதிக்கு வட்டியை வடகத்தியன் மட்டும்தான் தர வேண்டுமா? அரேபியர்களிடம் வாங்கிய எண்ணெயிலிருந்து தானே பெட்ரொல் இங்கே வருகிறது. அது ஓசியில் வருமா? ஒரு நாட்டின் பல தேவைகளும் உண்டு. அதில் எல்லோருக்கும் பங்கு உண்டு. கட்டை விரலைப் பார்த்து சுண்டு விரல் கோபப்பட்டால் கை என்பதே இருக்காது. 5 விரல்களில் ஒவ்வொன்றும் சமய சந்தர்பத்திற்கேப்ப வேலை செய்யும். சுண்டுவிரலே காதை குடைவதால், அதற்கு மட்டுமே முக்கியத்துவம் இருக்க முடியாது.

  • Muruga Vel - Chennai,இந்தியா

   இலங்கையில கொஞ்ச நாள் குடித்தனம் பண்ணி பாருங்க ..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement