Advertisement

'10 சதவீத இட ஒதுக்கீடு சரியே': ஜெட்லி

புதுடில்லி: ''பொருளாதார ரீதியில் நலிவடைந்தோருக்கு, பொதுப் பிரிவில், 10 சதவீத இடஒதுக்கீடு அளிப்பது, அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பை மீறுவதாகாது,'' என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.'பேஸ்புக்' சமூக வலைதளத்தில், மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி கூறியுள்ளதாவது: நம் நாட்டில், காலங்காலமாக சமூக ரீதியில் பாதிக்கப்பட்டோரை அடையாளம் காண, ஜாதி, முக்கிய குறியீடாகஉள்ளது. வறுமை என்பது, மதச்சார்பற்ற குறியீடாக உள்ளது. மதம், ஜாதி, இனம் என, அனைத்தையும் கடந்ததாக, வறுமை உள்ளது. எனவே, பொருளாதார ரீதியில் நலிவடைந்தோருக்கு, பொதுப் பிரிவில், 10 சதவீத இட ஒதுக்கீடு அளித்தல், அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பை மீறுவதாகாது.
அரசியல் சாசனத்தின் அறிமுக உரையில், 'சமூக, பொருளாதார, அரசியல் அடிப்படையில், பாரபட்சம் பாராது, அனைவருக்கும் சம வாய்ப்பு மற்றும் நீதி கிடைக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், அரசியல் சாசனத்தின் கட்டமைப்பை உருவாக்குவது எது என்பது தெளிவாக தெரிகிறது. பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு இட ஒதுக்கீடு அளிக்க, பெயரளவில், பிரதான எதிர்க்கட்சி, பரிதாபம் காட்டியது. உள் மனதில் திட்டியபடியே, இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (21)

 • jagan - Chennai,இந்தியா

  OBC MBC BC வீடு மக்கள் ரொம்ப கொழு கொழு என்று இருப்பார்கள்....இட ஒதுக்கீடு வாங்கி மற்றவர்கள் வரி பணத்தில் தின்பதால்

 • vel -

  திமுக ஒழிக்கப்பட வேண்டும். திமுகவின் அழிவில் தான் நாட்டின் முன்னேற்றமே அடங்கியிருக்கு .

 • S.Baliah Seer - Chennai,இந்தியா

  இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் பொருளாதார ரீதியாக சாதீய இட ஒதுக்கீடு என்ற வார்த்தையே இல்லை.சமூக ரீதியாக மட்டுமே கல்வி வேலை வாய்ப்புக்களில் இட ஒதுக்கீடு என்ற அம்பேத்காரின் நிலையில் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யங்கார் உடன்பாடு இல்லாத காரணத்தாலும்,வேறு சில காரணங்களாலும் அவர் மூவர் குழுவில் இருந்து வெளியேறியதாக ஒரு தகவல்.எப்படியிருப்பினும் பொருளாதார ரீதியாக சாதீய இட ஒதுக்கீடு என்பது சாத்தியம் ஆக வாய்ப்பு இல்லை. முற்பட்ட இனத்தவருக்கு 10 சதவிகித சாதீய இட ஒதுக்கீடு என்று அறிவிக்காதது ஏன்?

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  தறுதலைகள் என்று மிக.மரியாதையுடன் எழுதும் பேரற்ற கோழை அறிவது : 1. இது தம்மை மேல்ஜாதி என்று சொல்லி கொள்பவருக்கான இட ஒதுக்கீடு தான். 2. ஒரு OBC கேன்டிடேட்டின் தந்தையின் வருட வருமானம் ரூ. 8 லட்சத்துக்கும் குறைவு என்பதால் அவரால் இந்த பொருளாதார 10% கோட்டாவில் வேலைக்கு அப்ளை பண்ண முடியாதல்லவா? 3. ஒரு வீட்டில் தந்தை ரூ 7லட்சம் + தாய் 5 லட்சம் சம்பளம் வாங்குபவரின் பிள்ளைகள் அம்மாவின் சம்பளத்தை காட்டாமல் இட ஒதுக்கீட்டில் காலேஜ் ஸீட், வேலை வாங்கி விடுவார்கள். இந்தியா வின் HUF - ஹிந்து அன்டிவைடட் ஃபேமிலி அமைப்பில் "பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு" முடியாது. மாதம் ரூ.66,666 க்கு மேல சம்பளம் வாங்கும் குடும்பங்களை கண்டுபிடிக்கவே முடியாது. என் அக்கா பையன் ஜெர்மனி யில் வேலை பார்க்கிறார். மாதாமாதம் __ யூரோ அனுப்பறார். அதை காட்டாமல், அத்திம்பேர் சம்பளத்தை மட்டும் காட்டி, ரெண்டாவது பையனுக்கு அக்கா இட ஒதுக்கீடு கிடைக்கும் என்று செம குஷியில் அடுத்த மாதம் ஜெர்மனி போறா.

 • Suri - Chennai,இந்தியா

  சமூக ரீதியிலான ஏற்ற தாழ்வை களைய, நாட்டின் அனைத்து சமூக மக்களுக்கும் பிறப்பினால் மறுக்கப்பட்ட வாய்ப்பு திரும்பி கொடுக்க கொண்டுவந்த இடஒதுக்கீடு உரிமை. சலுகை அல்ல. உயர் ஜாதியினருக்கு கொடுப்பது சலுகை, மற்றும் பிச்சை. உஞ்சவிருத்தி பழக்கம் சுலபத்தில் கைவிடமுடியாது. 1891 அரசு பணியில் அமர்த்தப்பட்ட இந்தியர்களின் ஜாதி வாரி புள்ளி விவரமும் 60 வருடங்கள் இட ஒதுக்கீடு கொடுத்த பின்னரும் இப்பொழுது அரசு பணியில் உள்ள இந்தியர்களின் ஜாதிவாரி புள்ளி விவரமும் சமூக வலை தளங்களில் காண கிடைக்கிறது. அதில் இருந்தே தெரியும் உயர் ஜாதியினர் எப்படி முடிவு எடுக்கும் நிலைகளில் பெரும்பங்கு வகிக்கிறார்கள் . இதுவா நம் நாட்டின் அரசியலமைப்பின் நோக்கம்? சமூக ரீதியிலான சமன் நிலையையும் கொண்டு வரும் முயற்சிகளையும் , வேறுபாட்டினை களைய எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் முறியடிக்கும் தந்திரம் இவர்களுக்கு மட்டும் எப்படி கை வருகிறதோ?? இது பல பல நூற்றாண்டுகளாக அடுத்தவரை மூட நம்பிக்கை மூலம் கட்டுபடுத்தியே பழகியிருக்கிறார்கள். இடை நிலை வகுப்புகளுக்கு மத்தியில் சண்டையை மூட்டிவிட்டு அதில் குளிர் காணும் அயோக்கியத்தனம் இவர்களுக்கு பிறவியிலேயே வருகிறது.

Advertisement