Advertisement

பிளாஸ்டிக் நிறுவனங்களுக்கு கடன்; வங்கிகளுக்கு முதல்வர் கோரிக்கை

சென்னை: ''தமிழகத்தில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவற்றை தயாரித்த நிறுவனங்களுக்கு, வேறு தொழில் துவங்க, வங்கிகள் கடன் வழங்க வேண்டும்,'' என, முதல்வர் பழனி சாமி வலியுறுத்தினார்.


பசுமை புரட்சி:
'நபார்டு' எனும், தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியின் சார்பில், மாநில வங்கி கடன் கருத்தரங்கம், சென்னையில், நேற்று நடந்தது. இந்த கருத்தரங்கை துவக்கி வைத்து, முதல்வர் பழனிசாமி பேசியதாவது: தமிழகத்தில், இரண்டாவது பசுமை புரட்சி ஏற்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை கராணமாக, ஐந்து முறை, 100 லட்சம் டன் உற்பத்தியை கடந்து, மத்திய அரசின், 'கிரிஷி கர்மான்' விருதை, தமிழக அரசு, நான்கு முறை பெற்றுள்ளது.பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில், 2018 - 19ம் ஆண்டில், இதுவரை, 16 லட்சத்து, 39 ஆயிரம் விவசாயிகள் பதிவு செய்து உள்ளனர். கடந்த ஆண்டை விட, இரண்டு லட்சத்து, 41 ஆயிரம் விவசாயிகள் கூடுதலாக, இதில் பதிவு செய்துள்ளனர்.


வினியோக தொடர் மேலாண்மை திட்டத்தின் கீழ், 10 மாவட்டங்களில், 1,720 கிராமங்களில், 495 சேகரிப்பு மையங்களும், 31 பிரதான பதனிடும் அலகுகளும், 34 பிரதான சந்தைகளும், 398 கோடியே, 75 லட்சம் ரூபாயில், நபார்டு வங்கி நிதி உதவியுடன் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், 10 மாவட்டங்களில், பெரிய மற்றும் மிகப்பெரிய உணவு பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன.


இந்த கருத்தரங்கில், 2019 - 20ம் ஆண்டில், தமிழக மக்களுக்கு, 2.22 லட்சம் கோடி ரூபாய், வங்கி கடன் வழங்க, நபார்டு வங்கி மதிப்பீடு செய்து, அறிக்கை அளித்து உள்ளது. இந்த தொகையில், 1.46 லட்சம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கும், வேளாண் சார்ந்த தொழில்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டில், தமிழகத்தில் உள்ள, 2.72 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு, 12 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க, வங்கிகள் திட்டமிட்டுள்ளன.வெண்மை புரட்சி:
தமிழகத்தில், வெண்மை புரட்சி ஏற்படுத்த, ஐந்து மாவட்ட, பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு, 500 கோடி ரூபாய் கடன் உதவியை, தேசிய பால் வளர்ச்சி கழகத்தின் வழியாக, நபார்டு வங்கி வழங்க உள்ளது. ஒரு முறை பயன்படுத்த கூடிய, 14 பிளாஸ்டிக் பொருட்கள், தமிழகத்தில் தடை செய்யப்பட்டு உள்ளன. இதனால், மாற்று பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.


மாற்று பொருட்கள் தயாரிக்கும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, வங்கிகள் தாராளமாக நிதி உதவி வழங்க வேண்டும்.வேறு தொழில்மேலும், தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை, இதுவரை தயாரித்து வந்த தொழில் நிறுவனங்கள், வேறு தொழில் துவங்க, கடன் உதவி வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (12)

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  பிரச்சினை பிளாஸ்டிக்கில் இல்லை. மறுசுழற்சி, திடக்கழிவு மேலாண்மை செய்ய வக்கில்லாத நகராட்சி, குப்பை ஆட்சி இவைகளால் தான். இந்த புது சட்டம் ஒன்றும் கிழித்து விடப் போவதில்லை. இது போன்ற சட்டம் பலமுறை இதே கையாலாகாத அரசால் முன்பே போடப்பட்டிருந்தது என்ற உண்மை முட்டாள்களுக்கு மறந்து விட்டது.

 • Visu Iyer - chennai,இந்தியா

  பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள் அண்டை மாநிலத்தில் தொழில் இதே பிளாஸ்டிக் தொழில் தொடங்கி அந்த மாநிலத்தை வளர்க்கலாம். தமிழக வளர்ச்சியில் தான் நமது அமைச்சர்களுக்கு அக்கறை இல்லையே... அதனால் தொழில் வளர்ச்சி அண்டை மாநிலத்திற்கு போகலாமே..

 • ganapati sb - coimbatore,இந்தியா

  பிளாஸ்டிக் பை ஒழித்து மண்வளத்தை காப்பாற்றிய முதல்வருக்கு பாராட்டுக்கள்

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

   ஹா.. ஹா.. ஹா.. நல்ல காமெடி பண்றே நீ.. கூரையே இல்லாத "கல்வி நிறுவனத்துக்கு" ஆயிரம் கோடி கொடுத்த வள்ளல் பரம்பரையாச்சே நீ.. ஒன்னியே மாதிரி சரர்வாள் தான் இந்த முந்திரிகளுக்கு ஐ.ஏ.எஸ் ஆபிசர் ஆறதுக்கு தகுதியானவங்க. கோட்டாவில் சேர்ந்துக்கோ.

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  மனிதாபிமானம் உள்ள முதல்வர்....வாழ்த்துக்கள்...

 • smoorthy - bangalore,இந்தியா

  முதல்வர் வேண்டுகோள் விடுத்தது நல்ல செய்தி தான் / பிளாஸ்டிக் தொழிலை கை வேறு தொழில் செய்ய வருவோருக்கு வாங்கி கடன் பெருவர்க்கு ஏன் தமிழ் நாடு அரசு 50 % மானியம் கொடுக்க கூடாது / எதற்கோ கோடி கோடியாக செலவு செய்யும் அரசு தொழில் முனைவோருக்கு மானியம் ஏன் கொடுக்க கூடாது /

 • ஆப்பு -

  ப்ளாஸ்டிக்கை எங்கே ஒழிச்சாங்க? இன்னிக்கிக் கூட மடிப்பாக்கத்தில் பார்சல் இட்லி, தோசைக்கு ப்ளாஸ்டிக் பாக்கெட்டில்தான் சட்னி, சாம்பார் குடுக்குறாங்க.

  • N.Kaliraj - VANIYAMBADI

   இங்குதான் ஆப்படிக்கவே நிறைய ஆட்கள் இருக்கின்றார்களே...

  • Gnanaprakasam - CHENNAI

   வண்டலூர் எல்லாம் பாத்திரம் மற்றும் கைப்பை - பயன் படுத்துகிறார்களால். இறைச்சி கரி வாங்குவர் கூட பாத்திரம் எடுத்து வருகிறார்கள்

 • jagan - Chennai,இந்தியா

  கட்சி காரன் தான் அதிகம் போல இந்த தயாரிப்பில்

 • Bhaskaran - Chennai,இந்தியா

  முதல்வரின் யோசனையை ஏற்று வங்கிகள் கடன்கொடுத்து உதவலாமே ,மல்லையா போன்றவர்களுக்குத்தான் கொடுப்பார்களா .

 • blocked user - blocked,மயோட்

  மறு சுழற்சி மூலம் பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி செய்யலாம்... தொழிற்சாலையில் பொறுப்புடன் உபயோகிக்கலாம்...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement