Advertisement

சிபிஐ விவகாரம்: பின்னணியில் நடந்த பரபரப்பு தகவல்கள்

புதுடில்லி: சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக, நேற்று நடந்த உயர்மட்ட குழுவில் பரபரப்பான விவாதங்கள் நடந்துள்ளன.

உயர்மட்ட குழு கூட்டம்
இது தொடர்பாக டில்லி உயர் வட்டாரங்கள் கூறியதாவது: பிரதமர் மோடி, சுப்ரீம் கோர்ட் மூத்த நீதிபதி சிக்ரி, லோக்சபா எதிர்க்கட்சி (காங்.,) தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே ஆகியோர் அடங்கிய குழு தான் சி.பி.ஐ., இயக்குனரை நியமிப்பது, நீக்குவது போன்றவற்றில் முடிவெடுக்கும். நேற்று(ஜன.,10) இக்குழு கூடிய உடனே, அலோக் வர்மா மீதான மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (சிவிசி) அறிக்கை அனைவருக்கும் வழங்கப்பட்டது.


தலையீடு

அப்போது நீதிபதி சிக்ரி, அலோக் வர்மாவுக்கு எதிராக 8 குற்றச்சாட்டுகள் உள்ளதாக கூறினார்.அதற்கு கார்கே, வர்மாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எங்கே? அவருக்கு எதிராக அதிகாரத்தில் உள்ளவர்கள் சதி செய்கிறார்கள். பதவியில் இருந்து நீக்க வேண்டும் என முடிவு எடுத்து விட்டு, அதற்கான காரணத்தை தேடி கொண்டிருக்கின்றனர். வர்மாவை நீக்கும் விவகாரத்தில், பிரதமர் அலுவலகம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலையிட்டு உள்ளனர். இவை குறித்து தனி விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

பிரதமர் ஆமோதிப்பு
நீதிபதி சிக்ரி கூறுகையில், வர்மாவின் நடவடிக்கைகள் குறித்து பெரிய குற்றச்சாட்டுகளை சிவிசி கூறியுள்ளது என்றார். இதை பிரதமர் மோடியும் ஆமோதித்து உள்ளார். தொடர்ந்து சிக்ரி கூறுகையில், வர்மா தரப்பில் தவறான செயல்கள் நடந்துள்ளதாகவும் சி.வி.சி., அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டுகள் சிலவற்றிற்கு அடிப்படை முகாந்திரம் உள்ளது எனவும், சில குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாது எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி சிவிசி விசாரணையை கண்காணிக்க நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி பட்நாயக் முன்னிலையில், தனது தரப்பு வாதங்களை வைக்க வர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. சிவிசியின் அறிக்கையும் வர்மாவின் வழக்கறிஞரிடம் அளிக்கப்பட்டது.நிரவ் மோடி முறைகேட்டை மூடி மறைத்தது, விஜய் மல்லையாவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசை நீர்த்து போக செய்தது, ஏர்செல் வழக்கில் ஆவணங்களை போலியாக உருவாக்கியது, கசிய விட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உள்ளன. மோசமான குற்றச்சாட்டுகளுக்கான அடிப்படை ஆதாரமும் உள்ளது. அவர் மீதான விசாரணை முடிவடையும் வரை, சிபிஐ இயக்குநராக வர்மா நீடிக்கக்கூடாது என கருத்து தெரிவித்தார்.வர்மா பதவியில் நீடிக்கக்கூடாது, விசாரணை முடியும் வரை வேறு பதவியில் தொடரலாம் என்ற சிக்ரியின் கருத்துக்கு பிரதமர் மோடியும் ஆதரவு தெரிவித்தார். ஆனால், வர்மாவை நீக்குவதற்கு கார்கே எதிர்ப்பு தெரிவித்தார்.

அரசியல் காரணங்கள்இது குறித்து அரசு தரப்பில் கூறுகையில், சிபிஐ விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த கார்கே, தற்போது அரசியல் காரணங்களுக்காக வர்மாவை நீக்க எதிர்ப்பு தெரிவிக்கிறார். கடந்த நவம்பரில், சிபிஐ இயக்குநர் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கார்கே வழக்கு தொடர்ந்தார். வர்மா நீக்கப்பட்டது சட்ட விரோதம்; சிபிஐ சட்டத்திற்கு எதிரானது. சிபிஐ இயக்குநர் நியமனம் அல்லது பதவி நீக்கம் குறித்து, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு தான் முடிவு செய்ய முடியும் எனவும் கூறியிருந்தார்.
வர்மா வழக்கை விசாரித்த காரணத்தினால், உயர் மட்ட குழு கூட்டத்தில், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கோகோய் கலந்து கொள்ளாமல், பிரதிநிதியாக நீதிபதி சிக்ரியை அனுப்பினார். ஆனால், வழக்கை தொடுத்தவர்களில் ஒருவரான மல்லிகார்ஜூனா கார்கே அவ்வாறு விலகாமல் விசாரணையில் பங்கேற்றது ஏன் என கேள்வி எழுப்பினர்.

சிவிசி அறிக்கை
அலோக் வர்மாவுக்கு எதிராக சிவிசி தெரிவித்த குற்றச்சாட்டுகளை அந்த அமைப்பு தீவிரமாக விசாரணை நடத்தியது. முக்கிய அமைப்பின் தலைவராக இருக்கும் வர்மா, அவர் மீதான எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்படவில்லை என சிவிசி கருதுகிறது.
சிவிசி அறிக்கையில் உள்ள மற்ற குற்றச்சாட்டுகள்
01. மொயின் குரேஷி வழக்கு விசாரணையில் அலோக் வர்மா தலையிட்டதற்கான ஆதாரம் உள்ளது. இதில் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியதற்கும் ஆதாரம் உள்ளது. இந்த வழக்கில், அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் உள்ளது. இதற்கு அடிப்படை முகாந்திரம் உள்ளது. கிரிமினல் விசாரணை நடத்தப்பட்டால், உண்மை வெளி வரும் என சிவிசி நம்புகிறது.

02.ஐஆர்சிடிசி முறைகேடு வழக்கில், எப்ஐஆரில் வேண்டுமென்றே ஒரு பெயரை வர்மா சேர்க்கவில்லை என சிவிசி சந்தேகிக்கிறது. இதற்கான காரணம் வர்மாவுக்கு மட்டுமே தெரியும்.

03. மேலும் பல வழக்குகளிலும் வர்மாவுக்கு எதிராக ஆதாரம் உள்ளதை சிவிசி கண்டறிந்துள்ளது.

04. வர்மா, பல வழக்குகளில், வேண்டுமென்றே ஆவணங்களை தாக்கல் செய்யாததையும், ஆவணங்களை உருவாக்கியதையும் சிவிசி கண்டறிந்து உள்ளது. நேர்மையில் சந்தேகத்திற்குரிய அதிகாரிகளை சிபிஐயில் சேர்க்கவும் வர்மா முயற்சி செய்ததையும் சிவிசி கண்டறிந்துள்ளது.

05. வர்மா மீது, விரிவாக கிரிமினல் விசாரணை நடத்த வேண்டும். இன்னும் சில வழக்குகளில் சிபிஐ இயக்குநராக, அவர் நீடிப்பது சரியாக இருக்காது. அவரை இடமாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (46)

 • sivakumar - Qin Huang Dao,சீனா

  திரு blocked user கவனத்திற்கு, தங்கள் கருத்து நன்றாக இருந்தது. ஆனால் ஊழல் செய்பவர்களை மண்புழுவுடன் ஒப்பிட வேண்டாம். மண்புழு இல்லாமல் நீங்களும், நானும், யாரும் ஒரு கவளம் கூட சாப்பிட முடியாது. அரசியல்வாதிகள் கேவலமானவர்கள். மண்புழு உத்தமமானது .

 • Desabakthan - San Francisco,யூ.எஸ்.ஏ

  வயக்காட்டில் களை எடுப்பது அந்தந்த கால கட்டத்தில் நடக்க வேண்டும். சுதந்திரம் வாங்கி 70 வருட காலகட்டத்தில் பாரத வயக்காட்டில் பயிரை விட களைகள் அதிகம் உள்ளன. அதில தான் எத்தனை ரகங்கள். வெள்ளைக்கார களை, சீன களை, அரபு களை. வயக்காட்டு முழுதும் பரவிக்கிடக்கிறது. இதில் விவசாயி மோடிக்கு தனி ஒரு ஆளா எவ்வளவு கஷ்டம்? ஆகவே தேசப்பற்று மிக்கவர்கள் அவர் கரத்தை வலுப்படுத்தி களை எடுக்க உதவ வேண்டும். அவர் நெல்லை எடுத்து நம்ம ஊர் பண்ணையாரிடம் கொடுத்துவிடுவாரோ நமக்கென்ன என்று இருக்க வேண்டாம். பணக்காரன் அவ்வளவு நெல்லையும் திங்க முடியாது. திருப்பி ஊர்மக்களுக்கு விற்றே ஆக வேண்டும். நெல் தானே போகிறது. அடுத்த விவசாயி இதைவிட நல்லவர் வரும்போது நிலம் நன்றாக இருக்குமே.

 • Viswam - Mumbai,இந்தியா

  இதற்குமுன் 2012 -13 வரை CVC தான் சிபிஐ தலைமை அதிகாரியை தேர்ந்து எடுத்தது. பிறகுதான் பிரதமர், உச்ச கோர்ட் நீதிபதி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மூவரும் சேர்ந்து சிபிஐ தலைமை அதிகாரியை தேர்ந்து எடுக்கும் படலம் துவங்கியது. எதிர்க்கட்சி தலைவரே இல்லை என்கிற நிலை வந்தபோது பிஜேபி அரசு செலக்ஷன் முறையில் (டெல்லி ஸ்பெஷல் போலீஸ் ஆக்ட்) சிறிய மாற்றம் கொண்டுவந்தது. எந்த எதிர்க்கட்சி அதிக அளவில் லோக் சபாவில் உள்ளதோ அதன் தலைவர், சிபிஐ அதிகாரி தேர்ந்தெடுக்கும் கமிட்டீயில் இடம்பெறலாம். இந்த முறையில் தான் மல்லிகார்ஜுன் உள்ளே நுழைந்தார். மல்லிகார்ஜுன் முதலில் அலோக் வர்மாவை எதிர்த்தது காங்கிரஸ் ஆளு இல்லை என்று காண்பிப்பதற்காக நடத்தப்பட்ட ட்ராமா. அதன் மூலம் மோடி மற்றும் உச்ச நீதிபதியை அலோக் வர்மா நடுநிலை வகிப்பவர் என்று நம்பச்செய்து பணியில் அமர்த்தும்படி நடந்த பிளான் செவ்வனே முடிந்தது. வர்மாவை வைத்து எல்லோரையும் விடுதலை (UPA சர்க்கார் களங்கமற்றது) மற்றும் வெளிநாட்டிற்கு தப்பவைத்து மோடி அரசிற்கு அவப்பெயர் உண்டாக்கியாகி விட்டது. உச்சகட்டமாக எதோ நடத்தவேண்டும் என்கிற எண்ணம் இருந்திருக்கிறது. தோவல் அரசை எச்சரித்ததால் வர்மாவை அடிச்சுதூக்கியத்தில் மல்லிகார்ஜூனுக்கு சுயரூபம் வெளிப்பட்டு 6 பக்க டிஸெண்ட் நோட் எழுதிக்கொடும்படியாக ஆகிவிட்டது. இப்போது நல்ல வேளை CVC இக்குள் காங்கிரஸ் ஆசாமி இல்லை.அல்லது CVC தான் இனிமேல் சிபிஐ தலைமை அதிகாரியை தேர்ந்துஎடுக்காதே அதனால் என்ன செய்துவிடமுடியும் என்ற அலட்சியமாகக்கூட இருக்கலாம். அதே CVC அலோக் வெர்மாவிற்கு ஆப்புஅடிக்கும் என்று கனவில்கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். அப்படி யோசிப்பதெற்கெல்லாம் UPA சர்க்காருக்கு ப சி போன்ற கிரிமினல் ஹோம் மினிஸ்டர் தேவைப்படும் நிலை இருந்து வந்திருக்கிறது. வெறுமனே சிபிஐ RBI போன்ற ஆணையங்களை மத்திய அரசு நொண்டிவருகிறது என்ற காங்கிரஸ் பிரச்சாரமெல்லாம் களையெடுப்பை தவிர்க்கவோ அல்லது நேரம் கடத்தும் உத்தியாகவோதான் இதுவரை உள்ளது. ராகுலின் துபாய் பயணமும் மிக்கேல் மாமாவிடம் என்ன விஷயம் கிடைத்தது, ஏன் அவரை பிடித்துக்கொடுத்தீர்கள் என்று தெரிந்து கொள்ளத்தான்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  வர்மா வழக்கு மர்மமாகவே உள்ளது

 • blocked user - blocked,மயோட்

  மெயின் குரோஷி தான் அலோக் வர்மாவின் முகவர் போல செயல்பட்டு இருக்கிறார்... காங்கிரஸ் தருதலைகள் கூட இவரை நேரடியாக அணுகவில்லை ஆகவே காங்கிரஸ் சம்பந்தப்பட்ட வேலைகள் ஜரூராக நடக்கும் - உதாரணத்துக்கு 2G ஆவணங்களை பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தாமலேயே CBI கோர்ட்டில் சமர்ப்பிப்பார்கள்... திட்டமிட்டுச் செய்வார்கள் - ஆனால் வெளியுலகுக்கு அது திறமையின்மையால் செய்யப்பட்டதோ என்று சந்தேகம் வரும் அளவில் நடந்து கொள்வார்கள்... அந்நாள் பிரதமர் அலுவலக ஆவணங்களை அப்படிதான் சமர்ப்பித்திருக்கிறார்கள்... அப்பேர்ப்பட்ட சக்தி வாய்ந்த ஆவணங்கள் கூட உரிய கையெழுத்து இல்லாமல் ஒன்றுக்கு உதவாத காகிதமாகிவிடும்.. ஓபி சைனி கூட பலமுறை CBI யை கடிந்து கொண்டு இருக்கிறார்... CBI க்கு நேர்மையான அதிகாரிகள் மட்டும் போதாது... எவனுக்கும் வளைந்து கொடுக்காத, பயப்படாத ஆள் வேண்டும்... இராணுவ மேஜர்களை இது போன்ற பதவிகளுக்கு நியமிக்கலாம்... CBI என்றால் கொள்ளையடிக்கும் போலீஸ்காரன் என்ற நிலைமை கொண்டு வந்தது காங்கிரசின் கைங்கரியம்... சு சாமிக்கு எல்லா இடத்திலும் ஆட்கள் உண்டு... அவர்களின் கண்ணிலேயே மண்ணைத்தூவி நேர்மையாளன் என்று பெயர் வாங்கி இருக்க்கிறான் என்றால் இவன் ஜெகஜால வித்தைக்காரன்தான்...

Advertisement