Advertisement

திட்டமிட்டபடி அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்

மதுரை:சம்பள முரண்பாடுகளை நீக்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஆண்டு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை எதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் போது, போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக ஜாக்டோ ஜியோ சார்பில் கூறினர்.


இந்த வழக்கு இன்று சசிதரன், சுவாமிநாதன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் கால அவகாசம் கேட்டு தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இதனை தொடர்ந்து, போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக தாக்கல் செய்த மனுவை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் திரும்ப பெற்று கொண்டனர். இதனால், இந்த அமைப்பினரின் போராட்டம் திட்டமிட்டபடி வரும் 22ம் தேதி முதல் நடக்கும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (13)

 • ஆப்பு -

  வேலை செய்யறாங்களோ இல்லியோ வேலை நிறுத்தத்தை மட்டும் தேதி நேரம் சொல்லி வெச்சு அடிக்கிற மாதிரி செய்வாங்க.

 • R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ

  அரசு ஊழியர்கள் "வேலை நிறுத்தம் செய்யக்கூடாது" என்று விதிகள் கொணரவேண்டும். அதேபோன்று கட்சி தொடர்பு சங்க நிர்வாகிகளுக்கு இருக்கக்கூடாது, வேலை நிறுத்தம் செய்யும் நாட்களுக்கு ஊதியம் கிடையாது, பணி முறிவு போன்ற கடுமையான சட்டங்கள் மூலமே அரசு ஊழியர்கள் இடையே கட்டுப்பாடுகளை ஏற்படுத்த முடியும். ஆனால் இவை அனைத்தும் கனவில் மட்டுமே நடக்கும்

 • KALYANASUNDARAM - karuppampulam,இந்தியா

  கொடுத்துக்கொடுத்து கை சிவந்தவன் கர்ணன் வாங்கிவாங்கி கைசிவந்தவன் யாரோ மொத்தத்தில் ருசிகண்ட பூனைகள்

 • KALYANASUNDARAM - karuppampulam,இந்தியா

  அரசு கொடுக்கும் ஊதியத்தை வாங்கிக்கொண்டு ஒழுங்காக வேலையை பாருங்கள் .அரசு வேலை கிடைப்பதே குதிரைக்கொம்பாக இருக்கிறது.ஜெயலலிதா இல்லாதது உங்களுக்கெல்லாம் துளிர்விட்டதா .புதியவர்கள் வேளையில் சேர தயாராக இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

 • ராஜேஷ் - Pattukkottai,இந்தியா

  எடப்பாடியும் திட்டமிட்டபடி உங்களை வீட்டுக்கு அனுப்பிடுவர் .முன்னாடியெல்லாம் கருநிதி உங்களை குஷிப்படுத்த மக்கள் வரிப்பணத்தை வாரி இற்றைப்பர். கள்ள வோட்டை வாங்க . இப்போ மெஷின் வந்துருச்சு .உங்களை நம்பி இருக்கவேண்டிய அவசியம் இல்லை

 • S.Baliah Seer - Chennai,இந்தியா

  அரசு ஊழியர்களின் போராட்டம் ஆரம்பித்தால் அதற்கு அரசே முழு பொறுப்பு. இழுத்தடிக்கும் வேலையை அரசு தொடர்ந்து செய்து வருகிறது.இந்த பொங்கலுக்காக எல்லோரும் தவறாக 2000 கோடிதான் அரசு செலவு என்கிறார்கள்.ஆனால் உண்மையில் 20 ஆயிரம் கோடி ரூபாய் என்று அரசுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.ஓய்வூதியம் பெறுவோருக்கு பொங்கல் இனாம் 500 என்று எதற்கு கொடுக்க வேண்டும்? இதுபோன்று இன்னும் வீண் செலவுகள்.வாக்குகளை எதிர்பார்த்து அடாவடி செலவுகளை அரச செய்வதால் அரச ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளைக் கூட அரசு நிராகரிக்கிறது.இனி நீதிமன்றம் கூட இந்த போராட்டத்தை தடுப்பது கடினமே.நீதிமன்ற உத்தரவுகளுக்கு அரசு கட்டுப்படாதபோது அரசு ஊழியர்களின் போராட்டத்தை மட்டும் நீதி மன்றம் ஏன் கட்டுப்படுத்த வேண்டும்?

 • Sakthi Shanmugam -

  பேசாமல் ஒட்டு மொத்தமாக டிஸ்மிஸ் பண்ணிட்டு புதியவர்களை அமர்த்துங்கள் இவர்களுக்கெல்லாம் எவ்வளவு கொடுத்தாலும் பத்தாது

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  இப்போது இருக்கும் அரசு ஊழியர்கள் ஆசிரியர் 90 % பேர் வெட்டி சம்பளம் பெறுகிறார்கள்......எனவே போராட்டம் செய்தவர்களை உடனே பணிநீக்கம் செய்து வரும் தொகையை அவர்களின் கணக்கில் போட்டுவிடுங்கள்..........தனியார் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு வேலை கொடுங்கள்...........

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  இதெல்லாம் பார்க்கும்போதுதான் அம்மாஜி ஞாபகம் வருது..ஜாக்டோ ஜியோ வாம்..ஜாக் ஒரு சிறையிலும், டோ ஒரு இடத்திலும், ஜியோ எங்க போட்ட்ருக்காங்கன்னே தெரியாமலும் பிரிச்சி மேஞ்சாங்களே..அதெல்லாம் நினைவுக்கு வருது.

 • Selvaraj Thiroomal - Chennai,இந்தியா

  சம்பள முரண்பாடுகளை கண்டிப்பாக சரிசெய்ய வேண்டும்தான். ஓய்வூதியத்தை பொறுத்தவரை அரசின் நிலையில்லாத கொள்கைதான் அவர்களை இப்படி தூண்டுகிறது.. குழு அமைப்போம், அது விசாரிக்கும் என்பதெல்லாம் தேவையில்லை, இதற்கு ஒப்புதலோடு வேலையில் சேர்ந்தவர்களுக்கு, விருப்பமில்லையெனில், பணியை துறக்கச்சொல்லி கெடுவே கொடுக்கலாம்..ஓட்டுக்காக இந்த கட்சிகள், தனது ஊழியர்களை பொறுப்பற்றவர்களாக மாற்றியுள்ளது...

 • tamilselvan - chennai,இந்தியா

  ஜாக்டோ ஜியோ அமைப்பு எந்த கட்சிக்கு ஜால்ரா போட்டர்கள் உங்களும் அரசு வேலை கொடுத்து தப்பு பேச்சி நாட்டில் பட்டம் படித்து வேலையில்லாம் இருக்கிறார்கள்

 • Bhaskaran - Chennai,இந்தியா

  இனி மக்கள்தான் இவர்களுக்கு சரியானப்பாடம் கற்பிக்கணும் வருசம்பொறந்தாச்சு உடனே வேலைநிறுத்தம் ஆரம்பிச்சுட்டாங்க

 • metturaan - TEMA ,கானா

  ஓட்டுக்காக ஒவொரு கட்சியும் செய்த தவறின் விளைவுகள் .....எவ்வளவு வாங்கியும் போதலை...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement