Advertisement

புகைப்படத்தில் மாற்றம் குற்றவாளிக்கு 7 ஆண்டு

தாகா:வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் நம் நாட்டின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் புகைப்படங்களில் மாற்றம் செய்து வெளியிட்ட நபருக்கு, ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அண்டை நாடான, வங்க தேசத்தில், டான்கெய்ல் மாவட்டத்தைச் சேர்ந்தவன், மொனிர் ஹுசைன். இவன், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் புகைப்படங்களை, 'போட்டோஷாப்' மூலம் மாற்றம் செய்து, மற்றவர்களுக்கு அனுப்பியதற்காக கைது செய்யப்பட்டான்.

நேற்று முன்தினம், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குற்றவாளி மொனிருக்கு, ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து, வங்கதேச, 'சைபர்' தீர்ப்பாய நீதிபதி உத்தரவிட்டார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement