Advertisement

அனைத்து கார்டுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு : ஐகோர்ட் அனுமதி

சென்னை : அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.பொங்கல் பண்டிகைக்காக அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசு வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்கை அடுத்து, வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1000 வழங்கக் கூடாது என ஐகோர்ட் தடை விதித்தது.


இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் நேற்று மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை இன்று விசாரித்த ஐகோர்ட், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசு வழங்க அனுமதி அளித்துள்ளது.நீதிபதிகள் கூறுகையில், இலவச திட்டங்களை பயன்படுத்தும் போது பயனாளிகளை வரையறை செய்ய வேண்டும். ஓட்டுக்காக மட்டுமே ரூ.1000 பொங்கல் பரிசு வழங்குவதாக மக்கள் கருதுகிறார்கள். அனைவருக்கும் வங்கிக் கணக்கு உள்ள போது மக்களை வரிசையில் காக்க வைப்பது சரியா? இலவசங்களை அனைவருக்கும் வழங்கக் கூடாது என முடிவு எடுக்கவும். ஆந்திரா, கர்நாடகா, கேரள போன்ற வெளி மாநிலங்களுக்கே தமிழக ரேஷன் அரிசிகள் கடத்தப்படுகிறது. இன்னும் எத்தனை காலத்திற்கு தான் இலவசங்களை வழங்கிக் கொண்டு இருப்பீர்கள்? தமிழகத்தில் வெளி சந்தைகளில் இலவச அரிசி விற்கப்பட்டு வருகிறது என கருத்து தெரிவித்துள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (56)

 • Subramanian Sundararaman - Chennai,இந்தியா

  Perhaps the case is not properly represented in the court. The issue of Green card and White card is not based on income criteria but based on the option of either rice or sugar by the people. It is 12 years since the ration cards were issued. If it is on the income basis there should have been a revision over a period of 12 years at least for the new cards. The colour of the ration card does not indicate the BPL status of the consumer . Instead the pongal gift could have been limited to ration card holders drawing kerosene. Almost all middle class have 2 gas cylinders. and not entitled for kerosene.Mostly the BPL people could have availed the benefit .

 • arudra1951 - Madurai,இந்தியா

  எடுப்பது என்று முடிவு கட்டி விட்டால் மேல் வர்க்கம் என்ன கீழ் வர்க்கம் என்ன . ஒரு துண்டு கரும்பு வாங்க வக்கில்லாதவர்களுக்கு எதற்கு ஜனநாயகம் ?

 • Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்

  தமிழகத்தில் உள்ள தொண்டு நிறுவனங்கள் மீது கடும் சட்டம் பாயவேண்டும். அதற்கு வேண்டிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

 • Gopalakrishnan -

  Nan intha panathai pm relief fund iku anuppivittan

 • Xerox - ,

  tom & jerry show super hi hi hi

 • ஆப்பு -

  பாவம் எத்தனை நீதிபதிகள் ரேஷன் கார்டு வெச்சிருக்காங்களோ?

 • ராம.ராசு - கரூர்,இந்தியா

  இதற்க்கெல்லாம் நீதிமன்றத்தின் தலையீடு தேவைதானா.. ஒரு நீதிபதி சொல்லுகிறார் வேண்டாம் என்று. இன்னொருவர் சொல்லுகிறார் கொடுக்கலாம் என்கிறார். சட்டம் என்பது நீதிபதிக்கு நீதிபதிக்கு மாறுபடுவது ஆச்சரியமாக இருக்கிறது. நீதிமன்ற அறிவுரை ஒருபுறம் இருக்கட்டும். அனைத்து மக்களுக்கும் பொதுவானதாக இருக்கின்ற விழாவிற்கு நாட்டு மக்கள் அனைவரையும் ஒரே மாதிரியாக இருக்கின்ற பரிசுபொருட்களைக் கொடுப்பதில் அரசுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டு விடாது. அதிக வருமானம் உள்ளவர்களும் அதிகப்படியான வருமான வரி செலுத்துபவர்களாகவே இருக்கும்போது இந்த பரிசு என்பது தவறானது அல்ல. இன்னும் சொல்லப்போனால் வேண்டாம், வேண்டும் என்று சொன்ன நீதிபதிகளுக்குமே அரசின் பரிசுப் பொருளாகத் தருவதில் கூட தவறு இல்லை. பத்து லட்சமே வருட வருமானம் இருந்தால், அவர்கள் அரசுக்கு செலுத்தும் வருமான வரி இரண்டு லட்சத்திற்கு மேல் இருக்கும். என்கிறபோது இதுபோன்ற பொங்கல் பரிசு, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள எரிவாயு மானியம் போன்றவற்றைத் தருவதில் தவறே இல்லை. இங்கு அதிக வருமானம் உள்ளவர்கள் குறைந்த வருமானம் உள்ளவர்கள் என்று பிரித்துப்பார்ப்பதைவிட, அனைவரும் இந்நாட்டு மக்கள் என்ற ஒற்றை எண்ணத்தில் அனைவருக்கும் கொடுப்பதுதான் ஏற்றத் தாழ்வுகள் இல்லாத ஒரு சிறு நிலையிக்கு மக்களை சிந்திக்க வைக்கும். அரசு யாருக்கும் தனது சொந்த வருமானத்தில் கொடுக்கவில்லை. அவர்களிடம் வாங்கிய பெருந்தொகையில் ஒரு சிறு, மிகச் சிறியதை பரிசு என்று கொடுக்கிறது. அவ்வளவே.

  • Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்

   அண்ணே, வழக்குத் தொடர்ந்தவரை ஏன் வழக்குத் தொடர்ந்தாய் என்று கேட்க உங்களுக்கு நாதி இருக்கின்றதா? தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் நாட்டிற்குப் பெரிய விளைவுகளை ஏற்படுத்துகின்றார்கள்.

  • ராம.ராசு - கரூர்,இந்தியா

   நீங்கள் கேட்பது சரிதான் நண்பரே. ஆனால் மக்களாட்சி நாட்டில் நீதிமன்றத்தில் முறையிடுவது என்பது வரவேற்கத்தக்கது தான். அது சரி தவறு என்று சொல்லும் கடமை நீதிமன்றத்திற்கு உண்டு. . சொல்லவந்தது என்னவென்றால்... ஒரு வழக்கிற்கு இரண்டு விதமான தீர்ப்பு என்பது நீதி மன்ற தீர்ப்புகளின் மாண்பை குறைத்துவிடும். ஆனால்... லண்டனில் இருக்கும் உங்களுக்கு "பொங்கல் பரிசு" கிடைத்ததா....

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  தமிழகத்தில் தாமரை வராததற்கு பாஜக மட்டுமே காரணம். எல்லோரையும் சகட்டுமேனிக்கு அவமரியாதையாக பேசியும் எழுதியும் பாஜகவை வெறுக்க வைக்கிறார்கள். அவமரியாதையாக எழுதுவதை சாதனை என்று நினைக்கிறார்கள்

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  இந்த1000 ரூபாயில் விஸ்வாசம் பாத்தாச்சு, பேட்ட நாளைக்கு புக் பண்ணியாச்சு, ஊருக்கு டிக்கெட் போட்டாச்சு. தேங்க்ஸ்

  • Viswanathan - karaikudi,இந்தியா

   ஏழைகள் இருக்கும் வரை இலவசம் தொடரும் என ஒரு ஆளு ஆரம்பிச்சு வைத்துவிட்டு போனது , தமிழனை மரமண்டை ஆகவே ஆகி விட்டது

 • vbs manian - hyderabad,இந்தியா

  வெட்கக்கேடு.பல தமிழ் நட்டு கிராமங்களில் சரியான சாலைகள் தண்ணீர் வசதி சுகாதார அமைப்புகள் இல்லை. அரசு பள்ளிகள் இடிந்து கிடப்பதால் மரத்தடியில் வகுப்பு நடக்கிறது. ஆனால் இதையெல்லாம் நிவர்த்தி செய்தல் vote விழாது. பிற மாநிலங்களில் ஹோலி தசரா போன்ற பண்டிகைகள் உண்டு. ஆனால் எங்கும் மக்கள் வரிப்பணத்தை இந்த மாதிரி விரயம் செய்யவில்லை. தமிழக அரசியல் வாதிகள் இலவசங்களை எங்கோ உச்சிக்கே தூக்கி கொண்டு சென்று விட்டார்கள். மக்களும் ஒன்றுமே நடக்காததது போல் கியூவில் நின்று வாங்குகிறார்கள் .முதலில் ஆவேசம் கட்டிய நீதிமன்றமும் பின்வாங்கி விட்டது. வாழ்க தமிழ் நாடு.

 • Darmavan - Chennai,இந்தியா

  கோர்ட் வேண்டாம் என்றது எதன் அடிப்படையில் /இப்போது கொடுக்கலாம் என்பது எப்படி...பாதி பேருக்கு கொடுத்த பிறகு தடை ஆணை போடுவது அறிவுடைய செயலா?இது நீதியை விட ஜட்ஜின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப அமைவது வேதனை.

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  திமுக கட்சி தொண்டர் , அவர் தொடர்ந்த வழக்கு, அப்படி பார்த்தால் இந்த பொங்கல் இலவசத்துக்கு திமுக எதிர்ப்பு, காரணம் எதுவாக இருந்தாலும், மக்களின் ஏகோபித்த எதிர்ப்பு. சுடலைக்கு காய்ச்சல். இப்படியே தொடர்ந்தால் திமுகவின் பெயர் மேலும் கெட்டுதான் போகும்.

 • Devanand Louis - Bangalore,இந்தியா

  தி.மு.கவின் தோல்விதான் இந்த தீர்ப்பு

 • Manikandan Sivalingam - delhi,இந்தியா

  பணத்தின் மூலமாக கிறிஸ்துவர்கள்,மற்றும் இஸ்லாமியர்கள் அனைவரையும் இந்துக்களாக மதமாற்றம் செய்கிறது தமிழக அரசு.பொங்கல் பண்டிகையை கொண்டாட பணம் வாங்கும் அனைவரும் இந்தியாவின் இந்துக்களே

 • ARUNACHALAM, Chennai - ,

  அரிசி கடத்தல் பற்றி பேச முடியும். ஆனால் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  Palanisaami ithileyum jeyichutaaru thimukakaaranthaan makkalukku panam kodukka vidaama thaduthaaan naanga neethimanramvaraisenru makkaluku nallathu seithirukiromnu ini maarthatti solluvaar

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  அசிங்கப்பட்டாண்டா ஆட்டோக்காரன்

 • M Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா

  தமிழ் நாட்டின் மக்களை தொகை சுமார் 8 கோடி. ஒரு குடும்பத்திற்கு சுமார் 4 பேர் என்றால் 2 கோடி குடும்பங்கள். அதில் ஏழைக்குடும்பங்கள் கண்டிப்பாக சுமார் 50 லட்சத்துக்கு மேலே இருக்காது. அப்படியானால் நமது வரிப்பணம் சுமார் 1500 கோடி ஸ்வாஹா கண்டிப்பாக ADMK குடும்பங்கள் பயன் அடையும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

 • Visu Iyer - chennai,இந்தியா

  வங்கியில் தான் போடவேண்டும் என்று சொல்லாதது ஏன்...? ஆட்சியாளர்கள் சுருட்டி கொள்ள வசதியாக இருக்க வேண்டும் என்பதற்கு தானே... சரி.. நீதி மன்றங்களை எப்போது தனியார் மயமாக்குவார்கள்..

  • Kabilan E - Chennai,இந்தியா

   அங்கே என்ன சத்தம்...வெட்கமே இல்லையா?

 • R. SUBRAMANIAN -

  ஆக இறுதியில் நிதிதான் வென்றது. நேர்மையான வருமான வரி செலுத்தும் திராவிட தமிழர்கள் இந்த₹1000ஐ தங்கள் கணக்கில் காட்டி அதற்கு உண்டான வரியை செலுத்த வேண்டும். செய்வீர்களா!செய்வீர்களா!!

 • metturaan - TEMA ,கானா

  இன்னிக்கு காசுகிடைச்சா... போதும்... என்பதே மக்களின் மன நிலை என்ன செய்ய ??

 • raja - Kanchipuram,இந்தியா

  எந்தவித ஒழுக்கமும் எந்த நிலையிலும் இல்லா சமூகம்

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  ஐய்யா விசுவாசமும் பேட்டயும் பிளாக்கில் வாங்க பணம் கெடச்சிருச்சி .இல்லாட்டி இருக்கவே இருக்கு சரக்கும் சைடு டிஷும் .இப்படிக்கு டாஸ்மாக் டுமீளன்

 • ramanathan - Ramanathapuram,இந்தியா

  அரசும் கடத்தல்காரர்களும் கூட்டணி அமைத்துள்ளன . திருட்டு கழகங்கள் இருக்கும் வரை திருட்டை ஒழிக்க முடியாது.அடுத்தாண்டு பொங்களுக்கு ஆயிரம் ரூபாயிலிருந்து ஐய்யாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  வாங்காமல் விடாதீர்கள் இல்லையெனில் உங்க பணத்தையும் பரிசையும் ஆட்டயப்போட்டுவிடுவார்கள்.பிடிக்கவில்லையென்றால் வாங்கி உங்களுக்கு நன்கு தெரிந்த ஏழைகளுக்கு கொடுத்துவிடுங்கள்

 • Kabilan E - Chennai,இந்தியா

  இது திருடன் குடும்ப கட்சி மரண அடி....மதம் மாறி பயல் daniel க்கு இது செருப்படி...

 • jagadeesan - trichy,இந்தியா

  நீதிபதி சட்டத்தின் அடிப்படையிலே தான் தீர்ப்பு வழங்க வேண்டுமே தவிர தனது சொந்த கருத்தை திணிக்க கூடாது. 1000 ரூபாய் வழங்க கூடாதென்று எந்த சட்டத்தில் உள்ளது.

  • Kabilan E - Chennai,இந்தியா

   திமுக நீதிபதிகள் அப்படி தான் மொட்டைத்தலைக்கும் முழுங்காலுக்கும் முடிச்சு போட்டு அதிமேதாவிகள் மாதிரி குதர்க்கமான கேள்வி கேப்பானுங்க...திருப்பி யாராச்சும் நறுக்கென்று கேட்டால் நீதிமன்ற அவமதிப்பு ....மண்ணாங்கட்டின்னு வந்துடுவானுங்க...

  • ARUNACHALAM, Chennai - ,

   நேற்று மனசாட்சி இன்று சட்டம். நாளை?

 • R.SANKARA RAMAN - chennai,இந்தியா

  நான் முன்பே பதிவு செய்தது போல இணிவருங் காலத்திலாவது அனைவருடைய வருமானம் எவ்வளவு என்ற விவரங்கள் சேகரித்து புதிதாக கார்டுகள் வழங்க வேண்டும். அப்படிச் செய்தால் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் சில இலட்சங்கள் தாண்டாது.

  • ARUNACHALAM, Chennai - ,

   சரியான கருத்து. ஒரு விஷயம். பொது மக்கள் பெற்றது 1000/- இந்த வழக்கில் ஆஜராக வழக்கறிஞர்கள் பெற்றது? 1000+ ?

  • Darmavan - Chennai,இந்தியா

   ரேஷன் கார்டை PAN கார்டு /AADHAR கார்டுடன் இணைக்க வேண்டும்

 • metturaan - TEMA ,கானா

  அவசியமானவர்கள் யார் என்பதை வரையறை செய்திருக்கலாம்

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  சீக்கிரம்...வாங்காதவங்க எல்லாம் ஓடி போயி வாங்கிருங்க..டானியல் உச்ச நீதி மன்ற முறையீட்டுக்கு போய் நிறுத்திட போறாரு..

 • S.Baliah Seer - Chennai,இந்தியா

  இதைவிட ஒரு நீதிமன்றம் எப்படித்தான் கண்டிக்க முடியும்? பதவி வெறியாலும் ,பணவெறியாலும் பிடிக்கப்படுவோர் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள். வரலாறு மாறும் தன்மை உடையது.பிரளயம் வரும்போது உலகம் இருக்கும்.ஆனால் வரலாறுகள் முற்றிலுமாக அழிந்து நிற்கும்.போலி வரலாறு படைக்க பொதுமக்கள் பணத்தை விரயம் செய்வது பெருங்குற்றம்.ஆட்சியாளர்கள் இனிமேலாவது தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்பட வேண்டும்.

  • Kabilan E - Chennai,இந்தியா

   ...ஒரு திருட்டு குடும்பம் ஊரையே அடிச்சு உலையில் போட்டு கொண்டு இருந்து பொது நீயெல்லாம் .....

  • Jaya Ram - madurai,இந்தியா

   இதை ஒருகுடும்பம் மக்கள் பணத்தில் இலவச டிவி கொடுத்துவிட்டு வருமானம் பார்த்தப்பவே கண்டித்துருக்கவேண்டும்

 • V.B.RAM - bangalore,இந்தியா

  தேவையில்லாத பந்தா செய்து மக்களை குழப்பி ??? இதெல்ல்லாம் தேவையா. தமிழகத்தை ஆண்டவன் வந்தாலும் காப்பாத்தமுடியாது.,

  • Basic Instinct - Coimbatore,இந்தியா

   வரிசையில் நின்ற மக்கள் பட்ட துன்பங்கள் கொஞ்சம் கிடையாது. ஊடகங்கள் வட மாநிலத்தில் பனிப்பொழிவை பற்றி தினமும் ஒளிபரப்பி அவர்களுக்கு வெறுத்து விட்டது (வேறு செய்தி இல்லையா? ஏன் ரைடுக்க) அதனால் தேர்தல் சமயத்தில் மக்கள் பார்த்துக்கொள்வார்கள். அதை அப்படியே எந்த எதிர்கட்சி ஒட்டு வங்கியாக மாற்றப்போகிறதோ?

 • Amar Akbar Antony - Udumalai kovai,இந்தியா

  உண்மையிலேயே இலவசத்தை வெறுப்பவர்கள் குறிப்பாக இந்த ஆயிரம் பொற்காசுகள் ஓஹ் ஆயிரம் ரூபாய்கள் வேண்டாம் கஜா புயல் என்றெல்லாம் காரணம் சொல்பவர்களுக்கு:இந்த ஆயிரம் ரூபாயை வாங்குங்கள் வாங்கிய உடன் அந்த பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பிவிடுங்கள்:என்ன சரிதானே அன்பர்களே

  • Gopal Doraiswamy - chennai,இந்தியா

   கரெக்ட். இதனை நான் ஏற்கனவே செய்துவிட்டேன். ஒரு அனாதை இல்லத்திற்கு வழங்கினேன்.

 • KALYANASUNDARAM - karuppampulam,இந்தியா

  நமது மக்கள் எதையும் கருத்தில்கொள்ளவில்லை தற்போதைநிலமை கொடுத்தால் வாங்கிக்கொள்வார்கள்

 • Vasudevan Sethuraman - CHENNAI,இந்தியா

  எந்த அடிப்படையில் நிராகரிக்க பட்டது...இப்போழுது, எந்த அடிப்படையில் ஏற்க பட்டது இது தான் இந்த நாட்டின் விதி.

  • raghavan - Srirangam, Trichy,இந்தியா

   பாதி பேரு வாங்கிட்டாங்களே..வாங்காதவங்க சாபம் விட்ருவாங்களோ என்ற பயமா கூட இருக்கலாம்.

 • KALYANASUNDARAM - karuppampulam,இந்தியா

  இதுதான் சிரிப்புவெடி

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  நீதிபதிகள்...வாழ்க...

 • abhinandan jain - chennai,இந்தியா

  yesterday one judgement,today one judgement,nalai one judgement? what is this?judgement only in papers

 • Ganesh G - Hyderabad,இந்தியா

  நாயை அடிப்பானேன் ............

  • Kabilan E - Chennai,இந்தியா

   டேனியலையும் அவனை கேசு போட வைத்த சுடலையையும் இப்படி எல்லாம் நீங்கள் ஏசுவது சரியில்லை...

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  "ஓட்டு"க்கு காஸ் (Gas) & காசு... இந்தியா வெளெங்கிடும்...

 • Girija - Chennai,இந்தியா

  தீர்ப்புகள் திருத்தப்படலாம் இந்த கலாட்டா அவசியமா?

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  சரி காமெடி...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement