Advertisement

பத்திரிகையாளர் கொலை: சாமியார் குற்றவாளி

புதுடில்லி: அரியானாவில், பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில், பலாத்கார வழக்கில் சிறையில் உள்ள சாமியார் குர்மித் ராம் ரஹீம் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது.


சிறை தண்டனை




அரியானாவில், தேரா சச்சா சவுதா என்ற அமைப்பின் தலைவர் குர்மித் ராம் ரஹீம். கடந்த 1999ல், தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த இரண்டு பெண் சீடர்களை பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டு சிறை தண்டனை பெற்று , ரஹீம் சிறையில் உள்ளார்.



குற்றச்சாட்டு




இந்நிலையில், ராம் ரஹீமின் ஆசிரமத்தில், பெண் சீடர்கள் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பாக பத்திரிகையில் செய்தி வெளியிட்ட நிருபர் ராம் சந்தர் சத்தர்பதி என்பவர், கடந்த 2002ல் சுட்டு கொல்லப்பட்டார். இது தொடர்பாக 2003ல் வழக்குப்பதிவு செய்த பின்னர், 2006 ல் வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் ராம் ரஹீம் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். மேலும், குல்தீப் சிங், நிர்மல் சிங், கிருஷ்ணன் லால் ஆகியோர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது.


தீர்ப்பு




இந்த வழக்கில், விசாரணை முடிந்த பின்னர், பஞ்சகுலாவில் உள்ள சிறப்பு கோர்ட்டில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதற்காக குற்றவாளிகள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நீதிபதி தனது தீர்ப்பில், சாமியார் ராம் ரஹீம் உள்ளிட்ட 4 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். இவர்களுக்கான தண்டனை விவரம் வரும் 17 ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • ராஜேஷ் - Pattukkottai,இந்தியா

    யாரு சாமியார் ? இன்று இந்துக்களை எண்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் பிரனாயி விஜயனுடன் பத்தாயிரம் கோடிக்கு சினிமா நகரம் அமைத்து தொழில் நடத்திய இந்த ராம் ரஹீம்- பிரனாயி விஜயன் கூட்டாளிகள் . இவனை போலி சாமியார் என்றுதான் நீங்கள் எழுதி இருக்கணும் .

  • ravichandran - avudayarkoil,இந்தியா

    தூக்கு தண்டனை கொடுத்தால் தான் நீதி வென்றதாக கொள்ள முடியும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement