Advertisement

2 ஆளில்லா விண்கலம் அனுப்ப திட்டம்: இஸ்ரோ தலைவர்

பெங்களூரு : 2020 டிசம்பர் மற்றும் 2021 ஜூலை மாதத்தில் 2 ஆளில்லா விண்கலங்கள் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.


பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2018 ல் 17 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2018 ல் 2 ஜிஎஸ்எல்வி ராக்கெட்கள் விண்ணில் ஏவுப்பட்டுள்ளது. நிலவுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்ட பணிகள் நடந்து வருகிறது. இது இஸ்ரோவின் மிகப் பெரிய திருப்பு முனை திட்டமாகும்.

2020 டிசம்பர் மற்றும் 2021 ஜூலை மாதங்கள் 2 ஆளில்லா விண்கலங்கள் விண்ணிற்கு அனுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போன்று 2021 டிசம்பரில் ஆட்களை சுமந்து செல்லும் விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது. ககன்யான் திட்டத்தின் ஆரம்ப கட்ட பயிற்சி இந்தியாவிலும், உயர்மட்ட பயிற்சிகள் ரஷ்யாவிலும் அளிக்கப்படும். இந்த பயிற்சி குழுவில் பெண் விண்வெளி ஆய்வாளர்களும் இடம்பெறுவர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (7)

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    கஞ்சிக்கே வழியக் காணும், .கார் வாங்கறாராம் என்று கொச்சி னில் சொல்வார்கள். அதுமாதிரி இருக்கிறது. அந்துபோன ரீலை சுத்துங்கோ...

    • Ramalingam Shanmugam - mysore,இந்தியா

      ஹையோ ரொம்ப கண்டு பிடுச்சிட்டாருப்பா அவருடைய கடமையை சரியாக செய்கிறார்கள் நாம் ? கமெண்ட் அடித்துக்கொண்டு வீணடிக்கிறோம்

  • metturaan - TEMA ,கானா

    அதுக்கு முந்தி... இந்த சீனாக்காரன் என்னமோ புது ராடார் விட்டு நம்மள கண்காணிக்கிறான் என ஊடகங்களில் செய்திவந்தது ... அத முறியடிக்க ஏதாவது செய்யுங்க ..

  • ஆப்பு -

    அதுக்கு அடிக்கிற பெயிண்ட்டாவது மேக் இன் இந்தியாவுல பண்ணுங்க.

  • Ramalingam Shanmugam - mysore,இந்தியா

    வாழ்த்துக்கள்

  • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

    எங்க அப்பத்தாவுக்கு இதனால் என்ன லாபம்? அப்புறம் பழனிச்சாமி கிட்டே அனுமதி வாங்கிட்டீங்களா

  • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

    தலைவரே நீங்களும் கொஞ்சம் உஷாரா இருங்கள் இல்லை எனில் இட ஒதுக்கீட்டில் வந்தவர் என நீக்கிவிட போகிறார்கள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement