Advertisement

துாக்கத்தில் இருந்து விழித்தது நிலவை ஆய்வு செய்யும் ரேபோ

பீஜிங்:நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சீன ரோபோ 5 நாட்கள் துாக்கத்திற்குப்பின் நேற்று மீண்டும் பணிகளை துவங்கியது.நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்ய சீனா ‛ரேபிட்2' ரோபோ வை அனுப்பியுள்ளது.


140 கிலோ எடை கொண்ட இந்த ரோபோ நிலவின் மறுபக்கத்தில் கடந்த 3-ம் தேதி இறங்கியது. குறிப்பிட்ட சில சூழல்களில் அது தனது இயக்கத்தை நிறுத்திக்கொள்ளும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நிலவின் வெப்பநிலை கடுமையாக அதிகரித்தது. 200 டிகிரி செல்சியசுக்கும் அதிகமானதால் ரேபிட்2 தனது இயக்கத்தை நிறுத்திக்கொண்டது.


வெப்பநிலை குறைந்ததால் நேற்று பகல் முதல் மீண்டும் இயங்க துவங்கியது.கடந்த வாரம் ரேபிட் 2 தனது செயல்பாட்டை நிறுத்திக்கொண்டது அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது. அது மீண்டும் இயங்க துவங்கியுள்ளதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இந்த ரோபோ அனுப்பும் படங்கள் மூலம் நிலவின் முழு உள்ளீடுகளும் தெரியவரும்.


நிலவில் தண்ணீர், மலைகள் உள்ளனவா என்று பல காலமாக உள்ள கேள்விகளுக்கு விடை கிடைக்கும். எனவே இந்த ரோபோவின் இயக்கத்தை உலக விஞ்ஞானிகள் அனைவரும் உற்று கவனித்து வருகின்றனர்.நிலவின் மறுபக்க ஆய்வு மூலம் விண்வெளி ஆய்வுகளில் முதலிடம் பெற சீனா முயற்சித்து வருகிறது. 2022ம் ஆண்டு விண்வெளி நிலையத்தையும் கட்டமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement