Advertisement

தியேட்டரில் திருமணம்: ரசிகர்கள் உற்சாகம்

தஞ்சாவூர் : ரஜினி நடித்த பேட்ட படம் வெளியான தஞ்சாவூர் தியேட்டரில், ரஜினி மக்கள் மன்றம் சார்பில், ஒரு ஜோடிக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது.

ரஜினி நடித்த பேட்ட திரைப்படம், தஞ்சாவூரில், சாந்தி மற்றும் ஜூபிடர் தியோட்டர்களில் நேற்று வெளியானது. காலை, 7:30 மணிக்கே ரசிகர்கள் குவிந்தனர். ரஜினி மக்கள் மன்றம் சார்பில், திருக்காட்டுபள்ளியைச் சேர்ந்த ஜோதிராமன் - உஷாராணி ஜோடிக்கு திருமணம் செய்து வைக்க, முடிவு செய்தனர்.

நேற்று காலை, மணமக்கள், உறவினர்களுடன், படம் வெளியான சாந்தி தியேட்டருக்கு வந்தனர். தாலியை ரசிகர்கள் எடுத்து கொடுத்து, திருமணம் முடித்து வைத்தனர். மேலும், 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களும் வழங்கினர். பின், மணமக்கள், ரசிகர்களுடன் பேட்ட படம் பார்த்தனர்.

மணமக்கள் கூறுகையில், 'ரஜினி பெயரில், எந்த செலவும் இல்லாமல், எங்களுக்கு திருமணம் நடத்தி வைத்துள்ளனர். எங்களைப் பொறுத்தவரை, ரஜினி தான் கடவுள். எனவே, கோவிலுக்கு செல்லவில்லை. பேட்ட படம் பார்க்கிறோம்' என்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (7)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    இதில் பெருமை என்ன வாழுகிறது

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    ஆன்மிக அரசியல். பாஜக நண்பர்களே, நாளைய பாஜக வின் நம்பிக்கை தரம்.. பார்த்து எழுதுங்கோ.

  • Shan, Ngl -

    அப்போ எதுக்கு குத்து விளக்கேற்றி ஐயர வச்சு கல்யாணம் பண்ணீங்க? முட்டாள்தனத்தின் மொத்த உருவம். மத்த மாநிலங்களில் ‌சும்மா இல்ல தமிழன் கழுவி ஊத்துரது.

  • Shan - kuwait,குவைத்

    இந்தியா சீக்ரமவே வல்லரசு ஐயிடும்.முட்டாள் பயலுக.நடிக்கறவங்க கோடி கோடியா சம்பாரிக்கிறானுங்க.நீ உன் புழப்ப பாரு.அவங்க சம்பாரிக்கறது எல்லாம் முட்டாள் உன் காசுதான்.கவர்ன்மென்ட் கட்டவுட்டுக்கு பால் உத்தர முட்டா பயலுஎல்லாரையும் தூக்கி குண்ண்டாஸ்ல உள்ள போட்டு குமுறனும்.

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    அந்த ஒருத்தன்தான் லூசுன்னு பார்த்தா, ஒட்டு மொத்த கூட்டமும் லூசாவுள்ள இருக்குது.

Advertisement