Advertisement

ஸ்டெர்லைட் சார்பில், ரூ.100 கோடியில் 6 புதிய சமூக நலத்திட்டங்கள்

துாத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலை சார்பில், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஆறு புதிய சமூக நலத் திட்டங்கள், துாத்துக்குடியில் மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டது.


துாத்துக்குடியில், மக்கள் எதிர்ப்பைக் காரணம் காட்டி, கடந்த மே, 28 தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்து மூடியது. இதை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம், பசுமை தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், சில நிபந்தனைகளுடன் ஆலை இயங்கலாம் என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்தும், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.


இந் நிலையில், பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு நடைபெறும் போது, மீண்டும், 100 கோடி ரூபாய் நலத்திட்டங்களுக்கு செலவிடத் தயாராக இருப்பதாக தெரிவித்தது. இதன்படி, ஆறு புதிய சமூக நலத்திட்டங்களை, துாத்துக்குடி மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தியது.


இந்த திட்டங்கள் குறித்து, ஆலையின் துணைத் தலைவர், தனவேல் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த, ஆறு மாதங்கள், நாங்கள் மக்களுடன் கலந்துரையாடி, அவர்களின் விருப்படி, ஆறு புதியத் திட்டங்களை உருவாக்கியுள்ளோம்.
பசுமையானத் துாத்துக்குடி என்ற திட்டத்தின் கீழ், மூன்று ஆண்டுகளில், 10 லட்சம் மரக்கன்றுகள் நடுவது. ஆலையைச் சுற்றியுள்ள, 15 கிராமங்களில், 20 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டம்.


மாணவர்கள், 1,500 பேர் பயன்பெறும் வகையில், தரமான கல்விச் சாலை.

மகளிர் சுயதொழில்மேம்பாடு மற்றும் வளர்ச்சித் திட்டம் - 5000 மகளிர் பயனடையும் வகையில்.

இளைஞர்கள் பயன்பெற வேலை வாய்ப்பு பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 5,000 இளைஞர்கள் பயன்பெறும் வகையில்.

ஆண்டுக்கு, 1.5 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், 100 படுக்கை வசதி உடைய பல்நோக்கு மருத்துவமனை. ஆகிய ஆறு திட்டகள் செயல்படுத்தப்பட உள்ளன.

இந்த திட்டங்கள் நிறைவேறும் நாளில், துாத்துக்குடியின் சமூக பொருளாதாரம் மேம்பட்டு இருக்கும். ஆலையை மீண்டும் திறப்பதற்கும், இந்த திட்டங்களுக்கும், எந்த தொடர்பும் இல்லை. ஸ்டெர்லைட் ஆலை செய்த, பல்வேறு சமூக நலத்திட்டகளில் இது அடுத்த நிலை.
இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (14)

 • Viswam - Mumbai,இந்தியா

  ஏறக்குறைய 10 மில்லியன் டன் காப்பர் உற்பத்தி செய்யும் இந்தியா, ஸ்டெர்லைட் ஆலை மூடியதால் (4 மில்லியன் டன்) அந்நிய செலாவணி ஈட்ட முடியாமல் தவிக்கும் நிலையில் உள்ளது. எல்லா நன்மையையும் சீனாக்காரனுக்கே, ஏனென்றால் அவனுடைய செப்பு ஏற்றுமதி உயர்ந்து வருகிறது.மதமும் சர்ச்சும் அரசை எதிர்ப்பதையும் மற்றும் தொழிற்சாலைகளை மூடும் அபாயத்தை உணர்ந்துதான் சீனாக்காரன் தீடீரன்று புத்தீசல் போன்று முளைக்கும் சர்ச்சுகளை மூடவைத்து அதில் இருக்கும் ஆசாமிகளை லபக்கென்று தூக்கி கண்காணா இடத்துக்கு கொண்டுபோய் நூங்குஎடுப்பது அடிக்கடி நடந்து வருகிறது. அதேபோல இஸ்லாம் மதத்தையும் சீனவழிபடுத்துதல் இப்போது அங்கு துவங்கியுள்ளது. போன வார பேப்பர்களை பார்த்தாலே என்ன நடக்கிறது என்று தெரியவரும். அதுமாதிரி எல்லாம் நமது தேசத்தில் நடக்க வாய்ப்பில்லை. ஆகையால் மதவெறியர்கள் மதம் மீறி வாழ்வாதாரத்தை குலைக்கும் செயலில் ஈடுபடுவதை தடுக்கமுடியாமல் செகுலர் போர்வையில் தவிக்கும் நிலை இங்குள்ளது. அதே சமயத்தில் சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தாத மாதிரி தொழிற்சாலைகளை மாற்றி அமைப்பதே நமக்கு நல்லது. தை பிறந்தால் நல்ல வழி பிறக்கும் என்று பொங்கலை கொண்டாடுவோம்.

 • Nepolian S -

  ஏமாற்று வேலை ...மக்களை இவர்கள் நாய்களுக்கு எலும்பு போடுவது போல் நினைத்து விட்டார்கள் .. எலும்பும் நாய்கள் குரைக்கிறதே என்பதால் தான் தற்போது போட முன்வந்துள்ளனர்

 • கலியுக கண்ணன் - உன்னதமான பாரதம் ,இந்தியா

  ஸ்டெர்லைட்டை ( வேதாந்தா 🕉) எதிர்ப்பு இல்லாமல் திறக்கலாம் ( 2 வழிகள் ) .. 1.அனில் அகர்வால் - கிருஸ்துவனாக மதம் மாறினால்✝ , 2.ஸ்டெர்லைட் வேதாந்த வின் பெயரை - " சகாயமாதா காப்பர்"✝ கம்பெனி என்று மாற்றினால் எதிர்ப்புகள் நீங்கி ... கேன்சர் வரவில்லை என்று ரோமில் கிருஸ்துவ✝ மிஸ்ஸினரிஸ் போப் மிடம் இருந்து - தமிழ்நாடு சர்ச் பாஸ்டர் களுக்கு கட்டளை பிறப்பிக்க படும் ... உடனே மக்கள்ளிடம் ( 1 சண்டே சர்ச் கூட்டம் ) பிறகு டுமிளர்கள் , பொய் போராளிகள் ஆதரவு குடுக்க படும் ..... கேன்சர் என்ற ஒன்று 100% வரவே இல்லை என்று சொல்லப்படும் ... சுடலை ஸ்டாலின் அவர்கள் ரிப்பன் வெட்டி மறுபடியும் திறந்து🤝🏻 வைப்பார்... .. ( இதை விட தெளிவா சொல்ல முடியாது , புரிஞ்சவன்க புரிஞ்சிக்கோங்க.. ) (மீடியா , எதிர்கட்சி எல்லாம் யார் ✝ கண்ட்ரோல் இருக்குன்னு இப்போ புரியுதா ?) யாருக்கு நீங்க ஓட்டு போடணும்னு நீங்க தான் முடிவு பண்ணனும் ... பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு கொடுத்த பிறகு போராட்டம் செய்ய வாருங்கள் என்று கல்லூரி கல்லூரியாக ஏறி இறங்கிக்கொண்டுள்ளார்கள் மத மாற்ற கும்பல்கள் .

 • Nivas - Detroit,யூ.எஸ்.ஏ

  எனது ஆதரவு ஸ்டெர்லைட் ஆலைக்கே... ஸ்டெர்லைட் எதிரான அனைத்துக்கும் திட்டம்மிட்டு நடத்தப்படுவது... அனைத்துமே அன்னியகைக்கூலி... கூட்டம்... ஸ்டெர்லைட் மூலம் அந்த பகுதி மக்கள் வாழ்வாதரம் பெறுவார்.. இந்த அந்நிய கைகூலிகள் அவர்களை பிச்சை எடுக்கும் அளவிற்கு.. கொன்று சென்றுவிடுவார்..

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  "" ஆலையை மீண்டும் திறப்பதற்கும், இந்த திட்டங்களுக்கும், எந்த தொடர்பும் இல்லை. ""

 • Kandaswamy - Coimbatore,இந்தியா

  அய்யா ஜெய்ஹிந்த்புரம், சில கருங்காலிகளாலும், மதம் மாற்ற கும்பல்களாலும் தூண்டப்பட்ட சில விஷயங்களை நான் நினைவில் வைக்கவே விரும்பவில்லை. ஆனால் சில கேள்விகள் எனக்குண்டு. அவ்ளோ பெரிய கூட்டத்துல ஏன் அந்த 13 பேரை மட்டும் குறிவைத்து சுட வேண்டும்? இந்த 13 பேரை குறிவைக்க தெரிந்த போலீசால் பொதுவாக முட்டிக்கு கீழே குறிவைக்க தெரியாதா??. இந்த போராட்டத்தினால், ஆலை மூடுவதினால் யாருக்கு லாபம் சற்றே யோசித்து பார்க்கவும்

 • D.k.tharan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  மக்களை கடைசிவரை நாயகத்தான் தான் நெனைக்குறாங்க அரசியல் வாதிகளும் கார்பரேட்களும் .n

 • கலியுக கண்ணன் - உன்னதமான பாரதம் ,இந்தியா

  பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு அளித்த பிறகு உச்ச நீதிமன்றத்தில் அதற்கு தடை விதிக்க சிலர் அணுகி அவர்களுக்கு சாதகமாக தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்த பிறகு ஸ்டெர்லைட் ஆலை எப்படியும் திறக்கும் என்று தெரிந்த பிறகு சில மதமாற்றம் செய்யும் கும்பல்கள் கல்லூரிகளுக்கு சென்று போராட்டம் செய்ய மாணவர்களை தூண்டி கொண்டுள்ளன. இவர்கள்தான் சர்ச்சிலிருந்து போராட்டத்தை தொடங்கி 13 பேர் சாக காரணமாக இருந்தவர்கள்.

  • Kandaswamy - Coimbatore,இந்தியா

   கலியுக கண்ணன் நீங்க 100 % கரெக்ட்டு...

 • Kandaswamy - Coimbatore,இந்தியா

  //வழக்கை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், சில நிபந்தனைகளுடன் ஆலை இயங்கலாம் என தீர்ப்பளித்தது.// //ஆலையை மீண்டும் திறப்பதற்கும், இந்த திட்டங்களுக்கும், எந்த தொடர்பும் இல்லை.// அப்ரசென்ட்டிகளா இது அதுக்குதான். இப்பவாச்சும் போராட்டம் பண்ணாம கம்முன்னு இருங்க. காப்பர் விலை எகிருட்டு கிடக்கு. சீனாக்காரன் காப்பர் உற்பத்தியில் வெளுக்கறான். சத்தமில்லாம கொடுக்கறத வாங்கிட்டு நல்லபடியா புள்ள குட்டிகளை படிக்க வையுங்க. அறிவுத்திறனை வளர்த்துக்கங்க. சமுதாயத்திற்க்காக நல்லதை செய்யுங்க அப்ரசென்ட்டிகளா

 • Kandaswamy - Coimbatore,இந்தியா

  எனக்கென்னமோ இது ஒரு சிலரின் வாயடைக்க நடக்கும் செயல் போல தோன்றுகிறது. உண்மையிலேயே இது ஒரு சமுதாய நலத்திட்டமா? இல்லை ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான நலத்திட்டமா? இதனை வேதாந்தா குழுமம் முன்பே ஒரு சிறிய பட்ஜெட்டில் தொடங்கியிருக்கலாம். அழுத பிள்ளைக்குத்தான் பால் என்கின்றது இந்த ஸ்டெர்லைட் போராட்டம். இனி சீனப்பணம் செல்லுபடி ஆகாது. காப்பர் விலை குறையும். ஏற்றுமதி பெருகும். எது எப்படியோ மக்களுக்கு நல்லது நடந்தால் சரி.

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  22 May, 2018 .. மறந்தாச்சா?

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  கார்ப்பரேட் = கவர்மெண்ட் ...

  • Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா

   அமெரிக்க கார்ப்ரெட்டில் உட்கார்ந்துகொண்டு, இந்தியாவில் கார்பரேட்டை திட்டுவதற்கு இந்த போலி முகவரி போதும். கொஞ்சமாவது மனசாட்சியுடன் பேச வேண்டும்..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement