Advertisement

மது அருந்த தடை

மது அருந்த தடை விதித்ததால், துரித உணவகத்தை அடித்து நொறுக்கி, உரிமையாளரை தாக்கிய மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர்.

சென்னை வேளச்சேரி, 100 அடி சாலையில், ஆனந்த், 42, என்பவர், துரித உணவகம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, உணவருந்த சென்ற மூன்று பேர், கடையில் அமர்ந்து மது அருந்த முயன்றனர். இதற்கு, ஆனந்த் தடை விதித்ததால், தகராறு ஏற்பட்டது.ஆத்திரமடைந்த மூன்று பேரும் சேர்ந்து, கடையை அடித்து நொறுக்கி, ஆனந்தை சரமாரியாக தாக்கினர். வேளச்சேரி போலீசார், கிண்டி, காமராஜர் நகரைச் சேர்ந்த கார்த்திக், 23, வீரபாண்டி, 21, இசக்கிசெல்வம், 23, ஆகியோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement