Advertisement

அமெரிக்காவின் 'ஹீரோ' இந்தியருக்கு டிரம்ப் புகழாரம்

வாஷிங்டன்:''அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்த மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்ட, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, ரோனில் ரோன் சிங் தான், அமெரிக்காவின் ஹீரோ,'' என, அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, ரோனில் ரோன் சிங், 33, வசித்து வந்தார்; கலிபோர்னியா மாகாணத்தில், போலீஸ்காரராக பணியாற்றினார்.சமீபத்தில், போக்குவரத்து சோதனை சாவடியில் பணியில் இருந்த ரோனில் ரோன் சிங்கை, வட அமெரிக்க நாடான, மெக்சிகோவில் இருந்து, சட்ட விரோதமாக, அமெரிக்காவுக்குள் நுழைந்த, கஸ்டவோ பெரேஸ் அரிகாகா என்பவன், துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்.இதில், ரோனில் ரோன் சிங் உயிரிழந்தார். இது தொடர்பாக, கஸ்டவோ பெரேஸ் அரிகாகாவை, போலீசார் கைது செய்தனர்.இந்நிலையில் நேற்று, அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது:இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, ரோனில் ரோன் சிங், 2011-ல், போலீஸ் பணியில் இணைந்தார். மெக்சிகோவில் இருந்து, சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்த மர்ம நபர், அவரை சுட்டுக் கொன்றான். ஒரு அமெரிக்க ஹீரோவின் உயிர், அநியாயமாக, எங்கள் நாட்டு குடிமகன் அல்லாத ஒருவனால் பறிபோய் விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement