Advertisement

ரேஷன் கடையில் ரூ.1,000 வாங்க அதிகாலையில் குவிந்த பயனாளிகள்

ஊத்துக்கோட்டை:பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழக அரசு அறிவித்த 1,000 ரூபாய் வழங்க நீதிமன்றம் தடை விதித்த நிலையில், நேற்று, விடியற்காலை முதல், பொதுமக்கள் ரேஷன் கடை முன் குவிந்தனர்.

ரேஷன் அட்டை உள்ளவர்களுக்கு, பொங்கல் பண்டிகையை ஒட்டி, பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, முந்திரி, 20 கிராம், திராட்சை 20 கிராம், ஏலக்காய், 5 கிராம், 1 கரும்பு துண்டு ஆகிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1,000 ரூபாய் பணம் வழங்கப்படும் என, அரசு அறிவித்தது.கடந்த, 7ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு, 1,000 ரூபாய் வழங்க தடை விதித்தது. இதனால், பணம் கிடைக்காதோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் நிலவியது.ஊத்துக்கோட்டை தாலுகாவில், 96 வருவாய் கிராமங்களில் உள்ள, 121 ரேஷன் கடைகளில், 42,711 அட்டை வைத்திருப்பவர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும். இதில், பெரும்பாலானவர்கள் வாங்கி விட்டனர்.

வாங்காதவர்கள் தங்களுக்கு கிடைக்குமா என, ஏங்கினர்.ஊத்துக்கோட்டையில் உள்ள ஒரு ரேஷன் கடையில், பொதுமக்கள் காலை, 5:00 மணிக்கே குவிந்தனர். காலை, 8:00 மணிக்கு விற்பனையாளர் வந்து, 'டோக்கன்' வழங்கி, பின், தகுதியான ரேஷன் அட்டைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பணம் வழங்கப்பட்டது. இதேபோல் பெரும்பாலான ரேஷன் கடைகளில், காலை முதல் கூட்டம் காத்திருந்தது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • sivakumar - Qin Huang Dao,சீனா

    இதுக்கெல்லாம் கால் வலிக்காது, பசி எடுக்காது, மயக்கம் வராது. demonitisation வரிசையில் நின்றால் எல்லாம் வரும். ஓசிக்காக விலை போன தமிழன்

  • Ram - Pollachi

    அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Advertisement