Advertisement

பா.ஜ.,வுடன் கூட்டணியா: ஸ்டாலின் மறுப்பு

சென்னை : பா.ஜ.,வுடன் திமுக ஒரு போதும் கூட்டணி வைக்காது என திமுக தலைவர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.நேற்று தமிழக பா.ஜ., நிர்வாகிகளுடன் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, தமிழகத்தில் பழைய நண்பர்களுக்காக பா.ஜ.,வின் கூட்டணி கதவு எப்போதும் திறந்திருக்கும் என தெரிவித்தார். பிரதமர் மோடியின் இந்த அழைப்பிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் பதிலளித்துள்ளார்.

கூட்டணி இல்லை:
அதில் அவர், பா.ஜ.,வுடன் ஒரு போதும் கூட்டணி இல்லை. குறைந்தபட்ச செயல்திறன் அடிப்படையிலேயே பா.ஜ.,வுடன் கருணாநிதி கூட்டணி வைத்திருந்தார். மதவாத குரல்கள் எழுந்ததும் பா.ஜ., கூட்டணியில் இருந்து திமுக உடனடியாக வெளியேறியது.


மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சியில் தமிழகம் உரிமைகள் அதிகம் பறிக்கப்பட்டுள்ளன. முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன் மோடி தன்னை ஒப்பிட்டுக் கொள்வது வேடிக்கையாக உள்ளது. இது அவரின் வழக்கமான தேர்தல் பிரசார யுத்தி. பா.ஜ.,வின் அழைப்பை திமுக ஒருபோதும் ஏற்காது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (66)

 • kandasamy sundaresan - bangalore ,இந்தியா

  குடும்ப கட்சியுடன் அதுவும் தி.மு.க. என்ற சர்வ வல்லமையுடைய ஒரு ஊழல் கட்சியுடன் பீ.ஜெ.பி. சேர அதனுடைய அடிமட்ட தொண்டர்கள் அனுமதிக்க மாட்டார்கள். இப்போது உள்ள தி.மு.க வை - கடவுளால் கூட திருத்த முடியா கட்சி ஆகி விட்டது. "துஷ்டரை கண்டால் தூர விலக வேண்டும் " என்பது அடிப்படை தொண்டர்களின் கருத்து.

 • Raghul Smart - mos,ரஷ்யா

  சுடலை மற்றும் கனி , அண்னன் அழகிரியை கட்சியில் சேர்க்காத சமுக நீதி அரசர்கள் .

 • Nisha Rathi - madurai,இந்தியா

  பிஜேபி ஒருபோதும் உன்னுடன் கூட்டணி வைக்காது அப்படி வைத்துக்கொண்டால் தற்கொலைகள் பல நிகழும்

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  எந்தவித ஆதாரங்களும் இல்லாமல் ஊழல் திமுக என்று வாழ்க்கை பூரா அனத்திண்டே இருங்கோ... ஒரு திமுக தலைவரையும் சட்டத்தினால் தொட முடியாது. ஏனென்றால் எல்லாமே பொய் குற்றச்சாட்டுகள் தாம். "விஞ்ஞான ஊழல்" னு எழுதிக்கோங்கோ.

 • D.RAMIAH - RAIPUR,இந்தியா

  பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு திமுக அல்லது அதிமுகவுடன் பி ஜெ பி கூட்டணி நிச்சயம் வாழ்க பி ஜெ பி

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  குடும்பம் பாஜக கூட்டணி கேட்க, ஊழல் செய்தே பழக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் கட்டிங் காங்கிரஸ் வேண்டும் என கூற தடுமாறும் ஊழல்திமுக என்ற தலைப்பு செய்தி எப்போது வரும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  அவமரியாதை மற்றும் அநாகரிகம் தெறிக்கும் வார்த்தைகள். ஏன்? கூட்டணி இல்லை என்றதால் கோபமா? மானங்கெட்டவன் என்று எழுதுவதெல்லாம் சபைமரியாதை தானா? சிந்திக்க

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

   அப்டித்தான் எழுதுவோம்.. நீ காசு குடுத்து வடை வாங்கி சாப்பிட்ட அப்புறம் வந்து இந்த கேள்வியை கேக்கலாம்.

  • Anand - chennai,இந்தியா

   உண்மையை கூறியதற்கு ஏன் இவ்வளவு கோபம், உண்மை கசக்குதோ? //அநாகரிகம் தெறிக்கும் வார்த்தைகள்// என கூறுகிறீர்கள். ஒருசமயம் இவரின் தகப்பன் பெண்களை பற்றி பேசிய அச்சில் ஏற்ற முடியாத பேச்சுக்களை நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை காரணம் அன்று அவர்கள் உங்கள் வீட்டு பெண்கள் அல்ல, ஆகவே அன்று உங்களை போன்றவர்களுக்கு அது இனிக்கும் சொற்களாகவே இருந்தது.

  • Bhagat Singh Dasan - Chennai,இந்தியா

   கூட்டணியில் இருந்து பதவி சுகங்களை அனுபவித்து விட்டு, ஓட்டும் இல்லை உறவும் இல்லை, கூடா நடப்புனு சப்ப காரணத்தை சொல்லி வெளியே வந்து மீண்டும் அவர்களுடனே கூட்டணி வைத்தால் இதை மணமுள்ளவன் செய்யும் காரியமா?

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

   சிந்திக்க வெல்லாம் முடியாது.. நீ அடிக்கடி இப்படி சிந்திக்க சொன்னா ...திராவிட பூமியில அது சாத்தியமா..?

  • Sanjay - Chennai,இந்தியா

   வேண்டும் என்றால் நேரடியாக சுடாலினை திட்டவேண்டியது தானே, அதற்க்கு எதற்கு சுத்தி வளைச்சி.....

 • Devanand Louis - Bangalore,இந்தியா

  பா.ஜ.,வுடன் திமுக ஒரு போதும் கூட்டணி வைக்காது என திமுக தலைவர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஏனென்றால் பி.ஜே.பி ஆட்சியில் ஊழல்களெல்லாம்செய்யமுடியாது ஆனால் கொங்கிரஸ் ல் பலமேகாஊழல்களிசெய்யமுடியும்

 • ramanathan - Ramanathapuram,இந்தியா

  2g அலைகற்றை வழக்கு...அண்ணா அறிவாலயத்தில் இருந்து மாறன் வீடுவரை இரவோடு இரவாக டெலிபோன் கேபிள் பதித்து சன் டிவி அலுவலகத்தை மத்திய தொலைத்தொடர்வு மந்திரியாக இருந்த தயாநிதி மாறன் அலுவலகமாக மாற்றிய வழக்கு ஆகிய இரண்டு வழக்குகளையும் வாபஸ் வாங்கினால் பாஜக வுடன் கூட்டணி அமைக்க தயார் என்றும் தமிழக பாராளுமன்ற தொகுதிகளை சரிசமமாக பங்கிட்டு கொள்ள ஆட்சேபனை இல்லை என்றும் திமுக வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் முரளிதர்ராவிடம் கூறியதாக தகவல் வருகிறது.

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  BJP என்ற பசுங்கன்றுடன் ஓசி பிரியாணி கட்சியான ஒருபோதும் சேராது.

  • Sanjay - Chennai,இந்தியா

   எச்ச பிரியாணி.

 • R S GOPHALA - Chennai,இந்தியா

  தமிழ் நாட்டில் பிஜேபி தனித்தே போட்டியிடலாம். ஏனெனில் இங்கு திராவிட கட்சிகளுக்கு சுத்தமாக மதிப்பில்லை. இந்த ஊழல் பெருச்சாளிகளின் வேஷங்களை மக்கள் நன்றாக புரிந்து கொண்டு விட்டார்கள். இந்த திருடர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்கள் என்பதை மக்கள் நன்றாக தெரிந்து கொண்டு விட்டார்கள். இந்த கட்சிகளின் மீது மக்களுக்கு இனி நம்பிக்கையே வராது. அந்த அளவுக்கு கொள்ளை அடித்து மக்களை சுரண்டிவிட்டார்கள். இவர்கள் தானாக ஒரு நாள் ஒழிந்து விடுவார்கள். தமிழ் நாட்டிற்கு இப்போது தேவை மோடி போன்ற நல்ல தலைவர்களே. பிஜேபி தமிழ் நாட்டில் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வார்கள். தமிழ் நாட்டுக்கு நல்லது செய்வார்கள். மேலும் சுடலை போன்ற எதிரி கட்சி தலைவர்கள் சட்டசபைக்குள் செல்வதற்கு பயந்துகொண்டு சட்ட சபைக்கு வெளியில் நின்றே லூசு மாதிரி ஏதாவது அறிக்கை விட்டு கொண்டிருக்கும். சுடலையின் தந்தை கருணாநிதி சட்ட சபையில் ஜெயலலிதா இல்லாத பொது அரசின் சலுகைகளை பெறுவதற்காக திருட்டுத்தனமாக சென்று கையெழுத்து போட்டு வந்ததை போல...

  • sivan - Palani,இந்தியா

   நமக்கு மோடி மீது இருக்கும் நம்பிக்கை கூட தமிழக பி.ஜெ.பி க்கு இல்லை. பிறகு எங்கே தனித்து போட்டியிடுவது?

 • R.SANKARA RAMAN - chennai,இந்தியா

  யாரும் கவலைப் பட வேண்டாம். தேர்தலுக்குப் பின்னர் மோடியுடன் கூடிய விரைவில் தங்களுக்குத் தேவையான (புரிந்திருக்கும்) இலாக்கக்களை பெற்று (நாங்கள்) வளம் பெறுவோம்.

 • நக்கல் -

  படித்ததில் பிடித்தது.. ## #மூன்றாவது_கலைஞர் கடந்து வந்த கரடு முரடான பாதை...👍#உதயநிதிக்கு வயது 41. முரசொலி நாளிதழ் நிர்வாக இயக்குனராக இருக்கிறார். அவர் பிறந்த ஆண்டான 1977 முதல், கட்சி உறுப்பினராக உள்ளார். சமூக ஆர்வலராக உள்ளார். கட்சி நடத்திய அனைத்து போராட்டங்களிலும் கலந்துகொண்டு சிறை சென்றுள்ளார் : செய்தி உதயநிதி கடந்துவந்த முள்பாதை ...#கருணாநிதியின் குடும்பத்தில் பிறந்ததால்... வழக்கம்போல, பிறக்கும் போதே ஒருகையில் திமுக உறுப்பினர் அட்டையுடனும், மறுகையில் திமுக கொடியுடனும் பிறந்தார். அரசியலில் இருந்தாலும் கூட, தன் வயிற்றுப் பிழைப்புக்காக சிறுவயதில் வீடுவீடாக முரசொலி பேப்பர் போட்டும், உணவகங்கள், மளிகை கடைகள் என்று வேலை பார்த்தும்... சிறுகச் சிறுக சேர்த்துவைத்த சில கோடிகளைப் போட்டு சினிமாவில் படங்களை தயாரித்து, அரைவயிற்று கஞ்சியை குடித்துவந்தார். தமிழ் மீது தீராத பற்று கொண்ட உதயநிதி... அதனாலேயே கூட தன் சினிமா தயாரிப்பு நிறுவனத்துக்கு, ரெட் ஜெயண்ட் மூவீஸ் என்று, முத்தமிழில் பெயர் வைத்தார்.ஒரு கட்டத்தில்... இவரின் வசீகரிக்கும் அழகை பார்த்தும், கணீரென்ற உச்சரிப்பை கேட்டும்... தமிழக மக்கள், உதயநிதி மீது தீராத மயக்கத்தில் விழுந்தனர். இதை நன்கு உணர்ந்த தமிழ் சினிமா துறையைச் சேர்ந்தவர்கள்... ஒன்றுகூடி, "உதயநிதி சினிமாவில் நடித்தால் மட்டுமே, இனி தமிழ் சினிமாவுடன் சேர்த்து, பல லட்சம் சினிமா தொழிலாளர்களையும் வாழ வைக்க முடியும்" என்று ஒருமனதாக தீர்மானம் போட்டு, இவரின் வீட்டின்முன் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க முயல... இயல்பிலேயே அடுத்தவர் துயர்கண்டு துடித்துப் போகும் உதயநிதி, கலை உலகை காக்கும் பொருட்டு, தன் சினிமா நடிப்பு வாழ்க்கையை துவக்கினார். ஒவ்வொரு படமும்... உலகிலுள்ள பெரும்பாலான மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு... ஆயிரம், இரண்டாயிரம் கோடிகள் வசூல் மழையை பொழிந்தது. தன் தாத்தாவை போலவே... தான் உழைத்து சம்பாதித்த அத்தனை பணத்தையும் ஏழைகளுக்கு தானம் செய்தார். உதயநிதியின் ஓலை குடிசைமுன், தங்களின் படங்களில் நடிக்கவேண்டி கால்சீட்கேட்டு... ஹாலிவுட் இயக்குனர்கள் தவம் கிடந்தனர். உதயநிதி... பிடிவாதமாக மறுத்தார். "தான் தமிழ் மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் மட்டுமே அவதரித்ததாக" உலகத்துக்கு சூளுரைத்தார். மறுபக்கம்... "உதயநிதி... திமுகவின் தலைமையை ஏற்க வேண்டுமென்று முழக்கமிட்டு, ஏராளமான திமுக தொண்டர்கள் தீக்குளிக்க முயல... "தன் மகன் என்பதற்காக, என் தந்தை எப்படி எனக்கு சலுகை காட்ட வில்லையோ... அவர் வழிவந்த நானும் என் மகனுக்கு சலுகை காட்ட மாட்டேன். என்னைப் போல பழமொழி சொல்லி உழைத்து, தகுதியும், திறமையையயும் வைத்து, உதயநிதி மேலே வரட்டும்" என்று திரு. ஸ்டாலின் போர்க்கொடி தூக்கி... திமுக தொண்டர்களிடமிருந்து தீபெட்டியை பிடிங்கி வைத்துக் கொண்டார். மேலும், உதயநிதியின் கையைப் பிடித்து, இரக்கமே இல்லாமல் கதறக்கதற தரதரவென இழுத்துச் சென்று திமுகவினர் நிற்கும் வரிசையில் கட்டகடேசி தொண்டராக நிறுத்திவிட்டார். ஆனாலும்... மாவீரன் உதயநிதி மனம் தளரவில்லை. இரவில் தன் பிழைப்புக்கான சினிமா போஸ்டர்களையும், கொள்கைக்காக திமுக போஸ்டர்களையும்... தெருத் தெருவாக ஒட்டி வாழ்ந்து வருகிறார்.உதயநிதியின் கொள்கைப் போராட்டங்கள்...உதயநிதி ஆறுமாத குழந்தையாக, தன் தாயார் திருமதி. துர்கா அவர்களின் மடியில் படுத்திருந்தபோது, திடீரென எழுந்து முழக்கமிட்டுக் கொண்டே... சாலையில் வேகமாக வந்த ஒரு டாரெஸ் லாரியை நோக்கி ஓட ஆரம்பித்தார். அவரின் தாயாரும் பின்னால் ஓடி... ஒருவழியாக காப்பாற்றி தூக்கி வந்துவிட்டார். மாலை வீட்டுக்கு வந்த திரு. ஸ்டாலின் இதைக்கேட்டு, "ஆறுமாத குழந்தை... முழக்கமிட்டு சாலையில் ஓடியதா ?." என்று, அதிர்ச்சி அடைந்தார். நம்ப மறுத்தார். அரை லிட்டர் தமிழ் பாலை குடித்துவிட்டு உறங்கிக் கொண்டிருந்த உதயநிதி கண்விழித்தார். பேச ஆரம்பித்தார். "தந்தையே... அம்மா சொல்வது உண்மைதான். தமிழை செம்மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்காகவே, நான் சாலையில் முழக்கமிட்டு லாரியில் தலையை குடுக்க ஓடினேன்" என்றார். இது சாதாரண குழந்தையல்ல... நாடி, நரம்பு, ரத்தம், சதை, கல்லீரல், மண்ணீரல், குடல், கிட்னி என்று உடம்பு முழுவதும் திராவிடம் ஊடுருவிய ஒரு உயிரினத்தினால் மட்டுமே, இப்படி ஒரு செயலை செய்யமுடியும் என்பதை உணர்ந்தார் ஸ்டாலின். இந்த செய்தி திமுகவினர் மத்தியில் காட்டுத்தீ போல பரவியது. தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், தானைத் தலைவர் கலைஞரும்... ஒரே உடலாக பிறந்து வந்ததை உணர்ந்தார்கள். ஆர்ப்பரித்தனர், ஆனந்த கண்ணீர்விட்டு கூத்தாடினர். அப்போதைய மத்திய அரசு மிரண்டுபோய், தமிழை செம்மொழியாக அறிவித்தது.இத்தனை வீறுகொண்ட போராட்டங்களையும், சோதனைகளையும் எதிர்கொண்டு வரும் உதயநிதி... நாட்டை ஆளும் தகுதியும், திமுகவை திறம்பட வழிநடத்தும் திறமையும் இருந்தும் கூட, தலைவர் ஸ்டாலினின் மகன் என்ற ஒரேஒரு அற்ப காரணத்துக்காக... இன்று திருவாரூரில் இடைத் தேர்தலுக்காக போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப் பட்டிருக்கிறார். இப்படி எத்தனையோ சொல்லொண்ணா துயரங்களை தாங்கிக் கொண்டு, இன்றும் திமுகவின் கடைக்கோடி தொண்டனாக, ஒரு ஏழை குடியானவனின் மகனைப் போல, லிட்டருக்கு 3 கிலோமீட்டர் மட்டுமே மைலேஜ் கொடுக்கும், சாதாரண ஹம்மர் காரில்தான் வலம் வருகிறார் #இளைய_தளபதி_உதயநிதி !!! 😔😢😭

  • Kandaswamy - Coimbatore

   Mr நக்கல். இதை விட தி.மு.க. வை யாரும் அசிங்கப்படுத்தியதே இல்லை. நீங்க இன்னும் நிறைய எழுத வேண்டும். சிரித்து வயிறு வலியுடன் என் வாழ்த்துக்கள்.

 • நக்கல் -

  BJP தீயமூகவுடன் சேர்ந்தால் என்னை போல் உள்ள பலரின் வாக்குகளை BJP இழக்க நேரிடும்... தீயமூகவைவிட ஒரு மட்டமான கட்சி இந்த உலகத்தலேயே கிடையாது.. இதற்கு தோற்றாலும் பரவாயில்லை தனித்து நிற்பதே மேல்..

  • Sanjay - Chennai

   இதை தான் நானும் செய்வேன்.

 • Mithun - Bengaluru,இந்தியா

  என்னப்பா.. பஞ்சாயத்துல எல்லாரும் வந்தாச்சயா.. அப்பறம் அவன் வரல, இவன் வரலன்னு சொல்லக்கூடாது. ஏன்ன இதுபோல எனக்கு நிறைய பஞ்சாயத்து இருக்கு.

 • metturaan - TEMA ,கானா

  நீங்களா நினைச்சுட்டு .. வெட்டி சீன போடாதீங்க ..

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  உங்களுக்கு அரசியலில் ஒன்றுமே தெரியாவிட்டால், பேசாமல் பக்கத்தில் இருப்பவர்யாருக்கு ஓட்டு போடுவார்களோ, அவர்களுக்கே நீங்களும் போட்டாலே போதும். நாடு நன்றாக இருக்கும்.

 • ganapati sb - coimbatore,இந்தியா

  வாஜ்பாய் கபில்தேவ் என்றால் மோடி தோனி இருவரும் வெவேறு காலகட்டத்தின் வெற்றிகரமான தலைவர்கள் அனால் அசாருதீன் போன்ற ஊழல் கட்டுமரம் வாரிசு சுடலை மருமகன் துரைமுருகன் எழுதி தந்தையாவது ஒழுங்காக பேசட்டும்

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  மோடி செய்த நல்ல விஷயங்களை மக்களிடம் எடுத்து சொன்னாலே 40 சீட் பிஜேபிக்கு தான் . தனியாகவே நின்று 400 கூட ஜெயிக்கலாம் . பிஜேபி தனியாக நின்று மக்களை சந்திக்க வேண்டுகிறேன் . ரொம்ப நல்ல வரவேற்பு கொடுக்க தமிழ்நாட்டு மக்கள் காத்து உள்ளார்கள் .

  • Raj - Chennai,இந்தியா

   திமுகவும் தனித்து நிற்க பரிந்துரைக்கவும்.

 • ravisankar K - chennai,இந்தியா

  //..பா.ஜ., ஆட்சியில் தமிழகம் உரிமைகள் அதிகம் பறிக்கப்பட்டுள்ளன...//....இருக்கிற உரிமையை வைத்தே திராவிடம் நம்ம மக்களை இந்த பாடு படுத்தி எடுத்தது. இதுக்கு மேலேயும் உரிமை கொடுத்தா திருட்டு கழகம் நம்மளையெல்லாம் நாட்டை விட்டு தொரத்தி விட்ருவாங்க . எதிர் கட்சியாய் இருந்தாலும் இத்தனை MLA வைத்துக்கொண்டு இவர்கள் மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை . வெட்டியாய் உரிமை போகிறது என்று கவர்னர் பின்னாடியே போய் அவருக்கு கருப்பு கொடி காட்டினார்கள் . இதைத்தான் மக்கள் இவரிடம் எதிர்பார்த்தர்களா ??.. இவங்களை விரட்ட மோடிதான் சரி . வெட்டு ஒன்னு துண்டு இரண்டுன்னு இந்த திருட்டு கும்பலை நாட்டை விட்டே விரட்டணும் .

 • Raj - Chennai,இந்தியா

  ஸ்டாலின் தன்னை கலைஞருடன் ஒப்பிட்டுக்கொள்வதும் வேடிக்கையாய் உள்ளது.

 • Girija - Chennai,இந்தியா

  குறைந்தபட்ச நாகரிகத்துடனாவது சுடாலின் பேச கற்று கொள்ள வேண்டும், இதில் மோடியை வாஜ்பாயுடன் ஒப்பீடு செய்ய வேண்டிய அவசியமில்லை இதற்கு பதிலடியாக மோடி நாட்டின் குடியரசு மற்றும் சுதந்திரதின தேதிகள் கூடிய அறியாத கட்சி தலைவர் அரசியல் பேசுவது நாட்டிற்கு அவமானம் என்றால் சுடாலின் சாப்டர் குளோஸ் அம்புடுதேன்.

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  கூட்டணி வைக்கணும் ,இன்று கரித்து கொட்டும் சொம்புகள் கருணாநிதி ஸ்டாலின் கனிமொழி போன்றவர்களை மறுபடியும் புகழ்ந்து பேசணும் . இப்படி தான் மும்பு புகழ்ந்து பேசி எச் ராஜா போன்றார் திமுக தயவில் MLA ஆனார்கள் . மானஸ்தர்கள் மீண்டும் பல்டி அடித்து புகழுவார்கள் .

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  நானெல்லாம் பிஜேபி யை ஆதரிக்கிறதே ..தீம்கா..சரியில்லை ன்னு தான்.. தீம்கா வை கூட்டு சேத்தால் அவ்ளோ தான் பிஜேபி க்கு எதிரியா மாறிருவேன்.. என்னுடைய நோக்கம் தீம்கா நாசமா போனும் ...அவ்ளோ தான்.

  • இந்தியன் kumar - chennai,இந்தியா

   கூடவே அதிமுகவும்.

 • Balasubramanyan S - chennai,இந்தியா

  Enjoyed the minister post when murasoli Marian was bed ridden. Enjoyed all perks and treatment at foreign in govt expense and his backstabbed Vajbhai before landing at Delhi after atting funeral. Of Maran Because he refused monster post to his grand son and recommed senior MP of DMK. Hilarious to observe about the comment Kanmozhi on Hindu. His father was felt happy about the hind knowledge of his g. Son Dayanithi Maran .you always have hindi known persins in all your dealings with North indian politician,business men people are not idiots.

 • Anand - chennai,இந்தியா

  பந்திக்கே வேண்டான்னாலும் இலை ஓட்டை என அடிக்கடி கூறி கடுப்பேத்துகிறார். இவர்தான் ஏற்கனவே ரவுல் வின்சியை பிரதமராக்க சபதம் எடுத்துள்ளவராச்சே. இந்திய ராணுவ தலைமை பொறுப்பை ஏற்க நான் சம்மதிக்க மாட்டேன் என ஹபீத் சயீத் கூறுவது போலல்லவா உள்ளது இவரின் பேச்சு.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  \\\\ மதவாத குரல்கள் எழுந்ததும் பா.ஜ., கூட்டணியில் இருந்து திமுக உடனடியாக வெளியேறியது. //// பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு திமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேரவில்லையா ?

  • Anand - chennai,இந்தியா

   அப்போ அது வேற வாய், இப்போ நாற வாய்

 • Karthi Keyan Palanisamy - erode,இந்தியா

  10 முக்கிய மந்திரி பதவிகள் பிஜேபி கொடுதல் போதுமே

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  அட மானங்கெட்டவனே ...ஒங்கொப்பேன் ஒடம்பு சரியில்லாம கெடந்தப்போ மோடி வந்து பார்த்தப்போ வெளி நாட்டுக்கு போற பயணத்தை ஒத்தி வச்சிட்டு காத்து கெடந்தவன்தானே நீயி .. அப்படிப்பட்டவரையே சாடிஸ்ட்ன்னு சொன்ன ஆளு தானே நீயி....அவரு பொதுவா சொல்றாரு ...அதை தி.மு.க வுக்கு தான் சொன்னாருன்னு திண்ணையில ஒக்கார்ந்து இருக்குறப்போ ஞானோதயம் வந்திடுச்சு போல ...ஆனால் ஒன்னு ..காங்கிரஸ் கூட நீ ஒட்டிக்காம இருக்க போட்ட பிட்டா கூட இருக்கலாம்...கி..கி...கி...

 • velimalaya - Chennai,இந்தியா

  திருட்டு கூட்டணியில் உள்ள சுடாலின் பிஜேபி பக்கம் வரமுடியாது

 • Sanjay - Chennai,இந்தியா

  சம்மன் இல்லாமல் ஆஜராகும் நபர் இருவர் இவ்வுலகில் உண்டு என்றால் அது நம்ம வட நாட்டு பப்புவும் (சுடாலின்) மற்றும் தென்னாட்டு சுடாலினும் (பப்பு) தான்.

  • Sanjay - Chennai,இந்தியா

   வடநாட்டு சுடாலின் (பப்பு) மற்றும் தென்னாட்டு பப்பு (சுடாலின்).

 • mani - coimbatore,இந்தியா

  ஐயா யோக்கிய தலைவரே, நீங்க ஒன்னும் பிஜேபி ல இருந்து உடனே வெளியேறவில்லை. நாலேமுக்கால் வருஷம் பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு தான் வெளியே வந்தீங்க. பச்சோந்தியை விட நிறம் மாறக்கூடியவர் உங்க நைனா. இது உலகம் அறிந்த விஷயம்.

  • sams - tirunelveli,இந்தியா

   உடன்பிறப்பே, திருட்டு ரயில் ஏறி வந்த என்னையும் என் குடும்பத்தையும் உன் அயராத உழைப்பினால் உலக பெரிய பணக்காரர்களில் ஒருவனாக்கினாய். "இந்து என்றால் திருடன்" என்று உன்னை திட்டினேன். இருந்தாலும் நீ மீண்டும் என்னை தேர்ந்தெடுத்து டெல்லி அளவில் ஊழல் வியாபாரத்தை பெருக்கிட உதவினாய். இலங்கை தமிழர்களின் பாதுகாவலனாக நாடகமாடினேன்.வெற்றி கிரீடத்தை என் தலையில் சூட்டினாய். பிறகு, இத்தாலிய தலைவியின் ஆணைக்கிணங்க, இலங்கையில் லட்சக்கணக்கில் தமிழர்களை இலங்கை ராணுவம் கொல்வதற்கு என்னாலான அனைத்து உதவிகளையும் செய்தேன். அதனால் என் குடும்பத்திற்கு டெல்லியில் பதவி சுகத்தில் என் கொள்ளை வியாபாரம் பெருக்கெடுத்து ஓடியது. எனது ஆட்சியில், கர்நாடகாவில் மூன்று அணைகள் கட்ட செய்து, தமிழகத்தை கூடுமான அளவிற்கு பாலைவனமாக்கினேன். இப்போதும் நமது மாபெரும் ஊழல் கூட்டணி கட்சியின்மூலம் மேகதாது திட்டத்தை நிறைவேற்றி, முழு பாலைவனமாக்க திட்டமிட்டுள்ளேன். எனக்கு இந்த தேர்தலை சந்திக்க பயமாய் இருக்கிறது, அதனால்தான், ஒருபக்கம் வேட்பாளரை நியமித்துவிட்டு நம் எடுபிடிகள்மூலம் வழக்கு பதிவு செய்து தேர்தலை நிறுத்த முயற்சித்துள்ளேன். எனினும், நாம் தற்போது மத்தியில் ஆட்சியில் இல்லாததால் நம்மால் ஆணையங்களை கட்டுப்படுத்தமுடியவில்லை. ஆகவே, மீண்டும் புறப்படு. ஊன் உறக்கம் எதுவும் வேண்டாம், வெற்றிக்கனியை மீண்டும் என் குடும்ப கழகத்திற்கு உரித்தாக்கு. என் குடும்பம் உலகத்திலேயே பெரிய பணக்காரர் என்று ஆகும்வரை, ஓய்வேதும் இல்லாமல் உழைத்திடு. என் இதயத்தில் ஒரு இடம் உனக்கு போதும் என்று ஓங்கி உரைப்பது எனக்கு கேட்காமல் இல்லை. எனினும், தேர்தல் முடிந்தவுடன் வழக்கம் போல பட்டை நாமமும் திருவோடும் உன்னை வந்து சேரும்.

  • ravisankar K - chennai,இந்தியா

   ........அருமையான கருத்து.....இப்படித்தான் அருந்தமிழில் , பைந்தமிழில் பேசி இத்தனை வருடம் நம்மை ஏமாற்றினார்கள் ..... இனிமே என்ன பண்றது ..இப்ப இருக்கிற தளபதிக்கு சாதாரண தமிழே வரமாட்டேங்கிது .. வாய் திறந்தால் மெட்ராஸ் பாஷை தான் வருது ... ...

  • Sanjay - Chennai,இந்தியா

   வாய் திறந்தால் கூவம் கரைபுரண்டோது

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  அட மானங்கெட்டவனே ...ஒங்கொப்பேன் ஒடம்பு சரியில்லாம கெடந்தப்போ மோடி வந்து பார்த்தப்போ வெளி நாட்டுக்கு போற பயணத்தை ஒத்தி வச்சிட்டு காத்து கெடந்தவன்தானே நீயி .. அப்படிப்பட்டவரையே சாடிஸ்ட்ன்னு சொன்ன ஆளு தானே நீயி....அவரு பொதுவா சொல்றாரு ...அதை தி.மு.க வுக்கு தான் சொன்னாருன்னு திண்ணையில ஒக்கார்ந்து இருக்குறப்போ ஞானோதயம் வந்திடுச்சு போல ...ஆனால் ஒன்னு ..காங்கிரஸ் கூட நீ ஒட்டிக்காம இருக்க போட்ட பிட்டா கூட இருக்கலாம்...கி..கி...கி

 • siriyaar - avinashi,இந்தியா

  5G அஞ்சு லட்ஷம் கோடின்னா மட்டும் ரெடி.

 • Arasu - Ballary,இந்தியா

  திமுகவே வெற்றிபெற்றாலும் அவர்களை எப்படி கையாளவேண்டும் என்று மோடிக்கு தெரியும். சென்ற தேர்தலில் 66 சீட் காங்கிரசுக்கு எப்படி கொடுத்தார்கள் டெல்லியில் சோனியாவை சந்தித்தபோது அவர் படிக்கட்டில் உயரே நின்றுகொண்டு கீழே கருணாநிதி வீல் சேரில் பக்கத்தில் ராஜாத்தி அம்மாள், இந்த போட்டோ நினைவிருக்கும் அல்லவா. அது ஏன் மீண்டும் நடக்காது டெல்லி காங்கிரஸ் அல்லது பிஜேபி யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் ஆனால் இது மீண்டும் நடக்காது என்பது என்ன நிச்சயம். இன்னொன்று, எடப்பாடியை அடிமை என்கிறார்கள், அவர் " குண்டு போடுவதை நிறுத்திவிட்டார்களாம்" " என்னால் உள்ளுக்குள் அழமட்டுமே முடிகிறது" என்கிற வசனத்தை சொல்லவில்லை

 • Sudhagar Ramaiah - Tiruvannmalai,இந்தியா

  இதுதான் சுடலையின் அவசரபுத்தி என்பது. இதுவே கருணாநிதியாக இருந்திருந்தால் காங்கிரஸ் எனும் கரைசேருமா சேராதா என்ற படகின் மீது கூட்டணி அமைத்து இருக்க மாட்டார். பிஜேபியும் இல்லாமல் காங்கிரஸும் இல்லாமல் தனியே நின்றுப்பார். காங்கிரஸுடன் கூட்டணி அமைத்ததினால் , தன் கட்சிக்கு மூடு விழா நடத்த , அணைத்து மார்க்கங்களையும் மூடிவிட்டார் சுடலை. 100 சீட் கூட தேறாத காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துவிட்டு வெட்டிச்சவடால் பேசி தன் கட்சியின் அழிவிற்கு பாதை அமைத்துவிட்டார் சுடலை. உங்கள் முதலமைச்சர் கனவு இனி பகல்கனவுதான்.

 • தமிழன்பன் - tamilnadu,இந்தியா

  நோன்பு கஞ்சி குடிசிச்சுகிட்டு, கிருஸ்துமஸ் வாழ்த்து சொல்லிக்கிட்டு, தீபாவளியை விடுமுறை நாளாக கூவி அன்னிக்கு அவங்க குடும்ப சானல்ல யாவாரம் பண்ணும் ஒரு மஹான் சொல்லறாரு, "மதவாத குரல்கள் எழுந்ததும்...". வேடிக்கையா இல்ல?.

  • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

   நாலரை வருஷம் கழிச்சி தான் மதவாத குரல்கள் எழுந்துச்சாம்...பே பய புள்ள...

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

   தகப்பனுக்கு இது நல்ல டைட்டிலா இருக்கே.. சூப்பரப்பு..

 • வேலங்குடியான் - Karaikudi,இந்தியா

  போயா வெத்துவேட்டு....

 • வேலங்குடியான் - Karaikudi,இந்தியா

  கடைசி வரைக்கும் மைனாரிட்டி திமுக தாண்டியோவ்.....

  • velavan - Grenoble,பிரான்ஸ்

   அரசியல் அறிவு இல்லாதவர் எழுதிய குறிப்பு

  • வேலங்குடியான் - Karaikudi,இந்தியா

   உண்மைய சொன்னா சிலருக்கு கோவம் வரதான் செய்யும்.....

 • suresh - chennai,இந்தியா

  தமிழகத்தில் பாஜகவின் கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது என பாஜக நாக்கை தொங்க போட்டு கொண்டு தமிழகத்தில் கூட்டணிக்கு அலைகிறது,,,,எனக்கு புரியவில்லை,,,என்ன துணிச்சலில் தமிழக மக்களின் ஓட்டுக்களை இன்னும் பாஜக எதிர் பார்க்கிறது ? மீத்தேன் கொண்டு வருவோம்,,,நீட் தேர்வு கொண்டு வருவோம் ...நியூட்ரினோ கொண்டு வருவோம்,,,ஸ்டெர்லைட்டை மூட மாட்டோம்,,,ஹிந்தியை திணிப்போம்,.பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கிக்கெட்டை எதிர்ப்போம்,,..விவசாயிகளை சந்திக்க மாட்டோம்,,,புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க மாட்டோம்,,,,..ஆனால் தேர்தல் நேரத்தில் வருவோம் ,,ஒட்டு கேட்போம்,,,இதற்க்கு பிச்சை எடுக்கலாம்,

  • Bharathanban Vs - tirupur,இந்தியா

   அது தானே... வீட்டில் உள்ள ஆண், பெண்களை குடிகாரர்களாக்குவோம், இலவசங்களை கொடுத்து பிச்சைக்காரர்களாக்குவோம், ஜாதி, மத அரசியல் சலுகைகள் அறிவித்து ஓட்டுவேட்டையாடுவோம், கோடி கோடியை கொள்ளையடித்து தனது குடும்பத்தினருக்கு சொத்து சேர்ப்போம், தமிழ் தமிழ் என்று கோஷம் போட்டு தமினிழத்தை அழித்தொழிக்கும் செயலை கண்டு கொள்ளாமல் விடுவோம், மீனவர்களை தினசரி சுட்டுக் கொல்ல அனுமதிப்போம் என்றெல்லாம் அரசியல் நடத்தத் தெரியாமல், வளர்ச்சி அரசியல் நடத்தி விட்டு ஓட்டு கேட்க என்ன தைரியத்தில் தமிழகத்திற்கு பாஜ வருகிறது... நாங்களெல்லாம் திராவிட கட்சிகளின் அடிமைகள் என்பது கூட தெரியாமல்....

  • ARUNACHALAM, Chennai - ,

   திமுக மற்றும் காங்கிரஸ் சேர்ந்து செய்ததெல்லாம் பாஜக செய்த மாதிரி எழுதினால் எப்படி?

  • rambo - Manamadurai,இந்தியா

   //என்ன துணிச்சலில் தமிழக மக்களின் ஓட்டுக்களை இன்னும் பாஜக எதிர் பார்க்கிறது// அவாள் வோட்டும் ரஜினி மற்றும் அதிமுக ஓட்டும் கிடைக்கும்ங்கிற துணிச்சல் தான்..

 • Sri Ra - Chennnai,இந்தியா

  மோடி குசும்புக்காரர் வேணுமினே கலக்கம் உண்டாக்குறார்😂😂

  • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

   இது பாயிண்ட்டு....அவரு போற வேகத்தில ஒரு பிட்டை போட்டுவிட்டு போயிட்டாரு...சுடலை ராவுல எப்படி சமாளிக்க போகுதோ..

  • Thangaraju - chennai,இந்தியா

   மோடிஜி மற்றும் அவரது சகாக்கள் தமிழர்கள் வாழ்வாதாரத்தை முடிக்கும் வரை ஓய மாட்டார்கள். முதலில் சிறு தொழில்கள், பிறகு நாமக்கல் லாரி .....இன்னும் நமக்காக நிறைய திட்டங்கள் வைத்து உள்ளார்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement