Advertisement

'ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ராணுவத்தில் வேலையில்லை'

புதுடில்லி: ''நம் ராணுவத்தில், ஓரினச்சேர்க்கையாளர்களை, ஒருபோதும் அனுமதிக்க முடியாது,'' என, ராணுவ தலைமை தளபதி, பிபின் ராவத் தெரிவித்து உள்ளார்.


ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
சட்டத்திற்கு உட்பட்டு தான், ராணுவம் இயங்கி வருகிறது. எனினும், தனிப்பட்ட சுதந்திரத்தை, ராணுவத்துக்கு, அரசியல் அமைப்பு சட்டம் வழங்கி உள்ளது. நம் ராணுவத்தில், ஓரினச்சேர்க்கையாளர்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.


சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் உள்ள சூழலை, நம் ராணுவம் மிகச் சிறப்பாக கையாள்கிறது; இதில், கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நிலைமையை, இன்னும் மேம்படுத்த வேண்டியது அவசியம்.



வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் உள்ள சூழலை, சிறப்பாக கையாள்கிறோம். ஜம்மு - காஷ்மீர் மாநில மக்கள், பயங்கரவாதிகளால் பாதிக்கப்படுகின்றனர். பயங்கரவாதத்தை கைவிட்டால் மட்டுமே, பேச்சு நடத்துவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4 + 2)

  • J.Isaac - bangalore,இந்தியா

    நேர்மையான பேச்சு . விரைவில் நீக்கப்படுவார்.

  • kulandhai Kannan -

    சுப்ரீம் கோர்ட்டுக்கு கோபம் வருமே??

  • sahayadhas - chennai,இந்தியா

    இவர்களை கொண்டு எதிரிகளை எளிதாக வீழ்த்தலாம்.

  • அன்பு - தஞ்சை,இந்தியா

    ராணுவத்தில் ஓரின சேர்க்கையை அனுமதிக்க முடியாது. இருந்தாலும் அமெரிக்காவை போன்று ராணுவத்தில் ஓரின சேர்க்கையை இருந்தால், சொல்லாதே, ராணுவமும் கேட்காது என்ற பாலிசி தான் தற்போதைக்கு சரியாக இருக்க முடியும். ஏனனில் சுப்ரிம் கோர்ட் மற்றும் பாராளுமன்றம் ஓரின சேர்க்கையை அங்கீகாரம் செய்து விட்டது. அப்படி இருக்கும்போது, ராணுவத்தில் அனுமதிக்க முடியாது என்ற இவரின் கூற்றுக்கு, யாராவது கோர்ட்டில் கேஸ் போடுவார்கள். அதற்கு இவர் பதில் சொல்ல நேரிடும்.

பயங்கரவாதத்துக்கு பாக்., ஆதரவு; ராணுவ தளபதி ராவத் எச்சரிக்கை (2)

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    புத்தியுள்ள இளைஞர்கள் இதில் ஈடுபடமாட்டார்கள்..

  • blocked user - blocked,மயோட்

    பயங்கரவாதத்துக்கு உதவும் நோக்கத்தில் 2G மூலம் பல்லாயிரம் கோடிகளை ஒப்பந்தம் மூலம் பெற்றுத்தந்த அண்ணல் இராஜா அவர்களை குற்றமற்றவர் என்று விடுவிக்கும் CBI நீதிமன்றம் இருக்கும் வரை இந்திய இராணுவம் போல எத்தனை இராணுவம் வந்தாலும் தீவிரவாதிகளை உருவாக்கி அனுப்ப பாக்கிகள் தயங்கமாட்டார்கள்... தீவிரவாதம் செய்ய கொடுக்கப்படும் நிதியை ஒருபொழுதும் நமது இராணுவத்தால் தடை செய்ய முடியாது... கல்லெறிய வரும் நிதியையே நம்மால் ஒன்றும் செய்யமுடியவில்லை...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement