Advertisement

தேசிய கவுன்சில் கூட்டம் : பா.ஜ., மேலிடம் ஆலோசனை

புதுடில்லி: டில்லியில் நேற்று துவங்கிய, பா.ஜ.,வின் தேசிய கவுன்சில் கூட்டத்தில், லோக்சபா தேர்தலை எதிர்கொள்வது உள்பட பல்வேறு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
விரைவில் லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளதை அடுத்து, தேர்தல் வேலைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக களமிறங்கி உள்ளன. இந்நிலையில், மத்தியில் ஆட்சியில் உள்ள, பா.ஜ.,வின் இரண்டு நாள் தேசிய கவுன்சில் கூட்டம், டில்லியில் நேற்று துவங்கியது. பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, கூட்டத்தைதுவக்கி வைத்தார். நாடு முழுவதும் இருந்து வந்திருந்த, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள், இதில் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், லோக்சபா தேர்தலுக்கான வியூகங்கள், பிரசார யுக்திகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளோருக்கு, பொதுப்பிரிவில், 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா, சமீபத்தில் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்தும், நேற்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள், பொருளாதார வளர்ச்சிக்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், அயோத்தி பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்த, கூட்டத்தில் ஆலோசனை நடத்தவுள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இன்று நடக்கும் நிறைவு நாள் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (14)

 • புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா

  ஊழல்திமுக கட்டிங் காங்கிரஸ் கூட்டணி??????

 • Appan - London,யுனைடெட் கிங்டம்

  இருபத்து ஒண்ணாம் நூற்ரான்டின் ஜோக் ..'தமிழ் நாட்டு பிஜேபி அமைச்சர் பொன்னர் சொல்கிறார் மோடியின் ஆதரவோடு தமிழகத்தல் பிஜேபி 30 க்கும் மேற்பட்ட எம்.பி சீட்டை வெல்லும்,' வட இந்தியாவில் தான்பிஜேபி இருந்தது..இப்போ அதுவும் கரைந்து விட்டது..இப்போ நடக்கிற செயல்களை பார்த்தால் -சி.பி.ஐ டைரக்டரை பதவி நீக்கம் அதுவும் இரவு ஒரு மணிக்கு செய்வது, ஆர்.பி.ஐ கவர்னரை ஓட விட்டது,உச்ச நீதி மன்றத்தை விபசாரிப்பது , RTI க்கு ஆட்களை நியமிக்காமல் அதை முடக்குவது, லோக்தாயத்தை இன்னும் நியமிக்க விலை...இப்படி எல்லா கண்காணிக்கும் அமைப்புகளை மோடி இரும்பு கரம் கண்டிக்கு அடக்குகிறார்..மோடி பிரஸ் மீட்டு செய்வதில்லை..இந்த ஐந்து வருடத்தில் ஒரு முறையும் செய்ததில்லை..அதோடு பாராளுமன்றத்திற்கு வருவதில்லை. எப்போதும் கோட்டு சூட்டு போட்டு வெளிநாட்டு சுத்துவது தான் மோடி... .இவர் எப்படி பி.எம் ஆக நீடிக்க முடியும்..அரசர்கள் கூட அமைசர்களின் எண்ணத்தை அறிந்து செயல் படுவார்கள்..முடிசூட்ட மன்னன் மோடி யாரையும் மதிப்பதில்லை..அப்புறம் எப்படி பிஜேபி இந்தியாவில் இருக்கும்..?

 • siriyaar - avinashi,இந்தியா

  அமித்சா மோடியை ஜெயிக்க வைக்கிறாறோ இல்லையோ ராகுல் ஜெயிக்க வைப்பார்.

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  கள யதார்த்தத்தை இவர்களால் மனம் விட்டுப் பேச முடியுமா......பேசினால் உள்ளதும் பிச்சிக்குக்கும்.

 • tamil - coonoor,இந்தியா

  இந்த ஐந்து வருடத்தில் தங்களின் மேலாதிக்க உணர்வினால் இருந்த நண்பர்களை இழந்தது தான் மிச்சம், தாங்கள் நினைப்பதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், அல்லது தங்களின் எண்ணத்தை மற்றவர்களின் மீது திணிக்க வேண்டும், இது தான் ஆலோசனை

Advertisement